கூட்டரசின் ஆட்சி தொடர்வதே மேற்குலக நாடுகளின் அவா

பிரித்­தா­னி­யர்­கள் 70 வரு­டங்­க­ளுக்கு முன்­னர் எங்­க­ளுக்கு வழங்கி விட்­டுப் போன சுதந்­தி­ரம், எங்­க­ளால் முறை­யா­கக் கையா­ளப்­ப­டா­மை­யி­னால், உருக்­கு­லைந்து, அதன் விளிம்புக்கே வந்­து­விட்­டது. அத்­து­டன் வௌ்ளையர்­கள் வெளியே­று­முன்­னரே, சில தமிழ் அர­சி­யல்­வா­தி­கள், சிங்­கள அரசு என்ற பிரி­வி­னைக் குரலை எழுப்­பத் தொடங்­கி­விட்­டார்­கள். வடக்­கி­லும், கிழக்­கி­ லும் பயங்­க­ர­வா­தம் தலை­யெ­டுக்­கக் கார­ணம், நிச்­ச­ய­மாக தமிழ் அர­சி­யல் தலை­வர்­க­ளின் தவ­றான வழி­ந­டத்­தலே. மேலும், இந்­தியா, தனது அர­சி­யல் ஆதா­யத்­துக்­கா­க­வும், பௌதீக நல­நோக்­குக் கார­ண­மா­க­வும் இவர்­களை ஆத­ரித்­தது. நாங்­க­ளும் கூட அவர்­க­ளு­டன் ஒத்­துப் பாடி­னோம்.

அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­திய உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள்

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் குறித்த முன் நட­வ­டிக்­கை­கள் ஆரம்­ப­மா­ன­வு­ட­னேயே கூட்டு அர­சின் இரண்டு தரப்­புக்­க­ளுக்­கு­மி­டை­யி­லான உற­வில் விரி­சல் ஆரம்­பித்து, அந்த விரி­சல் நாள­டை­வில் மேலும் பெரிதாக விரி­வ­டை­யத் தொடங்­கி­யது. இரண்டு கட்­சி­க­ளி­ன­தும் உயர் தலை­மை­கள் இரண்­டுமே, ஒரு­வர் மீது மற்­ற­வர் அவ­தூறு வெடி குண்­டு­க­ ளால் தாக்­கு­தல் தொடங்­கி­னார்கள். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும், சுதந்­தி­ரக் கட்­சி­யும் தாங்­க­ளா­கவே தங்­களை இழி­வு­ப­டுத்­திக் கொண்டு விட்­ட­தால், போரை வெற்றி கொண்ட வீர­ரான முன்­னாள் அரச தலை­வர் மகிந்த, பெரி­தாக எதை­யும் அலட்­டிக் கொள்ளா­ம­லேயே வெற்­றிப் பாதை­யில் பய­ணித்­தார்.

இந்த இரண்டு கட்­சி­க­ளி­ன­தும், இரண்­டாம் மட்­டத் தலை­வர்­கள், இந்த அர­சின் உள்­ள­கப் பூசல் கார­ண­மாக மகிந்­தவே வெற்­றியை நோக்க।ி நகர்­வார் என்­பதை உணர்ந்து, இந்த உள்­ள­கப்பூசலை நிறுத்த முயன்­றார்­கள்.
ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பிர­பல அர­சி­யல்­வா­தி­க­ளில் ஒரு­வ­ரான லக்ஸ்­மன் கிரி­யெல்­ல ­வின் எதிர்­பார்ப்­பாக இருந்­தது, இந்­தப் பழைய காத­லர்­கள் இரு­வ­ரும்– மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும் ரணில் விக்­கி­ரமசிங்­க­ வும்– தேர்­த­லின் பின்­னர் ஒன்று சேர்­வார்­கள் என்­பதே.

