உள்ளூராட்சித் தேர்தல் உணர்த்திய தென்ன?

நடந்து முடிந்த உள்­ளூ­ராட்சி தேர்­தல், பல பிர­தி­ப­லிப்­புக்­க­ளை­யும் , பாடங்­க­ளை­யும்,தத்­து­வங்­க­ளை­யும்,அர­சி­யல் வழி­க­ளை­யும் தமிழ்க் கட்­சி­க­ளுக்கு, குறிப்­பாக கூட்­ட­மைப்­புக்கு விட்­டுச்­சென்­றி­ருப்­பதை நின்று நிதா­ன­மாகச் சிந்தித்துக் கவ­னத்­தில் கொண்­டாக வேண்­டி­யுள்­ளது. தென்­னி­லங்­கைக்­கும் இது பொருந்­தும்.

புதிய தேர்­தல் முறை­மை­யி­னால் வடக்­கில், குறிப்­பாக யாழ்ப்­பா­ணத்­தில், தமிழ்த்­தே­சி­யக்­கூட்­ட­மைப்­புக்குப் போட்­டி­யாக அதற்கு அண்­மித்த ஆச­னங்­களை தமிழ்த் தேசிய மக்­கள் முன்­னனி பெற்­றி­ருப்­பதை அவ­தா­னத்­துக்­கும் ,அதன் பின்­னான அர­சி­யல் ஆய்­வுக்­கும் உட்­ப­டுத்த வேண்­டும்.

வட்­டார ரீதி­யில் பல­வற்­றில், முன்­ன­ணி ­யின் வேட்­பா­ளர்­கள் தோல்வி கண்­டி­ருந்­தா­லும், அவர்­கள் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­க­ளின் மொத்த எண்­ணிக்­கைக்கு ஏற்ப அதிக ‘போனஸ்’ ஆச­னங்­களைப் பெற்று கூட்­டமைப் பின் மொத்த ஆசன எண்­ணிக்­கையை, முன்­னணி அண்­மித்­த­தாக நெருங்­கி­யி­ருப்­பது அவ­தா­னத்­துக்­கு­ரி­யது.

அவர்­க­ளுக்­கான வாக்கு வங்­கி­யில் சிறு அதி­க­ரிப்பு ஏற்­பட்­டதை ஏற்­றுக்­கொள்­ளத்­தான் வேண்­டும். உண்­மை­யில் அந்த வாக்­கு­வங்கி அதி­க­ரிப்­புக்­குக் கார­ண­கர்த்­தா­வாக இருந்­தது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு என்­ப­தில் மாற்­றுக்­க­ருத்­துக்கு இட­மே ­இல்லை.

கூட்டமைப்பின் போக்கில் ஏற்பட்ட மாற்றமே ஆதரவு வீழ்ச்சிக்குக் காரணம்

முன்­ன­ணி­யி­னர் தங்­கள் கொள்­கை­களை மக்­க­ளுக்கு புரி­ய­வைத்­துப் பெற்­றுக்­கொண்ட வாக்­கு­கள் என்­ப­தற்கு மாறாக, கூட்­ட­மைப்­பின் சில போக்கு மாற்ற தளம்­பல் நிலை­க­ளால் அதன் வாக்கு வங்கி தளம்­பல் கண்­டமை தர்க்க ரீதி­யா­னது. கூட்­ட­மைப்பு மீது அதி­ருப்­திக்கு உள்­ளான வாக்­கா­ளர்­க­ளது வாக்­கு­கள் முன்­ன­ணி ­யால் கொள்­ளை­யி­டப்­பட்டுள்ளன.

உண்­மை­யில் தமிழ் தேசி­யப் பேர­வைக்கு கிடைத்த வாக்கு வங்கி வளர்ச்­சிக்­கான கணி­ச­மான பங்களிப்பு தமிழ்­தே­சி­யக் கூட்­ட­மைப்­புக்கு உண்டு என்­ப­தில் தவ­றே­து­மி­ருக்­காது.அதற்­கா­கப் பல கார­ணங்­களை அடுக்­கிக்­கொண்டே போக­லாம்.

