பூந­க­ரி­யில் கார் விபத்து மருத்­து­வர் உயி­ரி­ழப்பு

பூந­க­ரி­யில் நேற்று இடம்­பெற்ற விபத்­தில் மருத்­து­வர் ஒரு­வர் சம்­பவ இடத்­தி­லேயே உயி­ரி­ழந்­தார் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கர­வெட்­டி­யைச் சேர்ந்த மருத்­து­வர் கே.அர­விந்­தன் (வயது – 71) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார். இவர் மன்­னார் மாவட்ட பொது மருத்­து­வ­ம­னை­யில் மலே­ரியா தடுப்­புப் பிரி­வுக்­குப் பொறுப்­பா­கக் கட­மை­யாற்றி வரு­கி­றார்.

ஏ32 வீதி­யில் பூந­கரி மண்­டக்­கல்­லாறை அண்­மித்த பகு­தி­யில் அவர் பய­ணித்த கார் வேகக்­கட்­டுப்­பாட்டை இழந்து வீதி­யின் மறு­பு­றம் சென்று வீதி­யோ­ரம் நின்ற பெரிய மரத்­து­டன் மோதி விபத்து ஏற்­பட்­டது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

அந்த வழியே பய­ணித்­த­வர்­கள், உணர்­வற்ற நிலை­யில் காணப்­பட்ட அவரை மீட்டு முழங்­கா­வில் மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­த­னர். எனி­னும் அதற்கு முன்­னரே அவர் உயி­ரி­ழந்­து­விட்­டமை உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. அவர் பய­ணித்த கார் கடு­மை­யா­கச் சேத­ம­டைந்­துள்­ளது.

விசா­ர­ணை­மற்­றும் பரி­சோ­த­னைக்­காக அவ­ரது சட­லம் முழங்­கா­வில் மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது என்று பொலி­ஸார் மேலும் தெரி­வித்­த­னர்.

You might also like