தமிழர்களை மேலும்  பிளவுபடுத்துவது  ஏற்கத் தக்கதல்ல   

தமிழ்க் கட்­சி­கள் ஒன்­றி­ணைந்து பொது­வா­ன­தொரு கொள்­கை­யின் அடிப்­ப­டை­யில் செயற்­பட வேண்­டு­மெ­னக் கோரிக்­கை­கள் விடுக்­கப்­பட்டு வரு­கின்ற இந்த வேளை­யில், அத­னைக் குழப்­பும் வகை­யில் சில அர­சி­யல் கட்­சி­க­ளின் தலை­வர்­கள் கருத்து வெளி­யிட்டு வரு­கின்­றமை வேத­னைக்­கு­ரி­யது.

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வடக்­குக் கிழக்­கைப் பொறுத்த வரை­யில் தமி­ழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு அதி­க­மான வாக்­கு­க­ளைப் பெற்­ற­தோடு அநே­க­மான உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளில் அதிக ஆச­னங்­க­ளை­யும் பெற்­றுள்­ளது.

ஆனால் புதிய உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் நடை­மு­றை­க­ளால்  தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப் பால் ஆட்சி அமைப்­ப­தில் சிக்­கல் நிலை தோன்­றி­யுள்­ளது. இத­னால் அதிக ஆச­னங்­களை உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளில் பெற்ற கட்­சி­கள், அந்­தச் சபை­க­ளில் ஆட்­சி­ய­மைக்­கும் பொருட்டு ஏனைய கட்­சி­கள் அவற்றுக்கு ஆதரவு வழங்க வேண்­டு­மென்ற கோரிக்கை எழுந்­தது. ஆனால், இது தொடர்­பாக எந்த இணக்­கப்­பா­டும் எட்­டப்­ப­ட­வில்லை. இதே­வேளை உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளின் உறுப்­பி­னர்­க­ளி­டையே பகி­ரங்க வாக்­கெ­டுப்­பு­களை நடத்தி, அவர்­க­ளின் ஆத­ர­வைப் பெற்று ஆட்­சி­ய­மைக்க வேண்­டு­மெ­னக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரான சம்­பந்­தன் கூறி­யி­ருந்­தார். இதன் மூல­மா­கக் கட்­சித் தாவல்­க­ளைத் தடுத்து நிறுத்த முடி­யு­மென அவர் கரு­தி­யி­ருக்­க­லாம்.

இர­க­சிய வாக்­கெ­டுப்­பின் மூலம் ஆட்சி அமைக்­கும் உரிமை தீர்­மா­னிக்­கப்­பட வேண்­டும் என்­கி­றார் கஜேந்­தி­ர­கு­மார்

சம்­பந்­த­னின் மேற்­கு­றிப்­பிட்ட கோரிக்­கை­கள் சகல கட்­சி­க­ளுக்­கும்  உத­வக் கூடி­யவை ஆனால் தமிழ்க் காங்­கி­ர­ஸின் தலை­வ­ரான கஜேந்­தி­ர­கு­மார், சம்­பந்­த­னின் கோரிக்­கையை ஏற்­றுக் கொள்­ள­வில்லை. இர­க­சிய வாக்­கெ­டுப்­பின் மூல­மா­கவே ஆட்­சி­ய­மைக்­கின்ற உரி­மையை நிலை­நாட்­ட­வேண்­டு­ மென அவர் கூறு­கி­றார்.

ஆனால் இதற்­காக அவர் கூறு­கின்ற கார­ணம், குழப்­பத்­துக்­கு ­ரி­ய­தொன்­றா­கவே காணப்­ப­டு­கின்­றது. யாழ்ப்­பா­ணம் மாந­கர சபை­யில் அவர் சார்ந்­துள்ள தமி­ழ்த் தேசி­யப் பேரவை ஆட்­சி­ய­மைப்­ப­தற்கு கூட்­ட­மைப்பு சார்­பா­கத் தெரி­வான பத்து உறுப்­பி­னர்­கள் ஆத­ரவு வழங்­கத் தயா­ராக இருப்­ப­தா­க­வும் இதற்கு அஞ்­சியே சம்­பந்­தன் பகி­ரங்க வாக்­கெ­டுப்­புக்­கான கோரிக்­கையை விடுத்­துள்­ள­ தா­க­வும் அவர் கூறு­கி­றார்.யாழ். மாந­கர சபைக்­குத் தெரிவு செய்­யப்­பட்ட கூட்­ட­மைப்­பின்­உ­றுப்­பி­னர்­க­ளி­டையே பிளவு ஏற்­ப­டுத்­து­கின்­ற­தொரு முயற்­சி­யொன்­றா­ கவே கஜேந்­தி­ர­கு­மா­ரின்  இந்தக் கருத்­தைக் கருத வேண்­டி­யுள் ளது.

கூட்­ட­மைப்பு ஆட்சி அமைப்­ப­தற்கு ஆத­ரவு வழங்­கு­வதோ அல்­லது விடுப்­பதோ கஜேந்­தி­ர­கு­மா­ரது தனிப்பட்ட உரி­மை­யா­கும். இதில் தலை­யி­டு­கின்ற அதி­கா­ரம் எவ­ருக்­குமே இல்லை. ஆனால் கட்­சி­க­ளைப் பிள­வு­ப­டுத்­து­கின்ற முயற்­சி ­க­ளில் அவர் ஈடு­ப­டு­வதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக் கொள்ள முடி­யாது.