முத­ல­மைச்­ச­ருக்­கெ­தி­ரான நம்­பிக்­கை­யில்­லாப் பிரே­ர­ணையை அவ­ச­ர­மா­க­வும், அத்­தோடு அர­சி­யல் அரங்­கில் முத­ல­மைச்­சர், மக்­கள் செல்­வாக்­குப் பலம் பெற்றிருந்த வேளை­யில் முன்­னெ­டுத்­தமை;

ஒயிலில் கழிவு நீர் கலப்புப் பிரச்சினை தலை­தூக்­கிய போது வெளிப்­ப­டைத் தன்மை பேணாமை;

காணா­மல் போன உற­வு­கள் போராட்­டம் நடத்­தி­ய­போது அவர்­க­ளைத் திருப்­திப்­ப­ டுத்­தும் வகை­யில் பங்­க­ளிக்­காமை;

காணி விடு­விப்­புப் போராட்­டங்­க­ளில் அர­சுக்கு அழுத்­தம் அதி­க­ள­வில் தெரி­விக்­கத் தவறியமை;

அர­சி­யல் கைதி­கள் நிலைப்­பாட்­டில் ஒரு புள்­ளி­யில் குவிந்து செயற்­ப­டாமை;

ஆச­னப் பங்­கீ­டு­க­ளில் இர­க­சிய பேச்­சுக்களை முன்­னெ­டுத்து காய்­களை நகர்த்­தாது, ஊட­கப் பெரு­வெ­ளிக்­குச் செய்­தி­க­ளைக் காவி வந்­தமை;

சாவ­கச்­சே­ரி­யில் அமைப்­பா­ளர் அருந்­த­வ­பா­லனை பொது மக்­க­ளுக்கு வெளிப்­ப­டை­யாகத் தெரி­யும்­படி புறக்­க­ணிப்­புக்கு உட்­ப­டுத்­தி­யமை;

ஊட­கங்­க­ளுக்கு முன்­னான பேச்­சுக்­க­ளில் தமிழ்­தே­சிய பற்­று­றுதி கணி­ச­மாக வெளிப்­ப­டுத்­தப்­ப­டாமை,மற்­றும் சபை­ய­டக்­க­மற்ற பேச்­சுக்­கள் என்­பவை மக்­க­ளைக் கவர்ந்­தி­ழுக்கத் தடை­யாக அமைந்­தமை;

அர­ச­மைப்பு சட்ட விவ­கா­ரங்­களை மாற்­ற­ணி­கள் கூட்­டங்­கள் போட்டு விமர்­ச­னங்­க ளுக்கு உட்­ப­டுத்­தி­ய­போது, பகி­ரங்க மக்­கள் சந்­திப்­புக்­களை ஏற்­ப­டுத்தி அவ்­வப்­போது தெளி­வூட்­டல்­களை ஏற்­ப­டுத்­தத் தவ­றி­யமை;

இனப்­ப­டு­கொலை விட­யத்­தில் பன்னாட்டு விசா­ர­ணை­களை துரித கதி­யில் முன்­னெ­டுக்­காமை;

பன்னாட்டு விசா­ர­ணைக்­காக உறு­தி­யான கோரிக்­கையை முன்­னெ­டுக்­காமை;

மாகாண சபைக்­குள்­ளான குழப்­பங்­கள், நிதித் திரும்­பல்­கள், மக்­களை அதி­ருப்­திக்­குள்­ளா­கி­யமை;

கட்­சிக்­குள் பழைய ஆளு­மை­கள் ஒதுங்­கி­யி­ருந்து, முடி­வு­கள் ஒரு மையத்­தில் குவிக்­கப்­ப­டாமை;

வேட்­பா­ளர் தெரி­வில் பல பார­பட்­சங்­கள் காட்­டப்­பட்­டமை;

மாந­கர சபை மேயர் வேட்­பா­ளர் நிய­மிப்­பின்­போது கட்­சிக்­குள்­ளேயே பல்­வேறு மாறுபட்ட கருத்­துக்­கள் எழுந்து, ஒரு முடி­வெ­டுக்­கக் கூடிய ஆற்­றல் அற்ற தலை­மை­கள் என ஊட­கங்­கள் வாயி­லா­கத் தம்மை வெளி­யு­ல­குக்கு வெளிச்­சம் போட்­டுக் காட்­டி­யமை;

இளை­ஞர்­க­ளுக்­கான அர­சி­யல் கள­வெ­ளியை நிரப்­பத் தவ­றி­யமை, இளை­ஞர்­கள் முன்­வந்­த­போ­தும் வயோ­தி­பர்­களை முன்­னி­றுத்­தி­யமை;
என எத்­த­னையோ கார­ணங்­களை அடுக்­கிக்­கொண்டு போக­லாம்.

