எமது இனத்­தின் சுய­மு­யற்­சியே எமது பலத்­தின் அடிப்­படை

”என்று தணி­யும் இந்த சுதந்­திர தாகம்….’’ என்ற பார­தி­யா­ரின் பாடல் வரி இன்­றும் தமிழ் மக்­கள் மத்­தி­யில் ஆழ வேரூன்­றிக் காணப்­ப­டு­கின்­றது. அதா­வது தமிழ் மக்­க­ளின் உடல் முழு வதும் குரு­தி­யு­டன் கலந்த தேசிய உணர்வு வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுக்­கொண்டே இருக்­கி­றது. சுய­நிர்­ணய உரி­மை­யையே எமது தமிழ் மக்­கள் இன்று எதிர்­பார்த்­துக் காத்­தி­ருக்­கி­றார்­கள்.

‘‘பல வேடிக்கை மனி­த­ரை­போல வீழ்­வே­னென்று நினைத்­தாயோ’’ என்ற பார­தி­யா­ரின் கூற்றே, தமிழ் மக்­க­ளின் இன்­றைய நிலை­யா­கும் ஏனெ­னில் தமிழ் மக்­க­ளின் ஆயு­தப் போராட்­டம் கார­ண­மாக சிங்­கள அர­சு­கள் தமிழ் இனத்­தின் மீது பய­பக்­தி வைத்­தி­ருந்­தன.ஆனால் இன்று அவை தமி­ழி­னத்தை ஏள­ன­மாகப் பார்க்­கின்­றன. இதற்கு எமது அர­சி­யல் தலை­வர்­க­ளின் சுய நலச் செயற்பாடு­க­ளும் கார­ண­மாக அமை­கின்­றது.

போலி வாழ்க்கை வாழப்
பழ­கி­ விட்­டுள்­ளோம்

‘‘எனது உதட்­டில் இருந்து உணர்ச்­சி­கள் வெளிப்­ப­டு­வ­தில்லை. உள்­ளத்­தில் இருந்தே உணர்ச்­சி­கள் ஊற்­றெ­டுக்­கின்­றன என்ற கூற்­றுக்கு முற்­றி­லும் எதிர்­மா­றாக, இன்­றைய கால­கட்­டத்­தில் எல்­லோ­ரு­டைய உத­டு­க­ளில் இருந்தே உணர்ச்­சி­கள் வெளிப்­ப­டுத்­தப்­ப­டு­கின்­ற­னவே தவிர, உள்­ளத்­தில் இருந்து இனத்­துக்­கான உண்­மை­யான உணர்ச்­சி­கள் வெளிப்­ப­டு­வ­தில்லை.இத­னால் தமி­ழி­னத்­தின் எதிர்­கா­லம், இருள் சூழ்ந்­த­தா­க­வும், வளர்ச்­சிப்­பாதை வெறுமை கொண்­ட­தா­க­வும், எழுச்சி நிலை ஏழ்­மை­யா­ன­தா­க­வும் காணப்­ப­டு­கின்­றது.

‘‘பாதை­யைத் தேடாதே; அதை நீ உரு­வாக்கு’’ என்று பிடல் காஸ்ரோ கூறி­ய­தற்­கொப்ப, எமது இளம் தலை முறை­யி­ன­ரும் புதிய பாதையை உரு­வாக்க வேண்­டும்; அந்தப் பா­தையை அறிவு வழி­யில் பிர­கா­ சப்படுத்த வேண்­டும்; அபி­வி­ருத்தி நோக்­கிய பய­ணத்தை மேற்­கொள்ள வேண்­டும்; இந்த இரண்­டை­யும் வளர்ச்­சி­ய­டையச் செய்­யும் உரிமை என்­பது எம்மை விட்டு ஒரு­போ­தும் வில­காது.

எமது பாரம்­ப­ரி­யங்­க­ளைத்
தொலைத்­து­விட்­டுள்­ளோம்

ஆனால் தமி­ழி­னம் கல்வி, ஒழுக்­கம், மொழி, பண்­பாடு, கலா­சா­ரம், கலை, பொரு­ளா­ தா­ரம் என்­ப­வற்­றை­யெல்­லாம் தொலைத்­து ­விட்டு தனித்­து­வம் அற்ற கலப்பு। முறை­யைப் பின்­பற்­றத் தொடங்­கி­யுள்­ளது. இதுவே இன்­றைய ஆட்­சி­யா­ளர்­க­ளின் எதிர்­பார்ப்­பும் ஆகும். இதனை உட­ன­டி­யாகக் கைவிட்டு, உல­க­ம­ய­மாக்­க­லுக்கு ஏற்ப எம்மை நாம் மாற்­றிக் கொண்­டா­லும் எமது இனத்­தின் தனித்­து­வம், வர­லாறு, தன்­மா­னம், முத­லீடு, கலை­கள், பாரம்­ப­ரி­யம் என்­ப­வற்­றைப் பாது­காத்து சுய­பொ­ரு­ளா­தா­ரத்தை ஊக்­கப்­ப­டுத்த வேண்­டும்.

