மன்­னார் மாவட்ட மேல­திக செய­லராக குண­பா­லன் நிய­ம­னம்

கரைது­றைப்­பற்று பிர­தேச செய­லர் சிவ­பா­லன் குண­பா­லன் மன்­னார் மாவட்ட மேல­திக மாவட்­டச் செய­ல­ராக நிய­மிக்­கப்­பட்­டுள்­ளார். இன்று அவர் தனது கட­மை­க­ளைப் பொறுப்­பேற்­பார் என்று தெரி­விக்­கப்­பட்­டது.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தைப் பிறப்­பி­ட­மா­க­வும் புதுக்­கு­டி­யி­ருப்பு மத்­திய கல்­லூ­ரி­யின் பழைய மாண­வ­னு­மான சி.குண­பா­லன் யாழ்ப்­பா­ணப் பல்­க­லைக்­க­ழக கலை­மா­ணிப் பட்­ட­தாரி.

இலங்கை நிர்­வாக சேவை­யில் 2004ஆம் ஆண்டு வவு­னியா மாவட்ட உத­வித் தொழில் ஆணை­யா­ள­ராக பணி­யேற்­றார். 2008ஆம் ஆண்டு முதல் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை வடக்கு மாகாண உத­வித் தொழில் ஆணை­யா­ள­ரா­கப் பணி­யாற்­றி­னார்.

இத­னைத் தொடர்ந்து 2010ஆம் ஆண்டு டிசெம்­பர் மாதம் முதல் 2016ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி வரை முல்­லைத்­தீவு மாவட்­டம் துணுக்­காய் பிர­தேச செய­லா­ள­ரா­கப் பணி­பு­ரிந்­தார். 2016ஆம் ஆண்டு மார்ச் 7ஆம் திகதி முதல் நேற்­று­வரை கரைது­யைப்­பற்று பிர­தேச செய­லா­ள­ரா­கப் பணி­பு­ரிந்­தமை குறிப்­பி­டத்தக்­கது.

You might also like