இன்று மகளிர் தினம்!!

பன்­னாட்டு மக­ளிர் தின­மாக மார்ச் எட்­டாம் திக­தியை அனை­வ­ரும் கொண்­டாடி வரு­கின்­றோம். நியு­யோர்க் நக­ரில் ஏற்­பட்ட தீ விபத்­தொன்று 140 உழைக்­கும் மக­ளி­ரைக் காவு­கொண்­டது. வெவ்வேறு நாடு­க­ளில் இருந்து வறுமை கார­ண­மாக வயிற்­றுப் பிழைப்­புக்­காக அமெ­ரிக்­கா­வுக்கு வந்த இவர்­க­ளது துய­ரச் சாவா­னது, உழைக்­கும் பெண்­க­ளின் அசா­தா­ரண இக்­கட்­டான, மோச­மான சூழலை உல­குக்கு எடுத்­துக் காட்­டி­யது.

இந்த அசம்­பா­வி­த­மா­னது மக­ளிர் தின­மொன்றை கொண்­டாட வேண்­டிய, கடைப்­பி­டிக்க வேண்­டிய காத்­தி­ர­மான தேவைப்­பாட்­டினை அதி­க­ரித்­தது. அத­னைத் தொடர்ந்து 1913ஆம் ஆண்டு முதல் மார்ச் 8ஆம் திகதி பன்­னாட்டு மக­ளிர் தின­மாக உல­கம் முழு­வ­தும் கடைப் பி­டிக்­கப்­பட்டு வரு­கி­றது.

பெண்­ணின் தனித்­து­வங்­கள்
கேள்­விக்கு உட்­பட்­டுள்­ளன

உல­க­ளா­விய ரீதி­யில் மக­ளிர் தினம் சிறப்­பா­கக் கொண்­டா­டப்­பட்டு வரும் இவ்­வே­ளை­யில் பெண்­ணி­யம், பெண்­ண­டிமை நிலை பற்­றிச் சிந்­திக்க வேண்­டி­யது கட்­டாய மான­தா­கும். பெண்ணை ஒரு ஆய்­வுப்­பொ­ரு­ளா­கப் பார்க்­கும் கோட்­பாடே பெண்­ணி­ய­மா­கும். ஒவ்­வொ­ரு­வ­ரும் கொண்ட கொள்­கை­க­ளின் அடிப்­ப­டை­யில் பெண்­ணி­யம் பல்­வேறு வகை­க­ளைக் கொண்­டுள்­ளது அடக்கி ஒடுக்­கப்­பட்ட பெண்­க­ளி­டம் இருந்து ஒரு சமூ­கப் பிரச்­சி­னை­யா­கவே பெண்­ணி­யம் உருப்­பெற்­றுள்­ளது ‘’Feminism’’ என்­னும் ஆங்­கி­லச் சொல் 19ஆம் நுற்­றாண்­டி­லேயே பயன்­பாட்­டுக்கு வந்­துள்­ளது. முத­லா­ளித்­து­வத்­துக்கு எதி­ரா­க­வும் பெண் ஒடுக்­கு­மு­றைக்கு எதி­ரா­க­வும் குரல் எழுப்­பட்­டது. இதுவே பெண்­ணி­யத்­தின் ‘’வேர்’’ என­வும் இதி­லி­ருந்தே பெண்­ணி­யம் தனி­யொரு கோட்­பா­டாக உருப்­பெற்­றது என்­றும் மார்க்­சிய வாதி­கள் கூறு­கின்­ற­னர்.

சமூ­கத்­தில் புரை­யோடி நிற்­கின்ற பழ­மைக் கோட்­பா­டு­க­ளும் அடி­மை­நி­லைக் கருத்­துக்­க­ளும் பெண்­ணின் இரண்­டாம்­பட்ச நிலை­யினை எடுத்­துக் கூறு­கின்­றன. இரண்­டாம் பாலி­னம் என்­கிற உணர்வு நடப்­பி­யல் காலங்­கா­ல­மாக மிக­மிக ஆழ­மாக வேரூன்­றி­யுள்­ளது. சமூகம் என்ற ஒட்­டு­மொத்­தத்­துக்­குள் காலம் கால­மாக பெண்­ணா­ன­வள் இரண்­ட­றக் கலந்­த­ப­டி­யும், தன் சுயத்தை இழந்து ஆணுக்­காக வடி­வ­மைக்­கப்­பட்­டும் இருந்­தி­ருக்­கி­றாள். இப்­போ­தும் இருக்­கி­றாள். அவ­ளுக்­கான மனித இருப்பு கேள்­விக்கு உட்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது. கணினி யுகத்­தில் கூட அறி­வி­யல் சார்ந்து சுயா­தீ­ன­மாக வாழ­மு­டி­யாது பெண்­கள் உள்­ள­னர்.

