பாடசாலை சென்ற சிறுமி மாயம்!!

சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டிருந்த சிறுமி, பாடசாலை சென்று மீண்டும் இல்லத்துக்கு மீண்டும் திரும்பவில்லை. ஹூங்கம பிரதேசத்தைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

2016 ஆம் ஆண்டு தந்தையால் பாலியல் துர்நடத்தைக்கு உட்படுத்தப்பட்ட சிறுமி, நீதிமன்ற உத்தரவுக்கு அமைவாக காலி – கிதுலம்பிடிய பிரதேச சிறுவர் இல்லத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.

கடந்த 16 ஆம் திகதி கிதுலம்பிடிய சிறுவர் இல்லத்தில் இருந்து பாடசாலை சென்ற சிறுமி மீண்டும் இல்லத்துக்குத் திரும்பவில்லை என்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like