வாக்கு வங்கியை அதிகரிக்க
கடும் முயற்சியே அவசியம்

உண்­மை­யில் வீட்­டுக்­கான வாக்கு வங்­கியை நம்­பி­யி­ருந்து. கண்­மூ­டித்­த­ன­மான அர­சி­ய­லைச் செய்­யக் கூடிய அர­சி­யல் கள­மும் சூழ்­நி­லை­யும் இனி­மேல் அமை­யாது; அத்­தோடு அது மாற்­றி­ய­மைக்­கப்­பட வேண்­டி­யது என உணர்த்தி கடந்­தி­ருக்­கி­றது அண்­மைய தேர்­தல்.
அதை­விட மக்­க­ளுக்­கான அன்­றாட தேவை­ க­ளுக்­கப்­பால், எங்­க­ளுக்­கான தேசி­யக் கொள்கை, எங்­க­ளுக்­கான நிரந்­த­ரத் தீர்வு, என்­ப­வற்­றுக்­காக விட்­டுக்­கொ­டுப் பில்­லாத தென்­னி­லங்­கை­யோடு சோரம் போகாத, தர்க்­கித்து, கர்­சிக்­கும் தலை­மை­களை தமி­ழர்­கள் எப்­போ­தும் விரும்­பு­கி றார்­கள் என்­பதை படம் போட்டு காட்டிச் சென்­றி­ருக்­கி­றது அண்­மைய உள்­ளூ­ராட்­சித் தேர்­தல்.
உண்­மை­யில் கூட்­ட­மைப்­பில் பல கட்­சி­கள் இருந்­தால் அவற்­றுக்­குள் குழப்­பங்­கள் வரு­வது தவிர்க்­க­மு­டி­யா­தது தான் .

எனி­னும் அவை மூடிய அறை­க­ளுக்­குள் பேசித் தீர்க்­கப்­பட வேண்­டு­மே­யொ­ழிய, ஊட­கப் பெரு­வெ­ளிக்கு காவி வரப்­ப­டு­வ­தால் மக்­க­ளின் அதி­ருப்­திக்கு உள்­ளா­வதற்கு வழி வகுக்கும். அதி­ருப்­தி­ய­டைந்த வாக்­கு­கள் சிதறி, இன்­னொரு தேசி­யத்­தைப் பிர­தி­ப­லிக்­கும் கட்­சிக்கு விழுந்­தி­ருப்­பது தௌிவா­கப் புலப்­ப­டு­மொன்று.

அத்­தோடு இலங்கை அர­சி­யல் வர­லாற்­றில், எதிர்க்­கட்­சித் தலை­வர் எனும் பத­வியை கூட்­ட­மைப்­பின் தலை­வர் இரா.சம்­மந்­தன் கடந்த 3 வரு­டங்­க­ளாக வகித்து வரு­கின்றபோதி­லும், அந்­தப் பத­வியை அர­சி­யல் கைதி­க­ளின் விடு­தலை, காணா­மல் போனோ­ரின் தேடு­த­லுக்­கான விடை,காணி விடு­விப்பு என்­ப­வற்­றுக்­காக பேரம் பேசும் சக்­தி­யா­க­வும், தமி­ழர் தேவையை நாடா­ளு­மன்­றத்­துள் கர்­சிக்­கும் பத­வி­யாக , கிருஸ்ண பர­மாத்­மா­வின் கையி­லி­ருக்­கும் சக்­க­ர­மாக பாவிக்க சம்­பந்­தன் தவ­றி­யி­ருக்­கி­றார்.