கண­வனை இழந்த பெண்­க­ளின் நிலை பார­தூ­ர­மா­ன­தா­கும். அது­வும் இள­வ­ய­துப் பெண் வாழ்க்­கைத் துணையை இழந்­தால், ஏற்படுகின்ற எதிர்ப்­பா­லின வன்­மு­றை­க­ளைப் பட்­டி­ய­லிட முடி­யாது. சிறு­மி­கள், பரு­வப் பெண்­கள் மீதான பாலி­யல் துர்­ந­டத்தை தற்­போது அதி­க­ரித்து வரு­கின்­றது. முக்­கி­ய­மாக மாதா, பிதா, குரு, தெய்­வம் என்ற வரி­சை­யில் பெற்­றோ­ருக்கு அடுத்­த­தா­கப் பார்க்­கப்­ப­டும் ஆசி­ரி­யர்­க­ளால் மாண­வி­கள் பாலி­யல் துர்­ந­டத்­தைக்கு உள்­ளாக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

வர­தட்­ச­னைக் கொடு­மை­யால் தினம் 12 பெண்­கள் கொலை செய்­யப்­ப­டு­கி­றார்­கள் என்­றும், ஏரா­ள­மான பெண்­கள் கண­வ­னின் சித்­தி­ர­வ­தைக்கு ஆளாக்­கப்­ப­டு­கி­றார்­கள் என்­றும் சித்­தி­ர­ வ­தைக்கு ஆளா­கு­ப­வர்­க­ளில் 50 சத­வீ­த­மா­ன­வர்­கள் கர்ப்­பி­ணி­க­ளாக உள்­ள­னர் என்­றும் புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறு­கின்­றன.

ஜப்­பான், சீனா, கொரியா, இந்­தியா உள்­ளிட்ட நாடு­க­ளில் பெண் சிசுக்­கள் கருக்­க­லைப்­புச் செய்­யப்­ப­டு­வது தொடர்ந்து வரு­கி­றது. சிரியா உள்­ளிட்ட பல நாடு­க­ளில் இடம்­பெ­றும் உள்­நாட்­டுப் போரில் ஏகப்­பட்ட பெண்­கள் கொல்­லப்­பட்­டுள்­ள­னர். பெண் குழந்­தை­க­ளின் இவ்­வு­லக வாழ்வு முடி­வுக்­குக் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. போரில் ஏற்­ப­டும் உயி­ரி­ழப்­புக்­கள் பொது­வா­ன­வை­தான். என்­றா­லும் உயி­ரி­ழப்­ப­வர்­க­ளில் பெண்­கள் அதி­கம் என்­பதே பதிவு.

உல­குக்கு ஒளி போன்று
சமூ­கத்­துக்­குப் பெண்­கள்

பெண்­ணி­னது வீரத்தை சங்­க­கால, சங்­க­ம­ரு­விய கால இலக்­கி­யங்­கள் அழ­கா­கச் சொல்­லி­நிற்­கின்­றன. போரில் கண­வன் இறந்த செய்தி கேட்டு தன் மக­னை­யும் போர்க்­க­ளம் அனுப்­பிய வீரத் தாய்­மார்­கள் வர­லா­றா­கி­னர். அன்று எட்­டடி பாய்ந்த அன்­றைய வீரத்­தாய்­மா­ரின் பெண் பிள்­ளை­கள் ஈழப் போராட்­டத்­தில் பதி­னா­றடி பாய்ந்­தார்­கள். கரும்­பு­லி­யாக, கடற்­பு­லி­யாக மண் மீட்க கள­மு­னை­யில் போராடி உடல் சித­றி­னர்.

ஆனா­லும் உல­கமோ, சமூ­கமோ நடை­முறை வாழ்­வில் பெண்­களை சம­மா­கக் கரு­திக்­கொள்ள முன்­வ­ர­வில்லை. இதுவே பெண்­ணி­னத்­தின் பெரும் சாபக் கேடாக உள்­ளது. நதியை, மதியை, இயற்­கையை, கட­வுளை பெண் என்­பார்­கள். ஆனால் தன்­னு­டன் குடித்­த­னம் செய்­யும் பெண்னை சக­ம­னு­சி­யாக, ஓர் உயி­ரி­யாக பார்க்க மறுப்­பது ஏனோ?