அதா­வது ஒவ்­வொரு தமி­ழ­னும் உற்­பத்­தி­யா­ள­னாக மாற வேண்­டும். அதன் மூலம் தனி நபர் பொரு­ளா­தா­ரம் வளம் பெறும். இத­னால் இனம் வறுமை நிலை­யில் இருந்து மீட்­கப்­ப­டும்.

இன்று நாம் அரச வேலை வாய்ப்பை எதிர்­பார்த்தே, அதன் மீது அக்­கறை கொண்டே நிற்­கி­றோம். இத­னால் மத்­திய அரசின் அடி­வ­ரு­டி­க­ளாக எம்மை மாற்­றிக் கொள்ள வேண்­டிய சூழ் நிலைக்கு எம்மை அறி­யா­மலே நாம் தள்­ளப்­ப­டு­கி­றோம். இதே­போல அர­ச­மைப்பு ஒவ்­வொன்­றும் அதி­கார அடிப்­ப­டை­யில் மத்­திய அமைச்­சின் கைக­ளுக்­குள்­ளேயே முற்­று­மு­ழு­தாக அடக்­கப்­பட்டு விடு­கின்­றன. இத­னால் கட்­ட­டங்­களை மட்­டுமே எமது பிர­தே­சத்­தில் அபி­வி­ருத்­தி­யாக மக்­கள் பார்க்­கின்­ற­னர்.

சுய­பொ­ரு­ளா­தார முயற்சி குன்றி
சிங்­கள அர­சு­க­ளின் தய­வில் வாழப்
பழ­கிக் கொண்­டுள்­ளோம்

எமது விவ­சாய நிலங்­கள் பயிர்ச்­செய்­கைக்கு பதி­லாக கட்­ட­டங்­க­ளாக உரு­மாற்­றப்­ப­டு­கின்­றன. இத­னால் நிலம் மாச­டைந்து, சூழல் மாச­டை­வ­து­டன், எமது அடிப்­படை, எதிர்­கா­லம் என்­பவை சிதைக்­கப்­பட்­டுச் சின்­னா­பின்­ன­மாக்­கப்­பட்­டுச் சிந்­தனை இல்­லா­த­தொரு இன­மாக, ஆரோக்­கிய மற்­ற­தொரு இன­மாக, ஈழத் தமி­ழி­னத்தை மாற்­றி­வி­டு­வ­தற்கு இன்­றைய சிங்­கள ஆட்­சி­யா­ளர்­கள் திட்டமிட்டுச் செயற் ப­டு­கின்­ற­னர்.

இனப்­பி­ரச்­சினை ஆரம்­பித்த காலத்­தில் இருந்த பெரும்­பான்மை இன அர­சி­யல் தலை­வர்­க­ளால் அடக்கு முறை­கள், ஒடுக்கு முறை­கள் பிர­யோ­கிக்­கப்­பட்ட போதும், எதற்­கும் தமி­ழன் அஞ்­ச­வில்லை. பொரு­ளா­தார தடை­யை­யும் பிர­யோ­கித்து, அதி­லும் அத்­தி­யா­வ­சிய உண­வுப் பொருள்­களை வடக்கு, கிழக்­குக்கு அனுப்­பாது பஞ்­சத்தை ஏற்­ப­டுத்தி, ஈழத்­த­மி­ழி­னத்தை அடி­ப­ணிய வைக்­க­லாம் என எண்­ணி­ய­போ­தி­லும், அதை­யும் மீறி வாழ்ந்து காட்­டிய இனம் தமி­ழி­னம்.