மைத்­தி­ரி­பால மற்­றும் ரணில் ஆகிய இரு­வ­ருக்­கு­மி­டை­யி­லான இந்த மோதல்­கள் பார­தூ­ர­மான ஒன்­றல்ல என ‘எலிய’ போன்ற தேசிய இயக்­கங்­க­ளும், கூட்டு எதி­ர­ணி­யி­ன­ரும் கூறிக்­கொண்டு தானி­ருந்­தார்­கள். மட­கொட அபே­திஸ்ஸ தேரர் இது பற்­றிக் குறிப்­பி­டு­கை­ யில், மைத்­தி­ரி­யும் ரணி­லும், வாடகை வீட்­டில் குடி­யி­ருக்­கும் கண­வ­னும் மனை­வி­யும், வீட்­டின் உரி­மை­யா­ளர் வாடகை வசூ­லிக்க வரும் போது, தம்­மி­டையே சண்­டை­யிட்­டுக் காட்­டிக் கொள்­வது போன்று நடிப்­பது, நாட்டை முடக்­கிப் போட்­டுள்ள பிரச்­சி­னை­களை மறைக் கவே எனக் கூறியிருந்தார். எது எப்­ப­டி­யா­யி­னும், தாமரை மொட்­டின் வெற்­றியை எவ­ருமே எதிர்­பார்க்­க­வில்லை என்­பதே உண்மை.

பசில் ராஜ­பக்ச, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­ வி­னது சுதந்­தி­ரக் கட்­சி­யு­ட­னான உறவை முறை­யா­கப் பேண­வில்லை என்ற கார­ணத்­தி­னால், கூட்டு எதி­ர­ணி­யின் விசு­வா­சி­கள் மன­மு­டைந்­தி­ருந்­த­னர். அர­சி­யல் விமர்­ச­கர்­க­ளது கருத்­துப்­படி, பசில் ராஜ­பக்ச, மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வு­டன் நெருங்­கிய உற­வைப் பேணா­மை­யி­னால், வாக்­கு­கள் பிரிந்து, எவ­ருமே பெரிய அள­வில் வெற்­றி­யீட்ட முடி­யாது என்ற நிலை­மை­தான் உரு­வா­கி­யி­ருந்­தது. உண்­மை­யி­லேயே பசில் ராஜ­பக்ச, மகிந்த ராஜ­பக்­ச­வுக்கு துரோ­கம் செய்து, ஐக்­கிய தேசி­யக் கட்­சியின் வெற்றிக்கு வழி­வ­குக்­கின்­றார் என்ற கருத்­தும் கூட்டு எதி­ர­ணி­யி­ன­ரால் முன்­வைக் கப்­பட்­டது.

பசில் ராஜ­பக்­ச­வி­னது விசித்­தி­ர­மான போக்கு

பசில் ராஜ­பக்ச ஒரு திற­மை­யான அர­சி­யல்­வாதி என்­ப­தால், அவ­ரால் பிர­ப­ல­மான அர­சி­யல்­வா­தி­யா­கத் திக­ழ­ மு­டி­ய­வில்லை. அவ­ரைப் பற்­றிய பெரிய மனக்­கு­றை­யான விட­யம், அவர் எல்­லா­வற்­றி­லும் மூக்கை நுழைப்­ப­தே­யா­கும். மகிந்­த­வின் ஆட்­சிக் காலத்­தில், மற்றெவ­ரை­யும் தர­குப்­ப­ணத்­தைப்­பெற அனு­ம­திக்­கா­மல் , தானே தர­குப் பணம் அனைத்­தை­யும் சுருட்­டிக் கொண்ட அவ­ரது செயற்­பாடு, கட்­சிக்­குள் அவ­ருக்கு நிறைய எதி­ரி­களை உரு­வாக்­கி­ வைத்தது.

