பிறந்த சிசு மாயம் – வவுனியாவில் பரபரப்பு!!

வவுனியா பொது மருத்துவமனையில் பிறந்து இரண்டு நாள்களான சிசுவொன்று  இன்று முற்பகல் 11 மணியளவில் காணாமல் போயுள்ளது. மருத்துவமனையின் 5 ஆம் இலக்க விடுதில் கடந்த 7 ஆம் திகதி இரவு பிறந்த ஆண் சிசுவே  காணாமல் போயுள்ளது.

இந்தச் சம்பவத்தால் மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பொகஸ்வெவே பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவரின் ஆண் சிசுவே காணாமல் போயுள்ளது.

மருத்துவமனையில் பொருத்தப்பட்ட சி.சி.ரி கமராவின் உதவியுடன் சிசுவைத்  திருடியவரை தேடும் நடவடிக்கை நடைபெற்று வருகிறது என்று மருத்துவமனைத் தகவல்கள் தெரிவித்தன.

You might also like