உள்ளூர் நிர்வாகத்தில் கட்சி அரசியல் முறை இருத்தல் ஏற்கத்தகாதது!!

நாடா­ளு­மன்ற ஆட்­சி­ய­மைப்பு அர­சி­ய­லில், வெற்­றி­பெற்ற கட்­சி­கள் தத்­த­மது நலனை ஒரு மூலை­யில் ஒதுக்கி வைத்­து­விட்டு, ஒன்­றி­ணைந்து இலங்கை வாழ் மக்­க­ளி­டையே பாகு­பா­டின்றி சன­நா­ய­கத்­தை­யும் சிவில் மனித உரி­மை­க­ளை­யும் பாது­காத்து செயல்­ப­டுத்­தும் வகை­யில் நிர்­வ­கித்­துச் செல்­லக்­கூ­டிய ஆட்­சியை ‘தேசிய அரசு’ என்ற பெய­ரில் அமைக்க முன்­வந்­த­தன் மூலம் தென்­னி­லங்கை மக்­க­ளில் பலர் எந்­த­ள­வுக்கு நாட்­டின் மீதும் மக்­க­ளின் மீதும் பற்­று­த­லைக் கொண்­டி­ருந்­தார்­கள் என்­பதை வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தது. ஆனால் இந்த நாட்­டுப்­பற்­றுச் சிந்­தனை சோபித தேர­ரின் மறை­வோடு மங்­கி­விட்­டது. உண்­மை­யில் மகிந்­த­வின் வெற்­றி­யு­டன் மறை­யப்­பார்த்­தது. இப்­போது தப்­பிப் பிழைத்­துள்­ளது.

தமிழ் கட்­சி­கள் ஒன்­று­பட்­டாலேயே
தெற்­கைக் கேள்­வி­கேட்க முடி­யும்

ராஜ­பக்­ச­வின் ‘இன­வா­தம் பேசி ஊழல் செய்­யும்’ சிந்­த­னையை சிங்­கள மக்­கள் ஏற்­றுள்­ளார்­கள் போன்ற உணர்வு, உள்­ளு­ராட்சி தேர்­த­லின் மூலம் தென்­னி­லங்­கை­யில் காணப்­ப­டு­கின்­றது. இது தென்­னி­லங்கை அர­சி­ய­லில் தமி­ழ­ருக்கு தன்­னாட்சி உரிமை கொடுப்­பதை எதிர்க்­கும் மனப்­பான்மை சிங்­கள மக்­க­ளி­டம் எவ்­வ­ளவு தூரம் வேர் ஊன்­றி­யுள்­ளது என்­பதை விளக்­கு­கின்­றது. ஆனால் தமிழ்ப் பிர­தே­சங்­க­ளில் உள்ள நிலை­மை­களை அலசி ஆரா­யப் போனால் அவை தென்­னி­லங்­கை­யி­லும் பார்க்­கக் கேவ­ல­மா­க­வுள்­ளது.

அர­சி­யல்­வா­தி­கள் கட்­சி­ந­லன் அர­சி­யலை அடி­மட்­டத்­தி­லுள்ள கிராம அர­சி­ய­லி­லும் வெகு ஆக்­ரோ­ச­மா­கக் கடைப்­பி­டி­கின்ற நிலைமை காணப்­ப­டு­கின்­றது. தமி­ழர்­கள் தங்­க­ளுக்­குள் கட்சி பேதங்­களை மறந்து மக்­கள் நல­னி­லும் கிராம அபி­வி­ருத்­தி­யி­லும் ஆர்­வம் காட்­டாத போது, நாம் எவ்­வாறு சிங்­கள கட்­சி­கள் கட்சி நல­னைக் கைவிட்டு ஒன்­றி­ணைந்து தமி­ழர்­க­ளின் பிரச்­சி­னையை தீர்க்க முன்­வ­ரு­வார்­கள் என எதிர்­பார்க்க முடி­யும்.

உள்­ளூ­ராட்சி மட்­டத்­தில் ஆட்­சி­ய­மைக்க
கட்­சி­க­ளி­டையே ஏகப்­பட்ட முரண்­பா­டு­கள்

தமிழ் அர­சி­யல் வாதி­க­ளின் பிர­தே­ச­சபை, நக­ர­சபை, மாந­க­ர­ச­பை­க­ளின் நிர்­வா­ கத்­துக்கு தவி­சா­ளர்­கள், தலை­வர்­கள், நகர முதல்­வர் போன்ற முதன்­மை­யா­ளர்­களை தெரிவு செய்­யும் விட­யத்­தில் தமிழ் அர­சி­யல் கட்­சி­கள், அர­சி­யல்­வா­தி­கள் கூறிய சில கருத்­துக்­கள் கீழே காணப்­ப­டு­கின்­றன. ஒரு சபை­யில் அறு­திப் பெரும்­பான்மை இல்­லா­விட்­டா­லும், கூடிய ஆச­னங்­க­ளைப் பெற்ற கட்­சியே தவி­சா­ளரை, தலை­வரை, நகர முதல் வரை தெரிவு செய்ய இட­ம­ளிக்­கப்­பட வேண்­டும்.