கூட்­ட­மைப்­பின் சார்­பாக யாழ்.மாந­கர சபைக்­குத் தெரி­வான உறுப்­பி­னர்­கள் மேயர் பத­விக்­குத் தேர்வு செய்­தது ஆர்­னல்ட்­டையே

யாழ் மாந­கர சபை­யின் மேயர் வேட்­பா­ள­ராக ஏற்­க­னவே கட்­சி­யால் அறி­விக்­கப்­பட்ட ஆர்­னல்ட், தேர்­தல் முடி­வு­கள் வௌியா­ன­தன் பின்­னர்­கூட்­ட­ மைப்­பின் சார்­பில் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட உறுப்­பி­னர்­க­ளால் மேயர் பத­விக்கு முறைப்­படி  தேர்ந்­தெ­டுக்­கப்­பட்­டார்.

கஜேந்­தி­ர­கு­மார் கூறு­வது போன்று, ஆர்­னல்ட்­டின் தெரிவு குறித்து தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு சார்­பில் யாழ்.மாந­கர சபைக்­குத் தெரி­வான பத்து உறுப்­பி­னர்­கள் அதி­ருப்தி கொண்­டி­ருப்­பார்­க­ளா­னால், ஆர்­னல்ட்டை மேய­ரா­கத் தேர்ந்­தெ­டுப்­ப­தற்கு அவர்­கள் தமது ஆத­ரவை வழங்­கி­யி­ருக்க மாட்­டார்­கள். கஜேந்­தி­ர­கு­மார் கூறிய அந்­தப் பத்து உறுப்­பி­னர்­க­ளை­யும் கண்­டு­பி­டிப்­பது கூட்­ட­மைப்­பின் தலை­மைக்கு ஒரு சிர­ம­மான காரி­ய­மல்ல. ஆனால் ஒரு புதிய கதை­யைக் கூறு­வ­தன் மூல­மாக காங்­கி­ரஸ் கட்­சி­யின் தலை­வர் புதுக் குழப்­பம் ஒன்­றுக்கு வித்­தி­டு­வ­தா­கவே இத­னைக் கருத முடி­கின்­றது.

இதே­வேளை வடக்­குக் கிழக்­கில் கூட்­ட­மைப்பு அதிக ஆச­னங்­க­ளைப் பெற்ற 40 உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளில் ஏனைய தமிழ்க் கட்­சி­க­ளின் ஆத­ர­வு­டன் ஆட்­சி­ய­மைக்­க­வுள்­ள­தா­கக் கூட்­ட­மைப்­பின் தலை­வர் அறி­வித்­துள்­ளார். இதற்­கேற்ப தமக்கு ஆத­ரவு வழங்­கு­வ­தற்கு முன்­வ­ரு­கின்ற கட்­சி­க­ளின் நிபந்­த­னை­கள் கேட்­ட­றி­யப்­ப­டு­மெ­ன­வும் அவர் தெரி­வித்­துள்­ளார்.

யாழ்ப்­பாண மாந­கர சபை­யில் தம­து­கட்­சி­ ஆட்சியமைப்­ப­தைக் கஜேந்­தி­ர­கு­மார் விரும்­பு­வா ­ராக இருந்­தால் ஏனைய கட்­சி­க­ளு­டன் பேசி அவர்­க­ளின் ஆத­ர­வைப் பெற்று அதை நிறை­வேற்­றி­வைப்­பதே நேர்­மை­யான செய­லா­கும். இதற்கு எவ­ரும் எதிர்ப்­புத் தெரி­விக்க மாட்­டார்­கள். ஆனால் இதை விடுத்து கட்­சி­யொன்றை உடைத்­துப் பிள­வு­ப­டுத்­து­வ­ தற்கு அவர் முயற்சி செய்­வதை எந்த வகை­யி­லும் ஏற்­றுக் கொள்ள முடி­யாது. இவ­ரது கருத்து ஏனைய உள்­ளூ­ராட்­சிச் சபை­க­ளி­லும் குழப்­பங்­க­ ளை­யும், பிள­வு­க­ளை­யும் ஏற்­ப­டுத்­து­வ­தற்கு வழி­கோ­லிவி­டும்.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் போன்று இனி­மே­லான தேர்­தல் முடி­வு­க­ளும் அமை­யப் போவ­தில்லை

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­க­ளைப் போன்று இனி­மேல் இடம் பெறப்­போ­கும் தேர்­தல்­க­ளின் முடி­வு­க­ளும் அமைந்­து­வி­டு­மென நாம் எதிர்­பார்க்க முடி­யாது. ஆகவே தற்­போது கிடைத்த வெற்­றியை மன­தில் கொண்டு கஜேந்­தி­ர­கு­மார் தரப்­பி­னர் கர்­வப்­ப­டு­வ­தால் பய­னொன்­றும் கிடைக்­க­மாட்­டாது.

இந்த நாட்­டின் தமிழ் மக்­கள் மோச­மா­ன­தொரு கட்­டத்­தில் தற்­போது உள்­ள­னர். தென்­னி­லங்­கை­யில் இடம் பெற்­றுக் கொண்­டி­ருக்­கும் அர­சி­யல் குழப்­பங்­கள் தமி­ழர்­க­ளை­யும் பாதிக்­கவே செய்­யும். ஏனென்­றால் அந்­தக் குழப்­பங்­க­ளின் விளை­வு­கள் தமி­ழர்­க­ளின் தலை­க­ளி­லேயே பேரி­டி­யாக விழு­வ­தற்­கான சாத்­தி­யங்­கள் உள்­ளதை நாம் மறுக்க முடி­யாது.

இந்த நிலை­யில் தமி­ழர்­க­ளி­டையே மேலும் பிள­வு­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­குச் சில அர­சி­யல்­வா­தி­கள் முற்­ப­டு­வது தமி­ழர் தரப்­புக்கு நல்­ல­தல்ல என்­பதை நாம் உணர்ந்­தும், புரிந்­தும் கொள்ள வேண்­டும்.

You might also like