வெறும் சடங்­கோடு நின்­று ­வி­டா­தீர்­கள்!!

மற்­றொரு பெண்­கள் தினம் கடந்து சென்­றி­ருக்­கின்­றது. ஆங்­காங்கே பல நிகழ்­வு­கள் நடந்­தி­ருக்­கின்­றன. அவற்­றில் முக்­கி­ய­மான பல­வும் அரச செல­வி­லும், ஏற்­பாட்­டி­லும் நடந்து முடிந்­தி­ருக்­கின்­றன. பெண்­கள் தினம் அரச நிகழ்­வாக எப்­படி மாற்­றம் பெற்­றது என்­பது அறிந்­து­கொள்­ளப்­ப­ட­வேண்­டிய வேடிக்கை விநோ­தம்.

உல­கின் பல நாடு­க­ளி­லும் தமக்­குச் சம மதிப்­புத் தரப்­ப­ட­வேண்­டும் என்று வலி­யு­றுத்தி பங்­குனி 8ஆம் நாள் ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­தி­யி­ருக்­கி­றார்­கள். ஒப்­பீட்­ட­ள­வில் பெண்­க­ளின் உரி­மை­கள் அதி­க­ள­வில் மதிக்­கப்­ப­டும் ஸ்பெய்ன், பிரான்ஸ் போன்ற மேற்கு நாடு­க­ளி­லேயே இந்த ஆர்ப்­பாட்­டங்­கள் இடம்­பெற்­றன. ஊதிய உயர்வு உள்­ளிட்ட பல கோரிக்­கை­கள் வலி­யு­றுத்­தப்­பட்­டன.

இது மேலும் கன­தி­யா­கச் செயற்­ப­டு­வ­தற்­கான தரு­ணம் என்­கிற தொனிப் பொரு­ளி­லேயே இந்த ஆண்டு பெண்­கள் தினம் கொண்­டா­டப்­பட்­டது. எனி­னும் அது­போன்ற எந்­த­வொரு தனித்­து­வ­மான வலி­யு­றுத்­தல்­க­ளை­யும்,கோரிக்­கை­க­ளை­யும் முன்­வைக்­கா­ம­லேயே தமிழ் பேசும் மக்­கள் மத்­தியில் பெண்­கள் தினம் நிகழ்ந்து முடிந்­தி­ருக்­கி­றது. மிக­வும் கவ­லைக்­கு­ரிய விட­யம் இது.

போரா­லும் போரின் பின்­ன­ரான சூழல்­க­ளா­லும் இலங்­கை­யில் பெரி­தும் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் பெண்­கள். வடக்கு, கிழக்­கில் மட்­டும் போர் மற்­றும் வாழ்க்­கைச் சூழல்­க­ளால் சுமார் 80 ஆயி­ரம் பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­கள் இருக்­கின்­றன என்று புள்­ளி­வி­வ­ரங்­கள் கூறு­கின்­றன. நாட்­டில் வறு­மை­யால் வாடும் குடும்­பங்­க­ளில் இந்­தப் பெண் தலை­மைத்­து­வக் குடும்­பங்­க­ளுக்கு அதிக இடங்­க­ளுண்டு.

காணா­மற்­போன தமது பிள்­ளை­க­ளை­யும் கண­வன்­க­ளை­யும் தேடித் தேடி தொடர் போராட்­டங்­களை நடத்­து­ப­வர்­க­ளா­க­வும் பெண்­களே இருக்­கி­றார்­கள். இந்­தப் போராட்­டங்­க­ளுக்­காக அவர்­கள் ஒரு ஆண்­டைக் கடந்­தும் வீதி­ யோ­ரத்­தில் இருக்­கி­றார்­கள். இருக்­கி­ற­வர்­க­ளுக்­காக உழைத்துக் குடும்­பத்­தைக் காப்­பாற்­ற­வேண்­டும், காணா­மற்­போ­ன­வர்­க­ளைத் தேட­வேண்­டும் என்று இரு மடங்கு பாரத்­தைச் சுமப்­ப­வர்­க­ளாக அவர்­கள் மாறி­யி­ருக்­கி­றார்­கள். இத்­த­னைக்­கும் சம்­ப­ளத்­தில் ஆண்­க­ளுக்கு நிக­ரான கொடுப்­ப­னவு அவர்­க­ளுக்­குக் கிடைப்­ப­தில்லை.

