மாந்தை கிழக்­கில் கடும் வறட்சி !!

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் நில­வும் கடு­மை­யான வறட்சி கார­ண­மா­க 298 ஏக்­கர் நெற்­செய்கை அழி­வ­டைந்­துள்­ள­து­டன் 98 விவ­சா­யி­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தின் மாந்தை கிழக்கு, நட்­டாங்­கண்­டல், எரு­வில் உழு­வ­னரி ஆகிய குளங்­க­ளில் நீர் வற்­றி­ய­தால் அவற்றை மையப்­ப­டுத்தி மேற்­கொள்­ளப்­பட்ட கால போக நெற்­செய்­கை­கள் அழி­வ­டைந்­துள்­ளன.

இது தொடர்­பில் பாண்­டி­யன் குளம் கம­நல சேவை நிலை­யத்­தின் அலு­வ­லர் தெரி­விக்­கை­யில், ‘பாண்­டி­யன் குளம் கம­ந­ல­சேவை நிலை­யத்­தின் கீழ் உள்ள சிறிய மற்­றும் நடுத்­தரக் குளங்­க­ளின் கீழான மானா­வாரி நிலங்­க­ளில் கால­போக நெற்­செய்­கை­க­ளில் பெரு­ம­ளவு ஏக்­கர் அழி­வ­டைந்­துள்­ளன.

இதில் நட்­டாங்­கண்­டல் குளத்­தின் கீழ் 119 ஏக்­கர் நெற்­செய்­கை­யும், எரு­வில் குளத்­தின் கீழ் 94 ஏக்­கர் நெற்­செய்­கை­யும் மற்­றும் உழு­வ­னரி குளத்­தின் கீழ் 85.5 ஏக்­கர் நெற்­செய்­கை­யு­மாக மொத்­தம் 298.5 ஏக்­கர் நெற்­செய்கை அழி­வ­டைந்­துள்­ள­து­டன், 98 விவ­சா­யி­கள் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர்’ என்று தெரி­வித்­தார்.

You might also like