கூட்டு அரசின் குழப்பங்களால் மகிந்தவின் கனவு நனவாகிவிடும்

மகிந்­த­வின் மீள் எழுச்சி உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லு­டன் ஆரம்­ப­மா­கி­விட்­டது.சாதா­ர­ண­மா­ன­தொன்­றா­கக் கரு­த­மு­டி­யாத அள­வுக்­குப் பேரெ­ழுச்­சி­யா­க­வும் இது அமைந்­து­விட்­டது. அரச தலை­வர் மற்­றும் தலைமை அமைச்­ச­ரின் தவ­றான அணு­கு­மு­றை­கள் இதற்­குச் சாத­க­மாக அமைந்­து­விட்­டன.

உள்­ளூ­ராட்­சித் தேர்­தல் முடி­வு­கள் மகிந்­த­வுக்­குப் பேரெ­ழுச்­சி­யைக் கொடுத்­துள்ள அதே­வேளை, அர­சுக்­குப் பின்­ன­டை­வை­யும், சங்­க­டத்­தை­யும் ஏற்­ப­டுத்­தி­விட்­டன. இதன் கார­ண­மா­கவே மகிந்த தரப்­பி­னர் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து அர­சுக்கு நெருக்­க­டியை ஏற்­ப­டுத்தி வரு­கின்­ற­னர்.

சுதந்­தி­ரக் கட்­சி­யில்  பொறுப்­புள்ள  ஒரு­வ­ரா­கச் செயற்­பட்­ட­வர்  மைத்­தி­ரி­பால சிறி­சேன

கடந்த 2015ஆம் ஆண்­டு­வரை, மைத்­தி­ரி­பால சிரி­சேன மகிந்­த­வுக்கு அடங்­கிய ஒரு­வ­ரா­கவே காணப்­பட்­டார். நீண்ட கால­மாக அவர் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யில் முக்­கிய பொறுப்­புக்­களை வகித்­துள்­ளார். மிக முக்­கி­ய­மான பொதுச் செய­லா­ளர் பத­வி­யும் அவ­ரையே சென்­ற­டைந்­தது. ஆனால் மகிந்­த­வின் சகோ­த­ரர்­க­ளான பசி­லும், கோத்­த­பா­ய­வும் மகிந்த அரச தலை­வ­ராக வந்­த­தன் பின்­னர் அர­சி­ய­லுக்­குள் நுழைந்­த­வர்­கள்.

தமது தமை­ய­னா­ரின் எல்­லை­யற்ற அதி­கா­ரங்­களை இவர்­கள் தமக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்­ட­னர். மைத்­தி­ரி­பால சிரி­சேன தலைமை அமைச்­சர் பத­வி­யைப் பெறு­வ­தற்­குத் தடை­யாக இருந்­த­வர் பசில் ராஜ­பக்­ச­வெனக் கூறப்­பட்­டது. அது­மட்­டு­மல்­லா­மல், மைத்­தி­ரி­பால சிரி­சேன பல­முறை இவர்­க­ளால் அவ­மா­னப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளார்.

ஆனால் அப்­போது இவ­ரால் ஒன்­றுமே செய்­ய­மு­டி­ய­ வில்லை. பொறுமை காப்­ப­தைத் தவிர வேறே­தும ் செய்­வ­தற்கு அரச தலைவரால் அப்­போது முடி­ய­வில்லை.

இவற்­றுக்­கெல்­லாம் பாடம் கற்­பிப்­ப­தற்கு 2015 ஆம் ஆண்டு ஜன­வரி மாதம் இடம் பெற்ற அரச தலை­வ­ருக்­கான தேர்தல் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுக்கு வாய்ப்­பாக அமைந்­து­விட்­டது. ஏமாற்ற முடி­யா­த­வர், வெல்ல முடி­யா­த­வர் எனப் பெயர்­பெற்ற மகிந்­த­வி­னால் இறுதி நிமி­டம் வரை­யில் இவ­ரது மன­தில் உள்­ள­வற்றை அறிந்து கொள்ள முடி­ய­வில்லை. முட்டை அப்­பத்­தை­யும், கோப்­பி­யை­யும் வழங்கி மைத்­தி­ரியை உப­ச­ரிப்­ப­தற்கு மட்­டுமே அவ­ரால் முடிந்­தது. தனக்கு முன்­னால் பெட்­டிப் பாம்­பாக அடங்­கிக் கிடப்­ப­வர் நாளைக்­குப் பட­மெ­டுத்­துச் சீறப்­போ­கி­றார் என்­பது குறித்­துக்­கூட மகிந்­த­வுக்­குச் சந்­தே­கம் எழ­வில்லை. தேர்­தல் முடி­வு­கள் வௌியானபோது அந்­தச் சாது­ வான மனி­தர் சாதித்­துக் காட்­டி­யதை ஆச்ச­ரி­யத்­தோடு நோக்­கவே மற்ற வர்களால் முடிந்­தது.

அதன்­பின்­னர் ரணில் விக்­கி­ரம சிங்க தலைமை அமைச்­ச­ரா­ன­ தும், சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் இணைந்து நல்­லாட்சி என்ற பெய­ரில் கூட்டு அரசு ஒன்றை உரு­வாக்­கி­ய­தும் நாட­றிந்த விட­யங்­கள். ஆனால் பின்­னர் நடந்த சம்­ப­வங்­கள் நல்­லாட்சி அர­சுக்­குச் சோத­னை­யாக அமைந்து விட்­டன.

