மன்னாரிலும் பள்ளிவாசலுக்கு பாதுகாப்பு!!

மன்­னார் மாவட்­டத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்­கும் நேற்று வெள்­ளிக் கிழமை முதல் ஆயு­தம் தாங்­கிய இரா­ணு­வத்­தி­ன­ரின் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

கண்­டி­யில் முஸ்­லிம் க­ளுக்கு எதி­ராக வெடித்த இனக் கல­வ­ரத்­தை­ய­டுத்து நாட்­டின் பல பகு­தி­க­ளி­லும் பள்­ளி­வா­சல்­க­ளுக்கு இரா­ணு­வப் பாது­காப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது.

வடக்­கில் வவு­னியா, கிளி­நொச்சி மாவட்­டங்­க­ளி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்கு நேற்­று­முன்­தி­னம் பாது­காப்பு வழங்­கப்­பட்­டி­ருந்­தது. இந்த நிலை­யில் மன்­னார் மாவட்­டத்­தி­லுள்ள பள்­ளி­வா­சல்­க­ளுக்­கும் நேற்று முதல் பாது­காப்பு வழங்­கப்­பட்­டது.

மன்­னார் மாவட்­டத்­தில் நேற்­றுத் தொழு­கை­யின் பின்­னர் போராட்­டங்­கள் இடம்­பெ­ற­லாம் என்ற அச்­சத்­தின் கார­ண­மாக பொலிஸ் சுற்­றுக்­கா­வ­லும் அதி­க­ரிக்­கப்­பட்­டி­ருந்­தது. தொழு­கை­யின் பின்­னர் வீதி­க­ளில் மக்­க­ளைக் கூட்­ட­மாக நிற்­க­வேண்­டாம் என்று பள்­ளி­வா­சல் நிர்­வா­கத்­தி­னால் அறி­விக்­கப்­பட்­டது.

You might also like