அதற்கு மற்­றைய கட்­சி­கள் ஒத்­து­ழைக்க வேண்­டும் என தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு கருத்து வெளி­யிட்­டி­ருந்­தது.ஒரே கொள்­கை­யை­யு­டைய கட்­சி­கள் ஒன்று சேர்ந்து சபை­க­ளில் ஆட்­சி­ய­மைக்க வேண்­டும் என வட மாகாண சபை முத­ல­மைச்­சர் கருத்து வெளி­யிட்­டி­ருந்­தார்.

கூடிய ஆச­னங்­களை ஒரு கட்சி வென்­றி­ருந்­தா­லும் அக்­கட்­சிக்கு எதி­ரான கட்­சி­கள் கூடிய ஆச­னங்­க­ளைக் கொண்­டி­ருந்­தால் அவர்­கள் ஒன்­று­கூடி ஆட்சி அமைக்­க­லாம் என்­பது ஈழ மக்­கள் ஜன­நா­யக முன்­ன­ணி­யின் (ஈ.பி.டி.பி.) நிலைப்­பாடு. யாழ். மாந­கர சபை­யில் நகர முதல்­வர் தெரிவை இர­க­சிய வாக்­கெ­டுப்­புக்கு விட்­டால் தங்­கள் கட்சி சார்­பாக நகர முதல்­வர் பத­விக்­காக நிறுத்­தப்­ப­டும் வேட்­பா­ளரே வெற்றி பெறு­வார் என தமிழ் தேசிய மக்­கள் முன்­னணி கரு­து­கி­றது.

கட்­சி­கள், அர­சி­யல்­வா­தி­கள் தேர்­த­லின் பின்­னர் உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளில் ஆட்­சி­ய­மைப்­பது பற்­றியே இப்­போது சிந்­தித்து கொண்­டி­ருக்­கும் நிலை­யையே அவ­தா­னிக்க முடி­கி­றது. ஏதோ நாடா­ளு­மன்­றத் தேர்­தல் நடை­பெற்று முடிந்­தது போன்ற எண்­ணத்­தில் இவர்­கள் வெளி­யி­டும் கருத்­துக்­கள் அமைந்­துள்­ளன. நடந்து முடிந்­ததோ கிரா­மிய மட்ட அமைப்­பு­க­ளுக்­கான தேர்­தல். வேட்­பா­ளர்­களை ஆத­ரித்­த­வர்­கள் கட்­சி­யைச் சார்ந்­த­வர்­கள் மட்­டும் எனப் பார்க்க முடி­யாது. இன­ச­ன­பந்­துக்­கள், நண்­பர்­கள் என கட்­சிக்கு அப்­பா­லான ஆத­ர­வா­ளர்­கள் தேர்­தல் முடி­வுக்கு கார­ண­மா­னவர்­க­ளா­க­வும் ஆகி இருந்­தி­ருக்­க­லாம்.

உள்­ளாட்­சி­யில் ஆட்­சி­ய­மைக்க
கொள்­கை­கள் அவ­சி­ய­மற்­றவை

நடந்து முடிந்த தேர்­தல், சில­பல வேலைத்­திட்­டங்­களை கிரா­மிய மட்­டத்­தில் மேற்­கொள்ள வேண்டி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்ள உள்­ளு­ராட்சி சபை­க­ளுக்கு அர­சி­யல் ரீதி­யி­லான கொள்கை நிலைப்­பாடு என்ற கேள்­வியை இங்கே எழுப்பி நிற்­கி­றது. பிர­தேச சபை, நக­ர­சபை, மாந­கர சபை ஆகி­ய­வற்­றின் மூலம் முன்­னெ­டுக்­கப்­பட வேண்­டிய வேலைத் திட்­டங்­கள், சட்ட ஏற்­பா­டு­க­ளாக அந்­தந்த சபை­க­ளின் நிய­திச் சட்­டங்­க­ளில் விரி­வா­கத் தெளி­வா­கக்­கூ­றப்­பட்­டுள்­ளன.