சுதந்­தி­ரக் கட்­சி­யைக்  கட்­டுப்­பாட்­டில் வைத்­துக்­கொள்ள அரச தலைவரால் முடி­ய­வில்லை

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் தலை­வ­ராக அவர் உள்ள போதி­லும், அந்­தக் கட்­சியை தமது முழுக் கட்­டுப்­பாட்­டுக்­குள் வைத்­தி­ருப்­ப­தற்கு மைத்­தி­ரி­பால சிரி­சே­னா­வி­னால் முடி­ய­ வில்லை. மறு­பக்­கத்­தில் இவ­ரால் தோற்­க­டிக்­கப்­பட்ட மகிந்த, மைத்­தி­ரி­பால சிறி­சேன மீது தமது வெஞ்­சி­னத்­தைக் காட்­டு­வ­தில் தீவி­ர­மாக ஈடு­பட்­டார். சுதந்­தி­ரக் கட்­சி­யி­ன­ரில் பலரை அவர் தம் பக்­கம் இழத்­துக் கொண்­டார். இவர்­க­ளில் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­க­ளும் அடங்­கி­யி­ருந்­தார்­கள். சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி பிள­வு­பட்­டமை மைத்திரிபாலவைப் பல­வீ­ன­ம­டை­யச் செய்து விட்­டது. கூட்டு அர­சின் இன்­னொரு பங்­கா­ளி­யான ஐக்­கிய தேசி­யக் கட்சி தன்­னைப் பலப்­ப­டுத்­திக் கொள்­வ­தில் தீவி­ர­மாக ஈடு­பட்­டது.

குறிப்­பாக தலைமை அமைச்­ச­ரான ரணில் விக்­கி­ரம சிங்க அர­சில் தமது பிடியை இறுக்­கிக் கொள்­வ­தில் ஈடு­பட்­டார். ஊழல் குற்­றச்­சாட்­டு­க­ளில் இருந்து மகிந்த தரப்­பி­ன­ரைக் காப்­பாற்­று­வ­தில் ரணில் தீவி­ர­மாக ஈடு­ப­டு­வ­தா­கக் குற்­றச் சாட்­டு­க­ளும் எழுந்­தன. மத்­திய வங்கி பிணை­முறி மோசடி விவ­கா­ரத்­தில் ரணி­லுக்­கும் பங்­கி­ருப்­ப­தாக குற்­றச்­சாட்­டு­கள் எழுப்­பப்­பட்­டன. இவை­யெல்­லாம் கூட்டு ஆட்­சிக்­குள் பூகம்­பத்­தையே ஏற்­ப­டுத்­தி­விட்­டன.

இன­வா­தப் பரப்­புரை­க­ளால் சிங்­கள மக்­க­ளது பேரா­த­ரவை
ஈட்­டிய மகிந்த

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லி­லும் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யும், ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யும் தனித்­த­னியே போட்­டி­யிட்­ட­தால், அர­சுக்கு ஆத­ரவு தெரி­வித்து வந்த மக்­கள் பெரும் குழப்ப நிலைக்­குள் தள்­ளப்­பட்­ட­னர். மகிந்த தரப்­பி­னர் இதைத் தமக்­குச் சாத­க­மா­கப் பயன்­ப­டுத்­திக் கொண்­ட­னர். மகிந்­த­வுக்­குக் குறை­வான வாக்­கு­கள் கிடைத்­தால் தமி­ழீ­ழம் தானாக மலர்ந்­து­வி­டு­மென இன­வாத பரப்­பு­ரை­க­ளும் தாரா­ள­மாக இடம் பெற்­றன.

தமி­ழர் ஒரு­வர் எதிர்க்­கட்­சித் தலை­வ­ராக இருப்­பது தொடர்­பா­க­வும் மகிந்த தரப்­பி­னர் குற்­றஞ்­சாட்­டத் தவ­ற­வில்லை. இவை­யா­வும் பெரும்­பான்­மை­யின மக்­க­ளி­டையே அர­சுக்கு எதி­ரான மன­நி­லையை ஏற்­ப­டுத்­தி­யது. இதன் விளை­வைத் தேர்­தல் முடி­வு­கள் தௌிவாக எடுத்­துக்­காட்டி விட்­டன.
குளத்­தைக் கலக்கி அங்­குள்ள மீன்­களை பருந்­துக்கு இரை­யாக்­கி­யது போன்று, நாட்­டின் அர­சி­ய­லி­லும் இடம் பெற்­று­விட்­டது. மைத்­தி­ரி­யும், ரணி­லும் சேர்ந்து குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த, மகிந்த அதைத் தமக்­குச் சாத­க­மாக்­கிக் கொண்­டுள்­ளார்.

அரச தலை­வ­ரும், தலைமை அமைச் ச­ரும் தொடர்ந்து தமக்­குள் முரண் பா­டு­களை நீடித்­துக் கொண்டே போனால், மகிந்­த­வின் கைக்­குள் நாடு சென்­று­வி­டு­வதை எந்­தச் சக்­தி­யா­லும் தடுத்­து­நி­றுத்த முடி­யாது.

You might also like