நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லும் தமிழ்த் தரப்­பு­க­ளது  இன்­றைய நிலைப்­பா­டும்!

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு வடக்­குக் கிழக்­கில் உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் கணி­ச­மான சபை­களைக் கைப்­பற்­றி­யுள்­ள­போ­தி­லும், வலுவான ஆட்­சியை நிறு­வு­வ­தற்­குப் போது­மான பெரும்­பான்மை ஆச­னங்­க­ளைப் பெறத் தவ­றி­யுள்­ளது. இதன் கார­ண­மாக வேறு தரப்­பு­க­ளு­டன் இணைந்து ஆட்­சி­மைக்­க­வேண்­டிய சூழ்­நிலை ஏற்­பட்­டுள்­ளது.

அடுத்துப் பெரும்­பான்மை ஆச­னங்­களை பெற்ற கட்­சி­யாக  தமிழ்த் தேசிய முன்­னணி உள்­ளது. அதைத் தொடர்ந்து ஈழ­மக்­கள் ஜன­நா­யக கட்சி (ஈ.பி.டி.பி.) உள்­ளது. ஐக்­கிய தேசி­யக் கட்சி மற்­றும்  ஸ்ரீலங்கா சுந்­தி­ரக் கட்சி என்­பவை குறிப்­பிட்­ட­ளவு ஆச­னங்­க­ளைப் பெற்றுள்ள அதே­ வே­ளை­, மீன் சின்­னத்­தில் யாழ். மாவட்­டத்­தில் போட்­டி­யிட்ட சுயேட்­சைக் கு­ழு­வும், கிளி­நொச்சி மாவட்­டத்­தில் கேட­யம் சின்­னத்­தில் போட்­டி­யிட்ட சுயேட்­சைக் குழு­வும் முறையே காரை­ந­கர், பச்­சி­லைப்­பள்ளி பிர­தேச சபை­க­ளில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­புக்கு அடுத்த நிலை ஆச­னங்­க­ளைப் பெற்­றுள்­ளன.

ஆட்சி அமைப்­ப­தற்கு பெரும்­பான்மை ஆச­னங்­களை எந்­தக் கட்­சி­யுமே பெற்­றுக்­கொள்­ளாத நிலை­யில் முன்­னிலை ஆச­னங்­க­ளைப் பெற்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பால் வடக்கு கிழக்­கின் பெரும்­பா­லான உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளில் ஆட்­சி­ய­மைக்­க­மு­டி­யும். ஆயி­னும்   நிறை­வேற்­றுவ­தற்­காக தீர்மா னங் கள் சபைக்குக் கொண்டு வரப்­ப­டும் தரு­ணங்­க­ளில், எதிர்த் தரப்­பி­னர் இணைந்து அந்­தத் தீர்­மா­னங்­களை எதிர்த்­தால் அது தோற்­க­டிக்­கப்­பட்டு அபி­வி­ருத்­திச் செயற்­பா­டு­க­ளில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்.

தமிழ்த் தேசி­யக் கட்­சி­கள் வரி­சை­யில் இணை­யும் தமிழ்த் தேசிய முன்­னணி

தமிழ் மக்­க­ளின் தேசி­யத்­தின் கட்­சி­யான தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பு­டன் தற்­பொ­ழுது தமி­ழத் தேசிய முன்­ன­ணி­யும் இடம்பிடித்துள்ளது. பிர­தே­சபை, மாகா­ண­சபை, நாடா­ளு­மன்­றம் என்­ப­வற்­றின் பிர­தி­நி­தித்­து­வத்தை இது­வரை அந்­தக் கட்சி கொண்­டி­ராத போதி­லும் தங்­க­ளு­டைய தமிழ்த் தேசி­யத்­தின் கொள்­கை­மூ­லம் பெற்­றுக்­கொண்ட வெற்­றி­யா­கவே தமிழ்த் தேசிய முன்­ன­ணி­யின் உள்­ளூ­ராட்சி சபைக்­கான கன்­னி­வ­ரவு கரு­தப்­ப­டு­கி­றது.