பசி­லின் நட­வ­டிக்­கை­யால் அதி­ருப்தி அடைந்த சுதந்­தி­ரக் கட்சி உறுப்­பி­னர்­கள் அவ­ருக்கு ‘‘மிஸ்­டர் பத்து வீதம் ’’ என்ற பட்­டப்­பெ­யர் சூட்­டி­யி­ருந்­த­னர். இவர்­க­ளே­தான் மகிந்­த­வின் ஆட்­சிக் கவிழ்ப்­புக்கு வழி­வ­குத்­த­வர்­கள். மகிந்­த­வின் ஆட்­சி­யில் நாட்­டின் உட்­கட்­ட­மைப்பு அபி­வி­ருத்­திக்கு, மூல கார­ண­மாக இருந்­த­வர் பசில் ராஜ­பக்ச தான். சகல அபி­வி­ருத்­தித் திட்­டங்­க­ளை­யும் பசிலே வளைத்­துப் போட்­டுக் கொண்­டி­ருந்த போதி­லும், சுதந்­தி­ரக் கட்­சி­யின் இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், பசில் ராஜ­பக்­ச­வுக்கு நன்­றிக் கடன் பட்ட வர்­க­ளா­கவே இருந்­த­னர்.

ஏனைய மூத்த அர­சி­யல்­வா­தி­கள் இந்த இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு அர­சி­யல் நௌிவு சுளி­வு­க­ளைக் கற்­றுக் கொடுக்க முய­ல­வில்லை. அந்த இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அர­சி­ய­லில் மேலோங்­கி­வி­டு­வார்­கள் என்ற அச்­சம் தான் அதற்­குக் கார­ணம். ஆனால் பசில் இந்த இளம் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளுக்கு சக­ல­வித உத­வி­க­ளை­யும் செய்து கொடுத்­த­து­டன், அவர்­க­ளு­டைய தொகு­தி­க­ளி­லும் அபி­வி­ருத்தி நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்து அவர்­க­ளு­டைய வெற்­றிக்கு வழி­வ­குத்­துக் கொடுத்­தார். இந்த நிலை­யில்­தான் பசில் பரி­தா­பத்­திற்­கு­ரி­ய­வ­ராகி அவ­ரது நேர்மை கேள்­விக்­கு­றி­யா­கி­யுள்­ளது.

குழப்­ப­முற்ற நிலை­யி­லும் கூட்­டைத் தொடர்ந்த மைத்­தி­ரி­பா­ல­வும் ரணி­லும்
எதிர்­வ­ரும் இரண்டு ஆண்­டு­க­ளுக்­குள் நடக்­க­வி­ருக்­கும் மாகா­ண­ச­பை­க­ளுக்­கான தேர்­த­லைத் தொடர்ந்து, அரச தலை­வர் பத­விக்­கான தேர்­தல் மற்­றும் நாடா­ளு­மன்­றத் தேர்­தல்­ஆ­கி­ய­வற்­றின் போது பசில் ராஜ­பக்­ச­வின் நேர்மை வௌிப்­ப­டுமா? என்­ப­தைப் பொறுத்­தி­ருந்­து­தான் பார்க்க வேண்­டும்.

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் மூன்று கட்­சி­க­ளுமே பெரு­வெற்றி பெறா­மல், ஐக்­கிய தேசி­யக் கட்சி படு தோல்­வி­யை­யும், சுதந்­தி­ரக் கட்சி பயங்­க­ரப் படு­தோல்­வி­யை­யும் சந்­திக்க நேர்ந்­தது. இத­னால் பழைய காத­லர்­க­ளான மைத்­தி­ரி­பா­லா­வும் ரணி­லும் குழப்­ப­ம­டைந்த மன­நி­லை­யி­லும், அரசியல் வாழ்க்­கை­யைத் தொட­ர­வேண்­டி­ய­தா­யிற்று.

