வவு­னியா விபத்­தில் ஒரு­வர் உயி­ரி­ழப்பு

வவு­னி­யா­வில் நேற்று மாலை இடம்­பெற்ற வாகன விபத்­தில் ஒரு­வர் உயி­ரி­ழந்­தார். 4 பேர் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் வவு­னியா வைத்­திய சாலை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

வவு­னியா செட்­டி­கு­ளம் மெனிக்­பாம் கல்­லா­றுப் பாலத்­துக்கு அரு­கில் மாலை 4 மணி அள­வில் விபத்து இடம்­பெற்­றது. நீர் கொழும்­புப் பகு­தி­யில் இருந்து மன்­னார் மடு கோயில் நோக்­கிச் சென்­று­கொண்­டி­ருந்த ஹயஸ் ரக வானும், மெனிக் பாம் பகு­தி­யில் இருந்து செட்­டி­கு­ளம் நோக்­கிச் சென்ற மோட்­டார் சைக்­கி­ளும் நேருக்கு நேர் மோதின என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர்.

மோட்­டார் சைக்­கி­ளில் பய­ணித்­த­வர்­கள் தூக்­கி­வீ­சப்­பட்­ட­னர். கயாஸ் வான் வீதி­யோ­ரம் நின்ற மரத்­தில் மோதி­யது. இதில் மோட்­டார் சைக்­கிளை ஓட்­டிச்் சென்ற ஏ.நவ­ராயா (வயது 33) என்ற இளை­ஞர் உயி­ரி­ழந்­தார்.

மோட்­டார் சைக்­கி­ளின் பின்­னால் இருந்­த­வர், வாக­னத்­தின் சாரதி மற்­றும் வானில் இருந்த இரு பெண்­கள் என மொத்­த­மாக 4 பேர் படு­கா­ய­ம­டைந்­த­னர். அவர்­கள் வவு­னியா வைத்­தி­ய­சா­லை­யின் விபத்­துப் பிரி­வில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

இதில் மோட்­டார் சைக்­கி­ளில் பின் இருக்­கை­யில் இருந்து வந்த மெனிக்­பாம் பகு­தி­யைச் சேர்ந்த சண்­மு­க­நா­தன் என்­ப­வ­ரின் நிலை மிக­வும் கவ­லைக்­கி­ட­மாக உள்­ளது என்று வைத்­திய சாலை வட்­டா­ரங்­கள் தெரி­வித்­தன. விபத்­துச் சம்­ப­வம் தொடர்­பாக செட்­டி­கு­ளம் போலி­ஸார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­ட­னர்.

You might also like