இதன்­மூ­லம் தமிழ்த் தேசி­யத்தை வலி­யு­றுத்­தும் கட்­சி­க­ளுக்கு,  தமிழ் மக்­க­ளின் ஆத­ரவு கூடு­த­லான அள­வில் உள்­ளது என்­பதை அவ­தா­னிக்க முடி­கி­றது. வட்­டார ரீதி­யாக வெற்­றி­பெற்ற வேட்­பா­ளர்­கள் முன்­னிலை வாக்­கு­களை ப் பெற்­ற­வர்­க­ளா­கக் கொள்­ளப்­ப­டும் அதே­வேளை, இராண்­டாம் நிலை ஆச­னங்­கள் விகி­தா­சார ரீதி­யில் வழங்­கப்­பட்­ட­வையே. உள்­ளூ­ராட்­சிச் சபை­களை அமைப்­ப­தற்­கான கூடு­த­லான வகி­பா­கம் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் தமிழ்த் தேசிய முன்­னணி போன்­ற­வற்­றுக்கே உள்­ளது.

வடக்­குக் கிழக்­கில் இடம்­பி­டித்­துள்ள தேசி­யக் கட்­சி­கள்

இரண்டு பெரும் தேசி­யக் கட்­சி­க­ளான ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக் கட்சி மற்­றும் ஐக்­கிய தேசி­யக் கட்சி என்­ப­வற்­று­டன் இணைந்து உள்­ளூ­ராட்சி சபை­களை நிர்வகித்துச் செல்­வ­தற்­கான நகர்வை தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் சரி, தமிழ்த் தேசிய முன்­ன­ணி­யும் சரி மேற்­கொள்­வ­தற்கு முற்­ப­டப்­போ­வ­தில்லை. ஏனெ­னில், இன்று தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பலம் நலிவு கண்­ட­மைக்­கான கார­ணங்­க­ளில் ஒன்று, மத்­தி­யி­லேயே எதிர்க் கட்­சி­யாக செயற்­பட்­டுக் கொண்டு ஆட்சி அதி­கா­ரத்­தி­லுள்ள அர­சு­டன் இணக்க அர­சி­யலை மேற்­கொள்­வ­தாக தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பின் மீது சுமத்­தப்­பட்ட குற்­றச்­சாட்டே ஆகும்.

அத்­த­கைய குற்­றச்­சாட்டை முன்­வைத்தே தமிழ்த் தேசிய முன்­னணிபரப்­பு­ரை­களை மேற்­கொண்­டு­வந்­தது.   இது­வரை கால­மும் தமிழ் மக்­க­ளின் ஏக­போக ஆத­ர­வைப் பெற்­றி­ருந்த தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின்  பலம் பின்­ன­டைவு கண்­ட­மைக்கு முக்­கிய கார­ண­மாக இத­னைக் கொள்ள முடி­யும். இத்­த­கைய பின்­ன­ணி­யில்,  இரண்டு தமிழ்த் தேசி­யக் கட்­சி­க­ளும் தென்­னி­லங்கை பெரும்­பான்மை கட்­சி­க­ளு­டன் இணைந்து உள்­ளூ­ராட்சி சபை­களை நிறுவி நிர்வகிக்கத் தயக்­கம் காட்­டு­மெனக் கருத இடம் உண்டு.

ஈழ மக்­கள் ஜன­நா­யகக் கட்சி (ஈ.பி.டி.பி.)யின் இன்­றைய நிலை

தனக்­கான இரு சபை­க­க­ளாக நெடுந்­தீவு, ஊர்­கா­வற்­றுறை பிர­தேச சபை­க­ளில் வெற்­றி­யீட்­டிக் கொண்ட ஈ.பி.டி.பி., வடக்கு கிழக்­கின் ஏனைய உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளி­லும் தன்­னு­டைய வெற்­றியை மூன்­றா­வது நிலை­யில் நிறுத்­தி­யுள்­ளது. ஆயி­