அர­சி­யல் முக்­கி­யத்­து­வத்­தி­ னின்­றும் , ரணிலை ஒதுக்கி வைத்­த­தால், மக்­கள் மைத்­தி­ரி­பால சிறி­சே­னா­வுக்கு மிக மோச­மான தேர்­தல் தோல்­வியை வழங்­கி­யி­ருந்­த­னர். கடந்த ஒன்­றரை வாரங்­கள் ரணி­லைத் தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து வௌியேற்­றி­விட அரச தலை­வர் மைத்­திரி முயற்­சிப்­ப­தும், ரணில் வெகு சாதா­ர­ண­மாக அதனை மறுதலிப்பதுமாகவே கழிந்­தன. உண்­மை­யில் அது ஒரு நல்ல பொழுது போக்­கா­கவே தோன்­றி­யது.

இடம்­பெற்ற உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் சுதந்­தி­ரக் கட்சி, ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யை­விட குறை­வான வாக்­கு­க­ளையே பெற்­றி­ருந்த போதி­லும், ஐக்­கிய தேசி­யக் கட்சி சிறி­சே­னா­வைப் பதவி வில­கு­மாறு ஒரு­போ­தும் கூறி­ய­ தில்லை. ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யி­னர்­தான் இரண்­டா­கப் பிரிந்து ஒரு குழு­வி­னர் ரணி­லைப் பதவி வில­கும்­படி வற்­பு­றுத்த, மற்­றைய குழு­வி­னர் அவ­ரைத் தலைமை அமைச்­சர் பத­வி­யைத் தொட­ரு­மாறு வலியு­றுத்­தி­னர்.

தலைமை அமைச்­ச­ராக
கரு ஜய­சூ­ரி­யவை அல்­லது
சஜித் பிரே­ம­தா­சவை
நிய­மிக்க யோசனை முன்­வைப்பு

ரணில் வௌியேற்­றப்­பட வேண்­டு­மென்ற குழு­வில் கலா­நிதி ஹர।்ச டி சில்வா போன்­ற­வர்­கள் இருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. இந்த ஹர்ச டி சில்வா தான் முன்­னைய அர­சின் பொரு­ளா­தா­ரக் கொள்­கை­களை மோச­மா­ன­வை­க­ளா­கக் காட்­டு­வ­தற்­காக நாட்­டின் அபி­வி­ருத்திக் கட்­ட­மைப்­பு­க­ளுக்கு முன்­னைய அர­சுக்கு நிதி­யு­தவி வழங்­கிய சீனா­வைக் கடு­மை­யாக சாடும் அள­வுக்­குச் செயற்­பட்­ட­வ­ரா­வார். ஒரு நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் என்­ப­தை­விட, சிறந்த ஒரு பொரு­ளா­தார நிபு­ணர் என்ற கோணத்­தி­லேயே அவ­ரது கருத்து பல­ரா­லும் அக்­க­றை­யா­கச் செவி­ம­டுக்­கப்பட்­டன. ஆனால், அதி­கா­ரம் கைக்கு வந்­த­வு­ட­னே, அவ­ரது போக்­குத் தலை­கீ­ழாக மாறி­விட்­டது.

அவர் எதிர்க் கட்­சி­யில் இருந்த சம­யம் எங்கே தவறு நடந்­தது என்­பது குறித்து விமர்­சிக்­க வில்லை. இந்த அர­சில் அவர் பத­வி­யி­லி­ருந்த காலம்­மு­ழு­வ­தும் கண்­களை மூடிக்­கொண்டு செயற்­பட்­டி­ருக்­கி­றார். அதே சம­யம் ரணிலை தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து வௌியேற்ற வேண்­டு­மென விரும்­பிய ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் ஒரு தரப்­பி­னர், தலைமை அமைச்­சர் பத­விக்கு பொறுத்­த­மா­ன­வர்­க­ளாக இருக்­கக்­கூ­டிய இரண்டு பேரை அணு­கி­யுள்­ள­னர். கரு ஜய சூரி­ய­வும், சஜித் பிரே­ம­தா­ச­வுமே அந்த இரண்டு பேரு­மா­வர்.இவர்­க­ளில் கரு ஜய சூரிய நாடா­ளு­மன்ற வர­லாற்­றில் நாட்­டுப்­பற்­றுள்ள, நேர்­மை­யா­ன­தொரு சபா­நா­ய­கர் என்று பெயர் பதித்­த­வர்.

