21 வயதுப் பெண் இளம் கோடீஸ்வரி!!

நோர்வேயைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரெஸ்சன் என்பவர் உலகின் மிக இளம் வயதுடைய பணக்காரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

2017 ஆம் ஆண்டுக்கான உலகப் பணக்காரர்கள் பட்டியலை ஹரன் குளோபல் நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதில் 68 நாடுகளைச் சேர்ந்த 2 ஆயிரத்து 694 கோடிஸ்வரர்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

அதில் இடம்பிடித்துள்ள மிக இளம் வயது பணக்காரர் நோர்வேயைச் சேர்ந்த அலெக்ஸாண்ட்ரா ஆண்ட்ரெஸ்சன் என்ற பெண். 21 வயதான இவரது சொத்து மதிப்பு 1.3 பில்லியன் அமெரிக்க டொலர்கள். இவரது சொத்தில் 42 வீதம் குடும்பச் சொத்து.

சுயமாகவே சம்பாதித்து  இந்தப் பட்டியலில் இடம்பிடித்த இளம் பணக்காரர் என்ற வகையில் அயர்லாந்தைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஜான் காலிசன் முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

You might also like