கிளிநொச்சியில் மகளிர் தின ஊர்வலம்

வடக்கு மாகாணத்தின் பன்னாட்டு மகளிர் தின நிகழ்வுகள் இன்று கிளிநொச்சியில் இடம்பெற்றது.

கிளிநொச்சி பழைய கச்சேரிக்கு முன்பாக இருந்து மகளிர் தின ஊர்வலம் ஆரம்பித்து கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்துக்குச் சென்றடைந்தது. அங்கு மண்டப நிகழ்வுகள் இடம்பெற்றன.

வடக்கு மாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், இலங்கை மற்றும் மாலைதீவுக்கான ஜரோப்பிய ஒன்றியத்தின் பதில் தூதுவர் போல், இலங்கைக்கான தென்னாபிரிக்காவின் உயரஸ்தானிகர் றொபினா பி. மார்க்ஸ், வடக்கு மாகாண விவசாய அமைச்சர் கந்தையா சிவநேசன், மாகாண சபை உறுப்பினர் ப.அரியரத்தினம், கிளிநொச்சி மாவட்டச் செயலர் சுந்தரம் அருமைநாயகம் மற்றும் தொண்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள், வடக்கு மாகாணம் தழுவிய ரீதியில் பெண்கள் அமைப்புகள் பெண்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

You might also like