பாகு­பாடு இல்­லா­மல் கட­மை­யாற்­றும் கரு ஜய சூரிய எதை­யுமே வௌிப்­ப­டை­யா­கக் கதைப்­ப­வர். போர் இடம் பெற்ற கால­கட்­டத்­தில் அவ­ரது அறி­வு­ரை­கள் பெரும் வர­வேற்­பைப் பெற்­றன. அவர்­தன் சகாக்­க­ளு­டன் அப்­போது அதி­கா­ரத்­தி­லி­ருந்த கூட்டணி அர­சு­டன் இணைந்து ஆட்சி தொடர உத­வி­னார். நாட்­டில் போர் முடி­வுக்­குக் கொண்டு வரப்­பட்ட பின்­னரே அவர் மீண்­டும் ஐ.தே.கட்­சிக்­குத் திரும்­பி­னார்.

அந்­தக் காலத்­தில் கரு ஜய சூரிய ஐ.தே. கட்சியில் இருந்து ஒதுங்­கி­யி­ருந்­த­மைக்­கான கார­ணம் போரை முடி­வுக்­குக் கொண்­டு­வர ரணில் உதவ முன்­வ­ர­வில்லை என்­ப­து­தான். ஆனால் இன்று நிலமை மாறி­யுள்­ளது. சஜித் பிரே­ம­தாச கூட ஒரு காலத்­தில் ரணி­லுக்­குச் சவா­லாக இருந்­த­வர்­தான். ஆனால் இப்­போது அந்த நிலமை மாறி­விட்­டது. சஜித் பிரே­ம­தாச தன்­னு­டைய தொகு­தி­யின் மேம்­பாட்­டுக்­கா­கக் கடு­மை­யா­கப் பாடு­பட்­ட­வர். அவரை அந்த வழி­யி­லேயே போக விட்­டி­ருந்­தால் நாட்­டின் அரச தலை­வ­ரா­கும் வாய்ப்பு அவ­ருக்­குக் கிட்­டி­யி­ருக்­கும். ஆனால் அவர் திசை திருப்­பப்­பட்டு, மகிந்த ராஜ­பக்­ச­வைத் தீவி­ர­மாக எதிர்ப்­ப­தற்­கான வழி­வ­கை­களை ேமற்­கொள்ள அவர் ஏவப்­பட்­டார்.

சஜித் பிரே­ம­தா­சா­வின் தந்­தை­யா­ரான முன்­னாள் அரச தலை­வர் ரண­சிங்க பிரே­ம­தாச தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளு­டன் ஒரு உடன்­பாட்­டுக்கு வந்து நாட்டை நிர்­வ­கிக்க முயன்­றார். ஆனால் அவர் அவர்­க­ளா­லேயே கொல்­லப்­பட்­டார். மகிந்த ராஜ­பக்ச தான் கடை­சி­யாக தமி­ழீழ விடு­த­லைப் புலி­களை அழித்­த­வர். ஆனால் சஜித் பிரே­ம­தாச மகிந்த மீது பழி­சு­மத்­தி­விட்டு, மாவை சேனா­தி­ராஜா, விஜ­ய­கலா மகேஸ்­வ­ரன் ஆகி­யோ­ரு­ட­னான உற­வைத் தொடர்ந்­தார். மூத்த அர­சி­யல்­வா­தி­யான ஆனந்த சங்­கரி, மாவை சேனா­தி­ராஜா தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளால் உரு­வாக்­கப்­பட்­ட­வர் என்­பதை வலி­யு­றுத்­திக் கூறி­யுள்­ளார். மகேஸ்­வ­ரன் பகி­ரங்­க­மா­கப் பிர­பா­க­ர­ னைப் பாராட்டி அவ­ரு­டைய காலத்­தில் வாழ்க்கை சிறப்­பா­கவே இருந்­த­தா­கக் கூறி­யுள்­ளார்.

