பொன்­னம்­ப­லம் மருத்­து­வ­ம­னை­யில் இருந்து வெளி­யே­றி­வ­ரும் படை­யி­னர்!

புதுக்­கு­டி­யி­ருப்பு பொன்­னம்­ப­லம் மருத்­து­ வ­மனை வளா­கத்தில் நிலை­கொண்­டி­ ருந்த படை­யி­னர் அங்­கி­ருந்து வெளி­யேறி வரு­கின்­ற­னர். முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் புதுக்­கு­டி­யி­ருப்­புப் பிர­தே­சத்­தில் அமைந்­துள்ள பொன்­னம்­ப­லம் மருத்­து­வ­ம­னை­யில் 68ஆவது படைப்­பி­ரி­வின் 2ஆவது படை­யி­னர் நிலை­ கொண்­டுள்­ள­னர்.

அவர்­கள் தற்­போது, கன­ரக ஊர்­தி­க­ளில் இர­வு­நே­ரங்­க­ளில் பொருள்­களை ஏற்றிச் செல்­கின்­ற­னர். அவர்­க­ளின் படை­மு­காம் கைவே­லிப் பகு­தி­யில் அமைக்­கப்­பட்­டுள்­ளது.

அங்கு பொருள்­க­ளைக் கொண்­டு­செல்­லும் பணி­கள் தொடர்ச்­சி­யாக நடை­பெற்று வரு­கின்­றன. எனவே வெகு­வி­ரை­வில் பொன்­னம்­ப­லம் மருத்­து­வ­ம­னைக்­குச் சொந்­த­மான காணி­கள் விடு­விக்­கப்­ப­டும் என மக்­கள் எதிர்­பார்க்­கின்­றார்­கள்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் மக்­க­ளுக்குச் சொந்­த­மான காணி­கள் விடு­விக்­கப்­ப­டா­மல் இருந்த நிலை­யில் கடந்த ஆண்டு மக்­கள் போராட்­டம் மேற்­கொண்­ட­னர். அதன்­போது மக்­க­ளின் காணி­கள் கட்­டம் கட்­ட­மாக விடு­விக்­கப்­ப­டும் என்று அறி­விக்­கப்­பட்­டது.

அத­ன­டிப்­ப­டை­யில் 32 பேருக்­குச் சொந்­த­மான 52.5 ஏக்­கர் காணி­யும், மற்­றும் ஒரு­வ­ருக்குச் சொந்­த­மான 23 பேர்ச் காணி­யு­மாக 52.5 ஏக்­கர் காணி­கள் படை­யி­ன­ரால் கட்­டம் கட்­ட­மாக கடந்த ஆண்டு விடு­விக்­கப்­பட்­டன. இன்­னும் 366.25 ஏக்­கர் காணி­க­ளில் படை­யி­னர் நிலை­கொண்­டுள்­ள­னர். இது தொடர்பில் பிரதேச மக்கள் தெரி வித்ததாவது:

‘புதுக்­கு­டி­யி­ருப்புப் பகு­தி­யில் நிலை­கொண்­டுள்ள 68ஆவது டிவி­சன் படை­யின் 2ஆவது பிரி­கேட் படை­யி­னர் மக்­க­ளின் வீடு­க­ளில் நிலை­ கொண்­டுள்­ளார்­கள். 20 மக்­க­ளுக்குச் சொந்­த­மான 11 ஏக்­கர் காணி இவ்­வாறு படை­யி­ன­ரால் கைய­கப்­ப­டுத்­தப்­பட்டு பயன்­ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது.

இவர்­க­ளிடம் உள்ள காணி­க­ளில் 150 வரை­யான தென்­னை­ம­ரங்­க­ளில் இருந்து மாதம் தோறும் ஒரு இலட்­சம் ரூபா­வுக்கு தேங்­கா­யைப் பறித்து படை­யி­னர் எங்­கள் கிராம வியா­பா­ரி­ க­ளுக்கே விற்­பனை செய்­து­வ­ரு­கின்­றார்­கள். கடந்த 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் 4ஆம் திகதி இந்த மக்­க­ளுக்­குச் செந்­த­மான 7.75 ஏக்­கர் காணி­கள் விடு­விக்­கப்­பட்­டன.

மீதம் 11 ஏக்­கர் காணி­கள் மூன்று மாத காலத்­துக்­குள் விடு­விக்­கப்­ப­டும் என்று அரச அதி­கா­ரி­கள் வாக்­கு­றுதி அளித்­த­னர். ஆனால் இது­வரை 11 மாதங்­கள் கடந்­து­விட்டன இன்­னும் எங்­கள் காணி­கள் விடு­விக்­கப்­ப­ட­வில்லை. அரச அதி­கா­ரி­கள் சொல்­லும் வாக்­கு­று­தி­க­ளும் காற்­றில் பறந்து விட்­டன.

ஆனால் எங்­கள் வாழ் இடத்­தில் உள்ள வரு­மா­னங்­களை தேங்­காய், மாங்­காய், வாழை, பலா உள்­ளிட்­ட­வை­களை படை­யி­னர் பறித்து தங்­கள் தேவை­க­ளுக்­காக விற்­பனை செய்­து­வ­ரு­கின்­றார்­கள். இது கடந்த 8 ஆண்­டு­க­ளாக தொடர்ந்து கொண்டே செல்­கின்­றது. நல்­லாட்சி அரசு என்று நம்­பித்­தான் நாங்­கள் வாக்­குகளை அள்ளி இறைத்­தோம். ஆனால் எங்­க­ளுக்குக் கொடுத்த வாக்­கு­று­தி­களை காப்­பாற்றத் தவ­றி­விட்­டார்­கள்.’ என்று காணி உரி­மை­யா­ளர்­கள் வருத்­தம் தெரி­வித்­த­னர்.

You might also like