நாடு எதனை நோக்கி நகர்கிறது!!

ஸ்… அப்­பாடா.. இப்­பத்­தான் நிம்­ம­தி­யா­யி­ருக்கு… ஒரு வழியா தப்­பித்­தோம்.. ஒரு­வேளை ஆட்சி மாறி­யி­ருந்­தால் நாங்­கள் தொலைந்­தோம். நல்­லாட்சி அரசு கவி­ழா­மல் தொடர்­வ­தால் பிழைத்­தோம்.’’ ஆம்.. இந்­தக் கவலை கந்­த­சா­மிக்கோ செல்­லை­யா­வுக்கோ வந்த கவ­லை­யல்ல… ஆனா­னப்­பட்ட அமெ­ரிக்­கா­வுக்­கும், ‘‘ இரும்பு மனி­தர் ’’ ஆட்சி செய்­யும் இந்­தி­யா­வுக்­கும் வந்த கவ­லை­தான்.

ஆயி­ரக்­க­ணக்­கான அணு­குண்­டு­கள், அவற்றை எந்த நேரத்­திலும் தாங்­கிச் சென்று தாக்­க­வல்ல ஏவு­க­ணை­கள், விதம்­வி­த­மான விமா­னங்­கள், போர்க்­கப்­பல்­கள் இவற்­றோடு எப்­போ­தும் மேசைக்­குக் கீழே ‘‘ பெரிய சுவிச் ’’ வைத்­தி­ருக்­கும் அமெ­ரிக்­கா­வும், இந்­தி­யா­வும் – சுண்­டைக்­காய் நாடான இலங்­கை­யில் நடந்த குப்பை அள்­ளும், தெரு விளக்­குப் போடும் ‘‘ சிறிய சுவிச் ’’ ஐ போடும் குட்­டித் தேர்­த­லின் முடி­வு­க­ளால் ஆடிப்­போய் விட்­ட­ன­வென்­றால் நாமும் இலங்­கை­யர் என்று பெரு­மைப்­ப­டா­மல் இருக்க முடி­யுமா என்ன?

உள்ளூராட்சித் தேர்தலில்
மகிந்த தரப்பின் எழுச்சி

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் தென்­ப­கு­தி­யில் அடித்த ‘‘ மகிந்த சுனாமி அல்­லது மொட்டு சுனாமி ’’இலங்­கை­யைத் தாண்டி இந்­தியா – அமெ­ரிக்கா உள்­ளிட்ட மேற்­கு­லக நாடு­க­ளை­யும் தாக்­கி­யுள்­ளது. மொட்டு ஒன்­றும் பாரம்­ப­ரி­யக் கட்­சியோ, மக்­கள் மத்­தி­யில் பரிட்­ச­ய­மான கட்­சி­யோ­அல்ல. நேற்­றுப் பெய்த மழைக்கு முளைத்த காளானே அந்­தக் கட்சி. முளைத்து மூன்று இலை­கூட விட இல்லை. (இரண்டு வரு­டங்­கள்­தான் ) அதற்­குள் ஐம்­பது, அறு­பது வரு­டம் பழ­மை­யான, மக்­க­ள் மத்தியில் ஊறிப்­போன தாய்க்­கட்­சி­கள் இரண்­டை­யும் மற்­றும் சில தசாப்­த­கால கட்­சி­க­ளை­யும் தூக்கி விளா­சி­விட்டு மேலெ­ழுந்­துள்­ளது சிறிலங்கா பொது­மக்­கள் முன்­னணி என்ற கட்சி.

இந்­தக் கட்­சி­யின் தலை­வர்­கள், ஆரம்ப கர்த்­தாக்­கள் அனு­ப­வ­மிக்க, தந்­தி­ரம்­மிக்க மற்­றும் துணிச்­ச­லா­ன­வர்­கள் என்­பது நாட­றிந்த உண்மை. இவர்­க­ளின் சின்­னம் கூட பெரும்­பான்­மை­யின மக்­க­ளின் மன­தில் இல­கு­வில் பதிந்­து­வி­டக் கூடி­யது. நாளாந்­தப் பிரார்த்­த­னை­க­ளின்­போது பெளத்­தர்­கள் தவறாமல் விகாரைகளுக்கு எடுத்­துச் செல்­லும் தாம­ரை­மொட்டு, தாம­ரைப் பூவைக் கொண்டு அமைந்­தமை – அவர்­க­ளின் பெரும் அஸ்­தி­ர­மா­கும். எதிர்க்­கட்­சி­கள் கூட தமது ‘‘ கை ’’களில் தாமரை மொட்டை ஏந்­து­வதை தவிர்க்க இய­லாத வகை­யில் சின்­ன­மாக தாமரை மொட்டைப் பெற்­ற­மை­கூட நன்கு திட்­ட­மிட்ட சாதுரி ய­மான தெரி­வா­கும்.

பொதுமக்கள் முன்னணிக் கு
எதிர்பாராத வெற்றியே இது

பொது­வா­கவே இன­வா­தச் சிந்­தனை அடிப்­ப­டை­யில்– இன்­னும் சொல்­லப் போனால், பௌத்த மத மேலா­திக்கச் சிந்­தனை அடிப்­ப­டை­யி­லான முன்­னாள் ஆட்­சி­யா­ளர்­க­ளின் குடும்ப ஆட்­சி­யின் தொடர்ச்­சி­யாக– ஏனைய கட்­சி­கள் சொந்­தம் கொள்ள முடி­யாத நிலையில் தாமரை மொட்­டுச் சின்­னத் து­டன் சிறிலங்கா பொதுமக்கள் முன்னணி தனது முத­லா­வது தேர்­த­லிலேயே சாதனை வெற்­றி­ படைத்துள்ளது.

