காயங்­க­ளு­டன் சேர்க்­கப்­பட்­ட­வர் சிகிச்சை பய­னின்றி உயிரிழந்தார்!!

கிளி­நொச்­சி­யில் இனந்­தெ­ரி­யா­தோ­ரால் தாக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டும் குடும்­பத் தலை­வர் சிகிச்சை பய­ன­ளிக்­காது நேற்று உயி­ரி­ழந்­தார். அவர் அடித்­துக் கொல்­லப்­பட்­டுள்­ளார் என்ற கோணத் தில் விசா­ர­ணையை ஆரம்­பித்­துள்­ள­தா­கக் கிளி­நொச்­சிப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

கிளி­நொச்சி உத­ய­ந­க­ரைச் சேர்ந்த இரத்­தி­னம் துரை­சிங்­கம் (வயது – 71) என்­ப­வரே உயி­ரி­ழந்­தார். அவ­ரது குடும்­பத்­தி­னர் கன­டா­வில் வாழ்ந்து வரு­கின்­ற­னர். வழ­மை­போன்று அவர் தனது காணி­யைப் பார்­வை­யிட வந்­தி­ருந்­த­போது சம்­ப­வம் இடம்­பெற்­றுள்­ளது.

அங்கு கட்டி முடிக்­கப்­ப­டாத வீடு ஒன்­றுக்கு அரு­கில் அவர் தாக்­கப்­பட்­ட­தற்­கான அடை­யா­ளங்­கள் காணப்­ப­டு­கின்­றன. அந்த இடத்­தில் குரு­திக் கறை­கள் காணப்­ப­டு­கி­றன. வீட்­டுத் தோட்­ட­மும் இடம்­பெ­று­கி­றது. அடிக்­கப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தா­கச் சந்­தே­கிக்­கும் தடி ஒன்­றை­யும் வீட்­டுக்கு அரு­கில் புற்­க­ளுக்­குள்­ளி­ருந்து பொலி­ஸார் தட­யப் பொரு­ளாக எடுத்­துள்­ள­னர். கொல்­லப்­பட்­ட­வ­ரது என்று நம்­பப்­ப­டும் பாதணி உள்­ளிட்ட சில­வற்­றை­யும் அங்கு காணக்­கூ­டி­ய­தாக உள்­ளது.

“அவர் அமெ­ரிக்­கக் குடி­யு­ரிமை பெற்­ற­வர். நேற்­று­முன்­தி­னம் மாலை இனந்­தெ­ரி­யா­தோ­ரால் தாக்­கப்­பட்­டுள்­ளார். அய­ல­வர்­களே அவரை கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னை­யில் சேர்த்­துள்­ள­னர். சிகிச்சை பய­ன­ளிக்­காது அவர் நேற்று முற்­ப­கல் உயி­ரி­ழந்­தார். அவர் தாக்­கப்­பட்ட இடத்­தைக் குற்­றப் பிர­தே­ச­மாக அடை­யா­ளப்­ப­டுத்­திப் பொலி­ஸார் விசா­ரணை நடத்­தி­னர். எனி­னும் துப்­புத் துலங்­க­வில்லை. இது­வரை எவ­ரும் கைது செய்­யப்­ப­ட­வு­மில்லை. விசா­ரணை தொடர்­கி­றது” என்று கிளி­நொச்­சிப் பொலி­ஸார் தெரி­வித்­த­னர். சட­லம் கிளி­நொச்சி மருத்­து­வ­ம­னை­யில் வைக்­கப்­பட்­டுள்­ளது.

You might also like