முல்லைத்தீவில் புதையல் தோண்டிய 10 பேர் கைது!!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேசத்துக்கு உட்பட்ட களிக்காடு என்ற கிராமத்தின் காட்டுப்பகுதியில் பூசைகள் வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டு புதையல் தோண்ட முற்பட்ட முன்னாள் போராளி ஒருவர் உள்ளிட்ட 10 பேரை சிறப்பு அதிரடிப்படையினர் கைது செய்தனர்.

விடுதலைப்புலிகள் காலத்தில் காணப்பட்ட புதையல்கள் இருப்பதாகக் கருதி,  குறித்த நபர்கள் பூசை வழிபாடு மற்றும் வெடி வைத்து தகார்ப்பதற்கு ஏற்ற வகையில் பொருள்களுடன் அந்தக் காட்டுப் பகுதிக்குச் சென்றனர்.

முல்லைத்தீவு சிறப்பு அதிரடிப்படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து, அங்கு சென்ற சிறப்பு அதிரடிப்படையினர் அனைவரையும் கைது செய்தனர். அவர்கள் கொண்டு சென்ற மண்வெட்டி, திசையறிகருவி,அலவாங்கும்,மின்பிறப்பாக்கி,டைனமட் 11, வெடிபொருள் வெடிப்பி 21, உள்ளிட்ட பொருள்களையும் மீட்டனர்.

You might also like