தமிழ்­மக்­க­ளின் பெரும் சக்­தி­யாக உரு­வாகி– தான் சந்­தித்த அனைத்­துத் தேர்­தல்­க­ளி­லும் வடக்­குக் கிழக்­கிலே அமோக வெற்­றியை ஈட்­டிய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு– தமிழ் மக்­க­ளின் விமர்­ச­னங்­கள், ஒரு சாரா­ரின் அதிருப்தி, ஒரு சாரா­ரின் கடு­மை­யான எதிர்ப்பு என தனது அர­சி­யல் எதிர்­கா­லம் கேள்­விக்­குள்­ளா­வ­தைக் கண்­டும், கேட்­டும் உணர்ந்­த­போ­திலும்–­­த­மிழ் மக்­க­ளின் நீண்­ட­கா­லப் பிரச்சி னைக்கு ஒரு நிரந்­த­ரத் தீர்­வைப் பெற்­று­விட வேண்­டு­மென்ற ஒரே நோக்­கத்­திற்­காக பெரு­ம­ளவு விட்­டுக்­கொ­டுப்­புக்­களைச் செய்­தது. இலங்கை அரசைப் பெரும் ஆபத்­துக்­க­ளி­லி­ருந்து பல தட­வை­கள், பன்­னாட்­டுச் சமூ­கத்­தி­டம் இருந்து காப்­பாற்றி வந்த சம்­பந்­தர் தலை­மை­யி­லான தனது நேச சக்­தியை– சிங்­கள மக்­கள் மத்­தி­யில் நாட்­டைப்­பி­ரிக்­கும் சக்­தி­யாக அல்­லது தீய சக்­தி­யா­கப் பூதா­கா­ரப் ப­டுத்தி ‘‘ ஈழம்’’ உரு­வா­கி­வ­ரு­வ­தா­கப் பூச்­சாண்டி காட்டி பொது­மக்­கள் முன்­னணி இப்­பெ­ரு­வெற்­றியை பெற்­றது என்­ப­தும் மறுக்க முடி­யாத உண்மை.

என்­ன­தான் ஐ.தே.கட்சி, சுதந்­தி­ரக் கட்சி கூட்டு அர­சின் பல­வீ­னங்­கள் குறித்து விமர்­சிக்­கப்­பட்­டா ­லும், ‘‘ பிணை­முறி ஊழல் ’’, விலை­வாசி உயர்வு, வேலை­வாய்ப்­பின்மை என பல ஏற்­றுக் கொள்­ளக்­கூ­டிய பிரச்­ச­னை­கள் இருந்­தா­லும், இவை மிதக்­கும் வாக்­கு­கள் என்ற வகையைச் சேர்ந்­த­வையே! ஏனெ­னில், இரண்­டாண்­டு­க­ளே­யான கூட்­ட­ர­சி­டம் இவற்­றுக்கு முழு­மை­யான பெறு­பேறு எதிர்­பார்க்க முடி­யாது.

ஆக இன­வாத அடிப்­ப­டை­யில்– கிரா­மப்­புற மக்­க­ளின் உணர்­வு­க­ளைத் தூண்­டிப் பெற்ற வாக்­கு­களே அடிப்­படை – அத்­தி­பா­ரத்தை இட்­டுக் கொடுக்க, மேற்­கூ­றிய வாழ்­வா­தா­ரப் பிரச்­ச­னை ­க­ளு­டன், புதிய ஊழல் குற்­றச்­சாட்­டுக்­களும் நடு­நிலை வாக்­கா­ளர்­களை தடு­மா­றச் செய்து, எவரும் எதிர்­பா­ராத வித­மான வெற்­றியை மகிந்­த­வின் பொது­மக்­கள் முன்­னணி தன­தாக்­கிக் கொண்­டது என்­பதே உண்மை.

இனவாதத்தைத் தூண்ட
எல்லாக் கட்சிகளும் முயன்றால்
முடிவு என்னவாகும்?

ஒரு புறம் ஆட்­சிக்கு வரும் சகல கட்­சி­க­ளும் நுணுக்­க­மாக, வௌித் தெரி­யா­மல் தமது ‘பொக்­கற்­றுக்­களை கன­தி­யாக்­கிக் கொள்­வது வழக்­கம் என்ற எழு­தாத விதி, மற்­றும் மக்­க­ளின் தேவை­கள் புறக்­க­ணிக்­கப்­ப­டு­வது என்­பவை ஏதோ ஒரு வகை­யில் சரி­செய்­யப்­ப­டக்­கூ­டும். ஆனால் இன­வாத, மத­வாதச் சிந்­த­னைக்­குத் தீனி போட்டால், அத­னால் பெரும் வெற்­றி­கள் கிடைக்­கும் என்­பதை மற்­றக் கட்­சி­கள் பின்­பற்ற முயன்­றால் ‘‘ தாய் எட்­டடி பாய்ந்­தால் குட்டி பதி­னாறு அடி பாயும் ’’ என்­பது போல பத­வி­ ஆசை, அதி­கா­ர­மோ­கம் கண்ணை மறைக்க– இன­வா­தத்­தைக் கைவிட்­ட­வர்­க­ளும், நீறு­பூத்த நெருப்­பாக ஒதுங்­கி­யி­ருப்­ப­வர்­க­ளும் ‘‘பழைய குருடி கத­வைத் திற­வடி’’ என்று இனங்­கள் மத்­தி­யில் குரோ­தங்­களை தோற்­று­வித்து மீண்­டும் நாட்டை அழி­வுப்­பா­தைக்கு திருப்பி விடா­திருக்கச் செய்து இலங்­கை­யர்­களை கட­வுள்­தான் காப்­பாற்ற வேண்­டும்.

You might also like