னும் ஈ.பி.டி.பி. யுடன் இணைந்து உள்­ளூ­ராட்சி சபை­களை அமைப்­ப­தற்கு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும் தமிழ்த் தேசிய முன்­னணி என்­பவை  முயற்சி எடுக்­க­மாட்டா. அவ்­வாறு ஒரு முயற்சி  மேற் கொள்­ளப்­பட்­டால் தொடர்ச்­சி­யாக அரச ஆத­ரவுக் கட்­சி­யாகச் செயற்­பட்­டு­வ­ரும் ஈ.பி.டி.பியு­டன் இணைந்து செயற்­ப­டு­வ­தன் மூலம் தமிழ்த் தேசிய அர­சி­யல் தளத்­தில் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பும் தமிழ்த் தேசிய முன்­ன­ணி­யும் தாம்  பின்­ன­டை­வைச் சந்­திக்­க­லாம் என எண்­ணு­வது நியா­ய­மா­னதே.

சுயேட்­சைக் குழுக்­க­ளது நிலைப்­பாடு

சுயேட்­சைக்­குழு மீன் சின்­னத்­தில் போட்­டி­யிட்டு ,யாழ்ப்­பா­ணத்­தில் குறிப்­பிட்ட ஆச­னங்­க­ளைப் பெற்­றுள்ள அதே­வேளை, கிளி­நொச்சி மாவட்­டத்­தில் கேட­யச் சின்­னத்­தில் சுயேட்­சை­யாக போட்­டி­யிட்ட ஈ.பி.டி.பியின் முன்­னாள் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரும், தற்­போ­தைய சமூ­க­நீ­திக்­கான மக்­கள்­அ­மைப்­பின் ஸ்தாப­க­ருமான மு. சந்­தி­ர­கு­மா­ரின் தலை­மை­யி­லான சுயேட்­சைக் குழு கிளி­நொச்சி மாவட்ட பிர­தேச சபை­க­ளில் கணி­ச­மான ஆச­னங்­களை பெற்­றுள்­ளது. சுயேட்­சைக் குழுக்­களை இணைத்து காத்­தி­ர­மான சபை­யொன்றை நிறு­வு­வ­தற்­கான செயற்­பாடு, அதற்­கான விட்­டுக் கொ­டுப்­புக்­கள் எவ்­வ­ளவு தூரம் சாத­க­மான  பல­ன­ளிக்­கும் என்­பது கேள்­விக் குறியே.

தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு மற்­றும்  தமிழ்த் தேசிய முன்­னணி என்­பவை தமிழ் மக்­க­ளது பிரதேச அபி­வி­ருத்­தியை பிர­தேச புனர் நிர்­மாண வளர்ச்­சியை கருத்­தில் கொண்டு இணைந்து சபை­க­ளது நிர்­வா­கத்தை முன்­னெ­டுத்­துச் செல்­வதன் மூலமோ அல்­லது எதிர்த் தரப்­பில் இருக்­கும் சந்­தர்ப்­பத்­தில் சபை­யி­னால் எடுக்­கப்­ப­டும் மக்­கள் நலன்­சார்ந்த தீர்­மா­னங் களை ஆத­ரிப்­ப­தன்­ஊ­டாகவும் மக்­க­ளுக்­கான சேவை­களைத் தொட­ர­மு­டி­யும். ஐந்து வருட காலத்­துக்­கான உள்­ளூ­ராட்சி சபை­ளது ஆட்­சிக் காலத்­தில் கூடி­ய­ளவு முன்­னேற் றத்தை எமது பிர­தே­சம் அடை­வ­தற்கு இது சாத­க­மாக அமை­யும். இவ்­வா­றான ஓர் இணைவு அல்­லது ஒத்­துப்­போ­தல் தமிழ்த் தேசி­யத்­தின் இரு கட்­சி­க­ளுக்­கும்  இ­ருக்­கக்­கூ­டிய கடப்­பா­டா­கவே தமிழ்ச் சமூ­கத்­தால் கரு­தப்­ப­டு­கி­றது என்­பதே உண்மை.

You might also like