மேற்­கு­லக நாடு­க­ளது ஆத­ரவு
கூட்டரசுத் தரப்­பி­னர்­க­ளுக்கே

பகி­ரங்­க­மாக அல்­லாது அமெ­ரிக்­கத் தூது­வர் அதுல் கெசப், மற்­றும் இந்­தி­யா­வின் உயர் ஸ்தானி­கர் ஆகி­யோர் அண்­மைய அரச தலை­வர் – தலைமை அமைச்­சர் ஆகி­யோ­ரி­டை­யே­யான முரண்­பாட்­டின் போது, சிறி­சே­னா­வை­யும் ரணி­லை­யும் இணைத்து வைப்­ப­தில் பெரும் பங்­காற்­றி­னார்­கள். 25 வரு­டங்­கள் தொடர்ச்­சி­யா­கத் தேர்­தல்­க­ளில் தோல்­வி­க­ளைச் சந்­தித்த ரணில் விக்­கி­ரம சிங்க, தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து விலகத் தயா­ராக இல்லை.

கல்­விப் பொதுத்­த­ரா­த­ரப் பரீட்­சை­யின் தோல்­வி­யைக் கூடத் தாங்க முடி­யா­மல் தவ­றான முடி­வெ­டுத்­துத் தமது உயி­ரைப் போக்­கிக் கொள்­ளும் மாணவ சமூ­தா­யம் வாழும் மோச­மா­ன­தொரு நாட்­டின் தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருக்­கும் அவர், வாக்­கா­ளர்­க­ளின் பலத்தை நம்­பி­யி­ருக்­க­வில்லை. அவர் நம்­பி­யி­ருப்­ப­தெல்­லாம் மேற்­கு­லக நாடு­க­ளது பின்­புல ஆத­ர­வைத்­தான். ரணிலை தலைமை அமைச்­சர் பத­வி­யி­லி­ருந்து வௌியேற்­றச் சிறி­சேன எவ்­வ­ள­வு­தான் முயன்­றா­லும் மேற்­கு­லக நாடு­கள் அதனை ஒரு­போ­தும் அனு­ம­திக்­கப் போவ­தில்லை. எங்­கள் நாட்­டின் ஒற்­று­மை­யைச் சீர்­கு­லைத்து நாட்­டைத் துண்டு போடு­வ­து­தான் மேற்­கு­லக நாடு­க­ளது நோக்­கம்.

வடக்­கில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும், தெற்­கில் ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் சுதந்­தி­ரக் கட்­சி­யும்­தோல்­வி­ய­டைந்­த­மைக்­கான கார­ணம், இவர்­கள் மக்­க­ளின் அன்­றாட அடிப்­ப­டைத் தேவை­க­ளைப் பற்றிச் சிந்­திக்­கா­மல், அவர்­க­ளுக்­கான தொழில்­வாய்ப்புக்களை ஏற்­ப­டுத்­திக் கொடுப்­பது குறித்து அக்­கறை கொள்­ளா­மல், பெரு­கி­வ­ரும் போதைப் பொருள் பாவ­னை­யைக் கட்­டுப்­ப­டுத்த முயலாமல், வெறும் அர­ச­மைப்பு உரு­வாக்­கம், அதன் மாற்­றங்­கள் போன்ற மக்­க­ளுக்­குப் பெரி­தாக அக்­க­றை­யில்­லாத விடயங்­க­ளைப் பற்­றியே கூடு­தல் கவ­னம் செலுத்­தி­ய­மையே ஆகும். மேற்­கு­ல­க நாடுகள் மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் ரணில் விக்­கி­ரம சிங்­க­வின் அர­சி­யல் பந்­தத்தைப் பாது­காத்து விட்­டி­ருக்­க­ லாம். ஆனால் நாட்­டைப் பாது­காக்க நாங்­கள் ஒன்­றி­ணைந்து செயற்­பட்டாக வேண்­டும்.

You might also like