தென்­ப­கு­தி­யி­லி­ருந்து யானை வடக்­குக்கு கொண்­டு­ வ­ரப்­ப­டு­கின்­றது என்­பது வதந்தி!!

தென்­ப­கு­தி­யி­லி­ருந்து யானை­கள் வடக்­குக்கு கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றன என்­பது வதந்­தியே. அதில் எந்­த­வித உண்­மை­யும் இல்லை. என்று வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­கள அதி­கா­ரி­கள் தெரி­வித்­த­னர்.

முல்­லைத்­தீவு ஒட்­டு­சுட்­டான் பிர­தேச செய­ல­கப் பிரி­வின் கீழுள்ள கிரா­மங்­க­ளில் யானைத் தொல்­லை­கள் அதி­க­ரித்­துக் காணப்­ப­டும் கிரா­மங்­க­ளில் யானை வேலி­கள் அமைப்­பது தொடர்­பான முக்­கிய கலந்­து­ரை­யா­டல் பிர­தேச செய­லக மாநாட்டு மண்­ட­பத்­தில் நிர்­வாக உத்­தி­யோ­கத்­த­ரின் தலை­மை­யில் நேற்று நடை­பெற்­றது. அதன்­போதே இவ்­வாறு தெரி­விக்­கப்­பட்­டது.

இதில் வன­ஜீ­வ­ரா­சி­கள் திணைக்­கள அதி­கா­ரி­கள், வன­வ­ளப் பிரிவு அதி­கா­ரி­கள், கிராம மட்ட அமைப்­பி­னர், கிராம உத்­தி­யோ­கத்­தர்­கள் ஆகி­யோர் கலந்­து­கொண்டு தமது கருத்­துக்­களை வழங்­கி­னர்.

கலந்­து­ரை­யா­ட­லில், சமூ­க­மட்ட அமைப்­பின் பிர­தி­நிதி ஒரு­வர் ‘யானை­க­ளால் ஏற்­ப­டும் அழி­வு­க­ளைத் தடுப்­ப­தற்கு முத­லில் யானை­களை தென் பகு­தி­க­ளி­லி­ருந்து எமது பிர­தே­சங்­க­ ளுக்கு வாக­னங்­க­ளில் ஏற்றி­வந்து இறக்­கு­வதை நிறுத்­த­வேண்­டும். வீதி­யோ­ரங்­க­ளில் காணப்­ப­டும் யானை­க­ளும் ஊர்­ம­னை­க­ளுக்­குள் புகும் யானை­க­ளும் மக்­க­ளு­டன் பழக்­கப்­பட்ட யானை­கள்­போல் தம­து­பாட்­டில் நடந்து கொள்­கின்­றன. 2009ஆம் ஆண்டு இறுதிப் போர்­வரை எமது பிர­தே­சங்­க­ளில் எந்­த­வொரு யானை­யின் நட­மாட்­ட­மு­மில்லை’ எனத் தெரி­வித்­தார்.

அதற்குப் பதி­ல­ளித்த வன ஜீவ­ரா­சி­கள் திணைக்­கள அதி­காரி ‘‘யானை­கள் கொண்­டு­வ­ரப்­ப­டு­கின்­றன என்­பது வதந்தி. அவ்­வாறு நிகழ்ந்­தால் வாகன இலக்­கத்தை எம்­மி­டம் தாருங்­கள். எம்­மால் மக்­கள் குடி­யி­ருப்­புக்­களை மையப்­ப­டுத்தி கிரா­மத்­துக்கு ஆகக் கூடு­த­லாக 10 கிலோ மீற்றர் சுற்­றுக்கே யானை வேலி அமைக்க முடி­யும். இதி­லும் யானை வேலியை அமைப்­ப­தற்­கான மூலப்­பொ­ருள்­க ளை மட்­டுமே எம்­மால் வழங்க முடி­யும். வேலி அமைப்­ப­தற்­கான அனைத்து வேலை­க­ளும் மக்­க­ளின் பங்­க­ளிப்­பு­டன் நிறை­வேற்­ற­ வேண்­டும்’’ என அறி­வு­றுத்­தி­னார்.

இதற்கு சமூ­க­மட்­டப் பிர­தி­நி­தி­கள் கருத்­துத் தெரி­விக்­கை­யில் ‘‘முத்­தை­யன்­கட்டு குளத்­தின் கீழுள்ள கிரா­மங்­க­ளில் வசிக்­கும் மக்­கள் ஜீவ­னோ­பாய தொழி­லாக முழுக்க முழுக்க விவ­சா­யத்­தையே நம்­பி­யுள்­ள­னர்.

எனவே விவ­சாய நிலங்­க­ளை­யும் உள்­ள­டக்­கியே யானை வேலி அமைக்­கப்­பட வேண்­டும். அத்­து­டன் ஒவ்­வொரு கிரா­மத்­தி­லும் தனித்­த­னியே 10 கிலோ மீற்­றர் சுற்று வேலி அமைப்­பதை விடுத்து சின்­னச் சாளம்­பன் தட்­ட­ய­மலை, முத்­து­வி­நா­ய­ க­பு­ரம், முத்­தை­யன்­கட்டு, கன­க­ரத்­தி­ன­பு­ரம் ஆகிய விவ­சாய கிரா­மங்­களை மையப்­ப­டுத்தி எல்­லை­யோ­ர­மாக மின்­சார யானை வேலி அமைத்­தாலே யானை­க­ளால் ஏற்­ப­டுத்­தப்­ப­டும் பயி­ர­ழிவை தடுக்க முடி­யும் என ஏக­ம­ன­தான கருத்­தைத் தெரி­வித்­த­னர். கலந்­து­ரை­யா­ட­லின் இறு­தி­யில் விவ­சா­யி­ க­ளின் கோரிக்­கையை உயர் அதி­கா­ரி­க­ளின் கவ­னத்­துக்கு கொண்­டு­செல்­வ­தாக முடிவு எடுக்­கப்­பட்­டது.

You might also like