பிறப்­ப­தென்­னவோ குழந்­தை­தான் அது பெண்­ணா­க­வும் ஆணா­க­வும் அங்க அவய வேறு­பா­டு­க­ளைக் கொண்டு வளர்க்­கப்­ப­டு­கின்­றது. பாரதி, பார­தி­தா­சன், பெரி­யார் போன்­றோ­ரின் புரட்­சிக் குரல்­க­ளால் பெண் சமு­தா­யத்­தின் மீதான ஆணா­திக்க அடிமை நிலை­கள் சில களை­யப்­பட்­டா­லும் பல புதிது புதி­தான அநீ­தி­க­ளும் அடக்­கு­மு­றைக்­கும் திணிக்­கப்­பட்டு கொண்­டே­தான் இருக்­கின்­றன. எக்­கா­லத்­தி­லும் பெண்­ணி­னத்­தின் மீதான அடக்­கு­மு­றை­க­ளும் அநீ­தி­க­ளும் வேர­றுக்­கப்­ப­டு­வ­தில்லை. காலத்­துக்­கேற்ப புதிது புதி­தாய் அவ­தா­ரம் எடுக்­கின்­றன.

உல­குக்கு ஒளி எவ்­வ­ளவு அவ­சி­யமோ அதே போல் மனித சமு­தா­யத்­துக்கு பெண்மை மிக­முக்­கி­ய­மா­னது. பெண்­க­ளுக்கு ஏற்­ப­டும் அநீ­தி­க­ளுக்கு குரல் கொடுக்க பார­தி­யைத் தேடு­வதோ, ஆமை­போல் ஆண்­க­ளின் அதி­கார ஓட்­டுக்­குள் காலம் கால­மாய் அடங்கி வாழ்­வதோ பெண் விடு­த­லை­யைப் பெற்­றுத் தராது. உல­கில் படிக்­காத பக்­கங்­கள் எத்­த­னையோ உள்­ளன. அவற்­றைப் தேடிப்­பார்க்க வேண்­டும். சமத்­து­வத்­துக்­கா­கப் போரா­டும் நாம், எமது தேவை­களை நாமே பூர்த்தி செய்­கி­றோமோ எனச் சிந்­திக்க வேண்­டும். எமது சொந்­தக்­கா­லில் நிற்க மன­வ­லிமை பெற வேண்­டும். பெண்­ணின் சிந்­த­னை­க­ளுக்­கும் சுதந்­தி­ர­மான செயற்­பா­டு­க­ளுக்­கும் மதிப்­ப­ளிக்­காத குடும்­பங்­க­ளுக்கு நடுவே பெண்­ணிய சிந்­த­னை­கள் புதை­யுண்டு போகின்­றன என்­கிற உண்­மை­யி­னைப் புரிந்­து­ கொள்ள வேண்­டும்.

மக­ளிர் தினத்­தில் மட்­டும்
மகிழ்ந்­தி­ருத்­தல் தகா­தது

ஆக, பெண்­களே! மக­ளிர் தினத்­தில் மட்­டும் மகிழ்ந்­தி­ராது, வாழும் காலம்­வரை மகிழ்ந்­தி­ருக்­க­வேண்­டும். பெண்­ண­டிமை நிலை­யில் இருந்து மீட்­சி­பெற வேண்­டும். எந்­த­வொரு ஆணுக்­கும் பெண் சம­னா­ன­வள் என்ற உண்­மை­யோ­டும் உணர்­வோ­டும் பால் சமத்­து­வத்­துக்­காய்ப் போராட வேண்­டும். பெண்­ண­டி­மைக்கு முற்­றுப்­புள்ளி இட­வேண்­டும். வன்­மு­றை­க­ளைக் கண்டு குரல்­கொ­டுக்­கும் போதே வன்­மு­றை­யா­ளர்­க­ளின் எண்­ணங்­கள் நசுக்­கப்­ப­டும். பெண், ஆணின் ஆத்­மார்த்த சக்தி என ஆண்­கள் ஏற்­றுக்­கொள்ள வேண்­டும். எதிர்­கால சமூ­க­மா­காது பாலி­யல் சார்ந்த வன்­மு­றை­களை எதிர்கொள்ளாது வாழ இன்றே அனைத்துப் பெண்­க­ளும் விழிப்­ப­டைய வேண்­டும்.

You might also like