முல்லைத்தீவில் காற்றுடன் கடும் மழை

முல்லைத்தீவு மாவட்டத்தில் நீண்ட நாள்களாக கடும் வரட்சி நிலவிவந்த நிலையில் கடும் காற்றுடன் கூடிய கடும் மழை பெய்துள்ளது. அங்கு தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர் என்று தெரியவருகின்றது.

காணாமல்ஆக்கப்பட்டோரின் உறவுகள் அமைத்துள்ள கூடாரம் காற்றுக்கும், மழைக்கும் ஈடுகொடுக்க முடியாத நிலையில் முழுமையாக சேதமடைந்தது என்றும், கொட்டு மழையிலும் மக்கள் தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.

கேப்பாபுலவு இராணுவ முகாமுக்கு முன்பாக கூடாரம் அமைத்து தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மக்களும் மழை காரணமாக சிரமங்களை எதிர்நோக்கியுள்ளனர்.

கடும் வரட்சியால் பல்வேறு நெருக்கடிக்குள்ளாகியிருந்த நிலையில் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

You might also like