ஏற்று நீர்ப்­பா­ச­னத் திட்­டத்­தி­னால் திரு­வை­யாறு சாலை­கள் பாதிப்பு

கிளி­நொச்சி – திரு­வை­யா­றுப் பிர­தே­சத்­தில், இர­ணை­மடு ஏற்­று­நீர்ப்­பா­ச­னத் திட்­டத்­துக்­கான வடி­கால் கட்­ட­மைப்பு வேலை­க­ளால் பொது­மக்­கள் சிர­மங்­களை எதிர்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இந்­தத் திட்­டத்­துக்­காக தோண்­டப்­ப­டும் சாலை­கள் உட­ன­டி­யாக செப்­ப­னி­டப்படுவதில்லை எனவும் இதனால் வாக­னங்­கள் பய­ணிப்­ப­தில் தாம­தம் ஏற்­ப­டு­கின்­றது எனவும் மக்­க­ளால் சுட்­டிக்­காட்­டப்­பட்­டுள்­ளது. இது­ தொ­டர்­பில் பொது­மக்­கள் தரப்­பில் மேலும் தெரி­விக்­கப்­பட்­ட­தா­வது:

இங்­குள்ள விவ­சா­யக்­கா­ணி­க­ளுக்கு இர­ணை­ம­டுக் குளத்­தி­லி­ருந்து ஏற்­று­நீர்ப்­பா­ச­னத்­தின் மூலம் தண்­ணீரை வழங்­கு­வதற்கான வடி­கால் கட்­ட­மைப்பு வேலை­கள் இடம்­பெற்று வரு­கின்­றன. வேலை­கள் ஆரம்­பிக்­கப்­பட்டு ஒரு­வ­ரு­டத்­துக்கு மேலா­கி­விட்­டது. கடந்­த­வ­ரு­டம் ஓகஸ்ட் மாதத்­தில் வேலை­களை முடி­வு­றுத்தி இருக்­க­வேண்­டும். ஆனால் இன்­ன­மும் முடி­வ­டை­ய­வில்லை.

ஏற்று நீர்ப்­பா­சன வடி­கால் கட்­ட­மைப்­புக்­காக சாலை­கள் தேண்­டப்­ப­டு­கின்­றன. ஒரு சாலை­யில் 40 காணித்­துண்­டு­கள் இருக்­கு­மா­யின் நாற்­பது இடங்­க­ளி­லுமே சாலை அக­ழப்­ப­டு­கின்­றது. எனி­னும், வேலை­கள் முடிந்­த­தும் சாலை­கள் உரி­ய­மு­றை­யில் மண்­ணிட்டு சமப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தில்லை. சாலைக்கு மேலாக கட்­ட­மைப்­பு­கள் வெளிக்­கி­ளம்­பிய நிலை­யில் காணப்­ப­டு­கின்­றன.

சாலை­கள் முழு­வ­தும் வேகத்­தடை அமைத்­தி­ருப்­பது போல் மேடு­பள்­ள­மா­கவே இருக்­கின்­றது. திரு­வை­யா­றின் பல சாலை­கள் இந்த நிலை­யி­லேயே காணப்­ப­டு­கின்­றன.

இத­னால் வாக­னங்­கள் ஆமை­வே­கத்­தி­லேயே செல்­ல­வேண்­டி­யுள்­ளது. கார் மற்­றும் சிறி­ய­ரக வாக­னங்­கள் பய­ணிக்­கை­யில் அவற்­றின் அடிப்­பா­கம் அந்த மேடு­க­ளில் தட்டி சேத­ம­டை­கின்­றன. இர­ணை­ம­டு­வில் அமைந்­தி­ருக்­கும் தென்­னி­லங்­கை­யைச் சேர்ந்த நிறு­வ­னம் ஒன்றே ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் இந்­தக் கட்­ட­மைப்பு வேலை­க­ளைச் செய்­து­ வ­ரு­கின்­றது.

எனவே, இப்­ப­கு­தி­க­ளில் சாலை­ களை உரி­ய­மு­றை­யில் சீர்­ப­டுத்தி மக்­க­ளின் சீரான போக்­கு­வ­ரத்­துக்கு வழி ­யேற்­ப­டுத்­த­வேண்­டும் – என்­ற­னர்.

You might also like