பிறி­தொரு விருதை இழந்­துள்­ளார் சூகி

அமெ­ரிக்­கா­வின் புகழ்­பெற்ற ‘ஹோலோ­காட்ஸ்’ அருங்­காட்­சி­ய­கம்
மியன்­மார் அர­சின் தலைமை ஆலோ­ச­கர் ஆங் சாங் சூகிக்கு வழங்கிய ‘எல்லி வெய்ல்ஸ்’ விருதை திரும்­பப் பெறு­வ­தாக அறி­வித்­துள்­ளது. மியன்­மா­ரில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு எதி­ரான இனச் சுத்­தி­க­ரிப்பை நிறுத்த முன்­வ­ரா­ததை அடுத்தே இந்த நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக அது குறிப்பிட்டுள் ளது.

‘‘மியன்­மா­ரில் ரொஹிங்ய இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு எதி­ராக நடத்­தப்­பட்ட இனப் படு­கொ­லை­யின்­போது, ஆங் சாங் சூகி கருத்து ஏதும் தெரி­விக்­கா­மல் மவு­னம் காத்­தார். ஆங் சாங் சூகி­யின் தேசிய லீக் ஜன­நா­ய­கக் கட்சி, இந்த இனப்­ப­டு­கொ­லை­யைக் கண்­டிக்­கத் தவ­றி­யது. ஐக்­கிய நாடு­கள் சபை­யின் விசா­ர­ணைக்­கும் சூகி ஒத்­து­ழைக்­க­வில்லை. ரொஹிங்ய இஸ்­லா­மி­யர்­க­ளுக்கு எதி­ரான வன்­மு­றை­கள் தொடர்­பான செய்தி சேக­ரிப்­புப் பணி­யில் ஈடு­பட்ட செய்­தி­யா­ளர்­க­ளும் தாக்­கப்­பட்­ட­னர்’ ’இதை­ய­டுத்தே விருது திரும்­பப் பெறப்­ப­டு­கி­றது’ என்று அருங்­காட்­சி­ய­கம் விளக்­கம் அளித்­துள்­ளது.

முன் ன­தாக லண்­டன் நக­ரம், ஒக்ஸ்­பேர்ட் பல்­க­லைக் கழ­கம் ஆகி­ய­ன­வும் தாம் வழங்­கிய விரு­து­களை திரும்­பப் பெற்­றமை குறிப்­பி­டத்­தக்­கது.

You might also like