பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் சாதனை-

வன்னிமண்ணில் இடம்பெற்ற பெரும் போரால் பலாத்காரமாக விதவைகள் ஆக்கப்பட்ட பெண்கள் சோர்ந்து ஒதுங்கிப்போகவில்லை. அவர்கள் தான் இன்று குடும்பத்தலைவர்களாக தங்கள் குடும்பங்களை மேல்எழுச்சி செய்து பிள்ளைகளை வளர்த்துச் சாதனை படைத்துக்கொண்டிருக்கின்றார்கள் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்தார்.

முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பெண்­கள் எதிர்­கொள்­ளும் பிரச்சி­னை­கள் தொடர்­பாக நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர் சி.சிவ­மோ­கன் தலை­மை­யி­லான கலந்­து­ரை­யா­டல் ஒன்று நேற்று மாலை புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தே­சத்­தில் உள்ள சுனாமி நினை­வா­லய வளா­கத்­தில் நடை­பெற்­றது. இதில் கலந்து கொண்டு கருத்­துத் தெரி­விக்­கும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்­தார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது:

பெண்­கள் கட்­ட­மைப்பு ஊடாக சமு ­தா­யத்­துக்­குத் தேவை­யான விட­யங்­களை செய்­யக்­கூ­டி­ய­தாக இருக்­கும் என்ற நம்­பிக்­கை­யில் முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் பெண்­கள் கட்­ட­மைப்­பினை நிறு­வி­யுள்­ளோம். இன்று தமிழ்­இ­னத்­தைப் பிரித்­து­வைத்­துக் கூறு­போட்­டுப் பல­பி­ரி­வு­க­ளா­கப் பிரித்து எம்­மைப் பல­மி­ழக்­கச் செய்­வ­தற்­கான முயற்­சி­களை பலர் எடுத்­துக்­கொண்­டி­ருக்­கின்­றார்­கள். இதன் பின்­னால் பாரி­ய­ஒரு சதித்­திட்­டம் இருக்­கின்­றது.

பெண்­கள் வலை­ய­மைப்­பின் ஊடாக ஒரு ஒற்­று­மை­யினை இன்று முல்­லைத்­தீ­வில் காட்­டி­நிற்கின்­றோம். அது தொட­ரும். தமிழ்த் தேசி­யக்­கூட்­ட­மைப்பு தேர்­த­லில் நிற்கின்­றது என்­றால் ஆச­னங்­க­ளைப் பிடிப்­ப­தற்­காக பங்கு பற்­றுகின்­றது என்று சிலர் நினை க்கின்­றார்­கள். இதனை நான் மறுக்­கின்­றேன். ஆச­னங்­க­ளைப் பிடிப்­ப­தற்­காக தமிழ்த் தே­சி­யக்­கூட்­ட­மைப்பு போட்­டி­யி­ட­வில்லை.

தமி­ழர்­க­ளின் ஒற்­று­மை­யின் இருப்­பினை முத்­திரை­ பதித்­துக் காட்­டு­வ­தற்­காக மட்­டும்­தான் தேர்­தல்­க­ளில் பங்கு பற்­றிக்­கொண்­டி­ருக்­கின்­றோம். இது­தான் உண்மை. இந்­தக் கருத்­தினை மக்­கள் மத்­தி­யில் கொண்டு செல்­ல­வேண்­டும். எங்­கள் தமி­ழி­னம் ஒற்­று­மை­யாக, ஒரு­மைப்­பட்ட இடத்­தில் நாங்­கள் நிற்க­வேண்­டிய­வர்­க­ளாக உள்­ளோம்.

தமிழ்­தே­சி­யத்­தின் கீழ்த் தான் கூட்­ட­மைப்பு பய­ணிக்­கின்­றது. தேசிய உடைப்­பி­னைச் செய்ய நினைக்­கும் சக்­தி­க­ளுக்கு நாங்­கள் பாடம் கற்­பித்­தா­க­வேண்­டும். 2009 ஆம் ஆண்டு தமி­ழி­னம் ஏதி­லி­க­ளாக விடப்­பட்­டது. கடந்த 30 ஆண்­டு­கா­லப் போராட்­டத்­தில் சகல துறை­க­ளை­யும் ஒரு கட்­டு­மா­னத்­தில் வைத்­தி­ருந்­த­வர்­கள், தெற்­கா­சி­யா­வி­லேயே நீர்­மூழ்­கிக் கப்­ப­லை­யும் கட்­டி­ய­வர்­க­ளு­டைய வல்­ல­மை­பொ­ருந்­திய கட்­டு­மா­னத்­தின் கீழ் இருந்த நாங்­கள் ஒன்­றுமே இல்­லா­மல் விட ப்பட்­ட­பொ­ழுது தவித்­துத்­தான் நின்­றோம். மீண்டு எழு­வ­தற்கு ஒரு பிடி­மா­னம் கிடைக்­கின்ற­ போது அத­னை­யும் உத­றித்­தள்­ளி­விட்­டால் நாங்­கள் எங்கு போய் நிக்­கப்­போ­கின்­றோம் என்­ப­து­தான் என்­னு­டைய கேள்வி. இங்கு வாழ்­கின்ற பெண்­கள் ஒற்­று­மை­யு­டன் செயற்­பட வேண்­டும். அவர்­க­ளுக்­கான வரு­மா­னத்தை பெற்­றுக்­கொள்­ளும் வகை­யி­லான திட்­டங்­கள் என்­னி­டம் உள்­ளன.

அது தமி­ழர்­களை ஒற்­று­மை­யாக வைத்­தி­ருக்­கும் செயற்­பா­டாக அமை­யும். அத­னைச் செயல்­ப­டுத்தி காட்­டு­வேன். இது பெண்­கள் மத்­தி­யில் பல மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தும்.
இதன் ஊடாக வெளி­யில் இருந்து வரு­ப­வர்­க­ளின் நுண்­க­டன் திட்­டங்­கள் அகற்­றப்­ப­ட­வேண்­டும் என்­றார்.

இதில் கரைத்­து­றைப்­பற்று,புதுக்­கு­டி­யி­ருப்பு, ஒட்­டு­சுட்­டான் பிர­தே­சங்க­ ளைச் சேர்ந்த பெண்­கள் அமைப்­பின் பிர­தி­நி­தி­கள் பலர் கலந்­து­கொண்­டி­ருந்­த­னர்.
இந்த நிகழ்­வில் பெண்­கள் தொடர்­பான கருத்­துக்­களை வடக்கு மாகாண பெண்­கள் பேரவை இணைப்­பா­ள­ரும் பெண்­கள் தொடர்­பான செயற்­பாட்­டா­ள­ரும் பருத்­தித்­து­றை­யின் முன்­னாள் நக­ர­சபை உறுப்­பி­ன­ரு­மான மதினி நெல்­சன், வடக்கு மாகாண பெண்­கள் பேரவை இணைப்­பா­ளர் தீபா சிறீ­த­ரன் ஆகி­ ­யோ­ரும் கருத்­து­ரை­களை நிகழ்த்­தி­னர்.

You might also like