அவை­க­ளில் முக்­கி­ய­மான வேலைத்­திட்­டங்­க­ளாக வீடு­க­ளில், வீதி­க­ளில் சேரும் குப்பை கூழங்­களை ஒன்று சேர்த்து அவற்றை ஒரு இடத்­தில் சேக­ரித்து விவ­சா­யத்துக்கேற்ற பச­ளை­யாக்­கு­தல்;, உள்­வீ­தி­க­ளை­யும் ஒழுங்­கை­க­ளை­யும் போக்கு வரத்­துக்கு ஏற்ப செப்­ப­னி­டு­தல்;, குடி­ தண்­ணீர் மல­சல கூடங்­க­ளின் சுத்­தத்தை பேண நட­வ­டிக்கை எடுத்­தல்;, சந்­தைக் கட்­டி­டங்­கள் துவிச்­சக்­கர வண்டி பாது­காப்பு நிலை­யம் நடாத்தி வரி அற­விட்ட பொதுக் கட்­ட­டங்­க­ளுக்­குத் தேவை­யான சுத்­தத்­தை­யும் வியா­பா­ரத்­துக்­கான தேவை­யான உத­வி­க­ளை­யும் செய்து கொடுத்­தல்; துவிச்­சக்­கர வண்­டிக்கு வரி அற­விட்டு அவற்­றைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கான உரி­மத்தை வழங்­கல் போன்­ற­வற்­றைப் பட்­டி­ய­லி­ட­லாம். இது போன்ற தெருவை கூட்டி குப்­பை­கூ­ளத்தை அப்­பு­றப்­ப­டுத்­தும் வேலை­களை செய்­வ­தற்கு கொள்கை என்ன தேவை? கூட்டு என்ன தேவை? கட்சி அர­சி­ய­லுக்­கான தேவை என்ன? கிராம மக்­க­ளுக்கு தேவை­யான சேவை­க­ளைச் செய்­வ­தற்கு அர­சி­ய­லும் கட்­சி­க­ளும் கொள்­கை­க­ளும் தேவைப்­ப­டு­கின்­ற­னவா?

உள்­ளூர்­க­ளில் வாழும் மக்­க­ளுக்­கான தேவை­களை விட­ய­தா­னங்­க­ளாக பிரித்­துப் பட்­டி­ய­லிட்டு அந்த ஒவ்­வொரு விட­ய­தா­ னங்­க­ளி­லுள்ள வேலை­களை ஒழுங்கு படுத்­து­வ­தற்­கும் செவ்­வனே செய்­வ­தற்­கும், காலத்­துக்கு காலம் அதன் நடை­மு­றை­களை பரி­சீ­லிக்­க­வும், தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­கள் சில­ரைக் கொண்ட குழுக்­கள் அமைத்து அந்த விட­யங்­க­ளைக் கண்­கா­ணித்து நிர்­வ­கித்­தலே உள்­ளூ­ராட்சி மன்­றங்­கள் மேற்­கொள்ள வேண்­டிய பணி­க­ளா­கும். மூவரோ நால்­வரோ அல்­லது ஐவரோ ஒரு குழு­வில் நிய­மிக்­கப்­ப­ட­லாம். வேலைப்­பளு கூடு­த­லா­க­வுள்ள விட­யங்­க­ளுக்கு அதை­வி­டக் கூடிய உறுப்­பி­னர்­கள் நிய­மிக்­கப்­ப­ட­லாம். அந்த விட­ய­தான பணிக்கு அந்­தக் குழுவே முழுப் பொறுப்­பை­யும் கொண்­டி­ருக்­கும்.

உள்­ளு­ராட்­சிச் சபை­க­ளில் ஆளும் கட்சி எதிர்க்­கட்சி என்று எது­வுமே இருத்­தல் ஆகாது. வெற்றி பெற்­ற­வர்­களை சபை உறுப்­பி­னர்­க­ளாக அன்றி கட்சி ரீதி­யாக பார்க்­கக் கூடாது. தேர்­த­லுக்கு முன்­னர் கட்சி வேட்­பா­ளர்­க­ளா­க­வும் வெற்­றிக்­குப் பின்­னர் சபை உறுப்­பி­னர்­களாக மட்­டுமே நோக்­கும் போக்­கும் பின்­பற்­றப்­பட வேண்­டும். சபை கூட்­டாக சேர்ந்து எடுக்­கும் தீர்­மா­னங்­களை அந்­தந்த விட­யா­தா­னத்­திற்கு பொறுப்­பாக அமைக்­கப்­ப­டும் குழு செயற்­ப­டுத்தி வர­வேண்­டும்.

இத­னால் கட்சி மோதல்­கள்; சபை நட­வ­டிக்­கை­யின் போது நிலவாது. நேரம் வீண் விரை­ய­மா­கு­வ­தைத் தவிர்க்க முடி­யும். மக்­கள் சேவை சிறப்­பாக நடை­பெற ஒத்­து­ழைப்பு சகல கட்­சி­க­ளி­ட­மு­மி­ருந்­தும் கிடைக்­கும். வடக்கு -– கிழக்­கில் பெரும்­பான்மை சபை­க­ளைக் கைப்­பற்­றிய பெரும் கட்­சியே இந்த மாற்­றத்தை கொண்­டு­வர முன்­னிற்க வேண்­டும். இந்­தப் பெருந்­தன்­மை­யான செயற்­பாடு மக்­க­ளின் அமோக ஆத­ர­வை­யும் பாராட்­டுக்­க­ளை­யும் பெற்று நன்­ம­திப்பை ஏற்­ப­டுத்­தும் என்­ப­தில் எள்­ள­ள­வும் சந்­தே­க­மில்லை.

You might also like