பல்லாயிரக்கணக்கான மக்களுடன் பாலைதீவு திருவிழா

பாலைதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா பல்லாயிரக்கணக்கான மக்களுடன் மிகச் சிறப்பான முறையில் இடம்பெற்றது.

திருவிழாத் திருப்பலி யாழ். மறைமாவட்டக் குருமுதல்வர் அருட் தந்தை ஜெபரட்ணம் அடிகள் தலைமையில் வேறு சில குருக்களும் இணைந்து கூட்டுத் திருப்பலியாக ஒப்புக்கொடுக்கப்பட்டது.

இறுதியில் திருச்செரூப பவனி இடம்பெற்று புனிதரின் ஆசிர்வாதமும் வழங்கப்பட்டது.

கடந்த 28 ஆம் திகதி கொடி ஏற்றப்பட்டு ஆயத்தநாள் வழிபாடுகள் மற்றும் திருச்சிலுவை ஆராதனை, திவ்விய நற்கருணை வழிபாடும் இடம்பெற்றது.

மண்டைதீவு, முழங்காவில்,யாழ்ப்பாணம், கிளிநொச்சி, நாச்சிக்குடா நாவாந்துறை, வலைப்பாடு, மன்னார், பூநகரி, வேலணை எனப் பல இடங்களிலிருந்து பல்லாயிரக்கணக்கான மக்கள் பாலைதீவுக்கு வருகை தந்ததாக தெரிவிக்கப்பட்டது.

You might also like