இவை­யெல்­லாம் தவறு; புதிய அர­ச­மைப்பு உரு­வாக்க முயற்­சி­கள் தீவிரமாக நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்றபோது எதிர்ப்­புக்­களை வெளிப்­ப­டுத்­தல் அழ­கல்ல என்று சிறு கார­ணத்தை முன்­வைத்து கூட்ட மைப்பு நகர்ந்­து­வி­ட­மு­டி­யாது. எதிர்க்­கட்­சித் தலை­வர் என்ற பத­விக்கு சில வரை­வி­லக்­க­ணங்­கள் உள்ளன. அந்­தப் பத­வியை அலங்­க­ரிக்­கும்­போது அந்த வரை­வி­லக்­க­ணங்­கள் பிச­காது உரி­ய­வாறு கடைப்பிடிக் கப்பட வேண்­டும்.

கூட்டமைப்பின் தவறுகளைத் திருத்தும் முனைப்பில் தமிழ்மக்கள்

இவ்­வாறு கூட்­ட­மைப்பு விட்ட, விடு­கென்ற பிழை­க­ளைத் திருத்­து­வ­தற்கு அர­சி­யல் ஸ்திரத்­தைப் பேண மக்­கள் இந்­தத்­தேர்­த­லில் தமது வாக்கு என்ற அஸ்­தி­ரத்­தைப் பிர­யோ­கித்­தி­ருப்­ப­தைத் தெளி­வா­கப் புரிந்து கொள்ள வேண்­டும். கூட்­ட­மைப்பு விட்ட தவ­று­க­ளால் அதி­ருப்தி கொண்ட மக்­கள், வேறு வழி­யில்­லா­மல் மற்­றைய கட்­சி­க­ளுக்கு வாக்­க­ளிக்க விரும்­பா­மல், முன்­ன­ணி­யி­ன­ருக்கு இட்­டி­ருக்­கி­றார்­கள் என்­பது கண்­கூடு.

அதற்­காக முன்­ன­ணி­யின் கொள்கை கோட்­பா­டு­க­ளைப் புரிந்து கொண்­ட­தால், அதற்கு அளிக்­கப்­பட்ட வாக்­கு­க­ளாக அவற்­றைச் கரு­தி­வி­ட­வும் முடி­யாது.
சபை­களை எவ­ரும் பெரும்­பான்­மை­யு­டன் அமைக்க முடி­யா­மல் போக வேண்டுமென எண்ணி வேண்­டு­மென்றே மக்­கள் இத்­த­கைய விதத்­தில் ஆணை­வ­ழங்­கி­யி­ருக்­கி­றார்­கள். ஏனெ­னில் காலத்­தால் காப்­பாற்­றப்­பட வேண்­டிய, கூட்­ட­மைப்­பின் முக்­கி­யத்­து­ வம் தமிழ் மக்­க­ளுக்கு நன்­றாகத் தெரி­யும்.

எனவே, அதற்­காக கூட்­ட­மைப்பு விட்ட தவ­று­களைக் குத்­திக்­காட்­டி­ய­தோடு, உட­னடி மற்­றும் பின்­னடி மாற்­றங்­களை கூட்­ட­மைப்­புக்­குள் கொண்­டு­வர வேண்­டும் என மக்­கள் தமது வாக்­கு­க­ளால் உணர்த்தி வைத்­துள்­ள­னர்.
எனவே கூட்­ட­மைப்­பின் இன்­றைய முக்­கிய பணி, தமது தரப்­பின் தவ­று­க­ளைச் சரி­செய்து, வளைந்த நெளிந்த தண்­ட­வா­ளங்­களை நேராக்கி, வண்­ட­வா­ளங்க­ளைத் தூக்­கி­யெ­றிந்து, தமி­ழர்­க­ளுக்­கான நிரத்­த­ரத் தீர்­வைக் கூராக்கி, சித­றிய வாக்­கு­களை மீள உள்வாங்கி கூட்­ட­மைப்­பெ­ னும் புகை­யி­ர­தத்தை கடு­க­தி­யில் தமி­ழர் விடு­த­லைக்­காக பய­ணிக்க வைக்க வேண்­டு­மென்­பதே தமிழ்­மக்­க­ளின் வேணவா.

You might also like