ஏனெ­னில், விவ­சா­யத்­தின் மூலம் தமக்­குத் தேவை­யான ஆரோக்­கி­ய­மான உண­வு­வ­கை­களை உற்­பத்தி செய்து, அவற்­றின் மூலம் தமது அன்­றாட உண வுத் தேவையைப் பூர்த்தி செய்­த­து­டன் மிகு­தியை சந்­தைப்­ப­டுத்தியும் வந்­த­னர் எம்­ம­வர்­கள். இத­னால் மண்ணை மட்­டும் நம்­பி­வாழ்ந்­த­து­டன், இர­சா­ய­னப் பொருள்­க­ளுக்கு தடை­வி­திக்­கப்­பட்ட போதும், உள்­ளூர் உற்­பத்­தி­யான மாட்­டெரு, ஆட் டெரு, கூட்­டெரு என்­ப­வற் றைப் பயன்­ப­டுத்­தித் தமது விவ­சாய முயற்­சி­க­ளில் அமோக விளைச்­சலை பெற்­றுப் பய­ன­டைந்­த­னர் அவர்­கள்.

இத­னால் தொற்­றா­நோய்­க­ளுக்கு உட்­ப­டாது, அவர்­க­ளது ஆயுள்­கா­லம் பல­மாக, எமது சூழல் கூறு­க­ளான நிலம், நீர், வளி, ஒளி என்­பவைமாச­டை­யாது எம்­ம­வர்­க­ளால் பாது­காக்­கப்­பட்டு வந்­தது.

ஆனால் இன்று, எமது அடிப்­ப­டைக் கூறு­க­ளான நிலம், நீர், வளி, ஒலி என்­பவை பல்­வே­று­பட்ட கார­ணங்­க­ளி­னால் மாசாக்­கப்­பட்­டுள்­ளன. இந்த மாச­டை­த­லுக்கு சில அர­சி­யல்­வா­தி­க­ளும் சில அதி­கா­ரி­க­ளும் கார­ண­மாக அமை­கின்­ற­னர். எமது இனத்­தின் எதிர்­கா­லம் பாதிப்­ப­டை­யப் போவ­தைப் பற்­றிச் சிந்­திக்­காது அவர்­கள் செயற்­ப­டு­கின்­றார்­கள்.

போர்ச் சூழ­லில் கூட சமத்­து­வ­மாக வாழ்ந்த மக்­கள், இன்­றைய சமா­தா­னப் பின்­ன­ணி ­யில் சமத்­து­வம் அற்ற அடித்­தள மக்­க­ளாக உரு­வாக்­கம் பெற்று வரு­கின்­ற­னர். சாதி­யம் சத்­தம் இன்றி தலை­தூக்­கத் தொடங்­கு­கின்­றது. இத­னால், தேசி­யத்­துக்­குள் கட்­டுண்டு இருந்த எம்­ம­வர்­கள் பிள­வு­பட்டு வரு­கின்­ற­னர்.

இனத்­தின் பின்­ன­டை­வி­னின்­றும் மீட்­சி­பெற சுய­பொ­ரு­ளா­தார முயற்­சி­கள் ஊக்­கு­விக்­கப்­ப­டல் வேண்­டும்

சுய­பொ­ரு­ளா­தார நிலை தள்­ளா­டத் தொடங்­கி­விட்­டது. சுய­தொ­ழில் சுய நல­மா­கி­விட்­டது. உள்­ளூர் உற்­பத்தி உருக்­கு­லைந்து விட்­டது. இறக்­கு­மதி தமி­ழ­ரின் இறை­மை­யா­கி­விட்­டது.ஏற்­று­மதி ஏணி வைத்­தா­லும் எட்­டாத நிலை­யில் தென்­னி­லங்­கையை நம்­பி­வா­ழும் வாழ்க்கை முறைக்­குள் அமிழ்ந்து வரு­கின்­றோம்.

இத்­த­கைய, கால­கட்­டத்­தில், ஈழத் தமி­ழி­னம் தன்னை எப்­ப­டி­மாற்­றி­ய­மைக்­கப் போகின்­றது என்ற கேள்வி எல்­லோர் மன­தி­லும் எழுந்­தா­லும், அதனை நெறிப்­ப­டுத்தி செயற்­ப­டுத்­து­வ­தற்கு அர­ச­மைப்பு இடம் கொடுக்­க­வி்­லலை என்ற கருத்து நிலவி வரு­கின்றது. இருப்பினும், அத­னைத் தாண்டி புதிய வியூ­கங்­களை அமைத்து, புலம் பெயர் தமி­ழர்­க­ளின் உத­வி­யைப் பெற்று, சுய­பொ­ரு­ளா­தார நிலையை உரு­வாக்க நாம­னை­வ­ரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்­டும்.

You might also like