சம்­பள விட­யத்­தில் அரச அலு­வ­ல­கங்­க­ளில் பாகு­பா­டு­கள் இல்லை. ஆனால், அதற்கு வெளி­யில் பெரும் இடை­வெளி இருக்­கின்­றது. இன்­றும் குடும்ப வன்­மு­றை­க­ளால் அதி­கம் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­க­ளா­கப் பெண்­களே இருக்­கி­றார்­கள். பொது வெளி­யி­லும் குடும்­பங்­க­ளி­லும் அவர்­கள் தொடர்ந்­தும் ஒடுக்­கு­மு­றைக்கு உள்­ளாகி வரு­கின்­றார்­கள் என்­றா­லும் பெண்­கள் தினங்­கள் அவற்­றைக் குறித்­துப் பேச மறுப்­ப­தன் தார்ப்­ப­ரி­யத்­தைப் புரிந்­து­கொள்ள முடி­ய­வில்லை.

பெண்­கள் உரி­மை­களை நிலை­நாட்­டு­வது மட்­டுமே உல­கப் பெண்­கள் தினத்­தின் நோக்­க­மல்ல என்று சொல்­லப் ப­டு­கின்­றது. சமூ­கத்துக்கும் மனித குலத்துக்கும் பெண்­கள் ஆற்­றிச் சென்ற பங்கு பணி­க­ளைப் பெரு­மைப்­ப­டுத்­து­வ­தும் இந்­தத் தினத்­தின் நோக்­கத்­தில் ஒன்று. அதா­வது ஊர்­க­ளி­லும், மாவட்­டங்­க­ளி­லும், மாகா­ணங்­க­ளி­லும், நாடு­க­ளி­லும் உயர்ந்த சேவை­யாற்­றிய பெண்­க­ளைத் தூக்கி வைத்­துக் கொண்­டா­டவேண்­டும்.

தமிழ் பேசும் மக்­கள் மத்­தி­யில் நடந்து முடிந்­தி­ருக்­கும் பெண்­க­கள் தினங்­கள் அத்­த­கைய வெளி­ப்பா­டு­க­ளை­யும் மிக மிகக் குறைந்த அள­வி­லேயே கொண்­டி­ருந்­தன. உல­கின் பல நாடு­க­ளி­லும் பெண்­கள் தங்­கள் உரி­மைக்­கா­கப் போரா­டிக் கொண்­டும் உன்­னத சேவை­யாற்­றிய பெண் களைக் கொண்­டா­டிக்­கொண்­டும் இருக்­கை­யில் நாம் வெற்­றுச் ச­டங்­காக அந்­தத் தினத்­தைக் கடந்து சென்­று­கொண்­டி­ருக்­கி­றோம் என்­கிற உண்மை அச்­ச­மூட்­டக்­கூ­டி­யது.

உரி­மைக்­காகத் தங்­கள் இன்­னு­யி­ரை­யும் மாய்க்­கத் துணிந்த பெண்­க­ளை­யும் அவர்­க­ளின் உன்­னத தீரத்­தை­யும் கண்ட பின்­ன­ரும் பெண்­கள் தினம் ஒரு பன்­னாட்­டுச் சடங்­கா­கக் கடந்­து­செல்­வதை ஏற்க முடி­ய­வில்லை. எல்­லோ­ரும் சிந்­தித்­துச் செயற்­ப­ட­வேண்­டிய தரு­ணம் இது. சிந்­திப்­போம்! செயற்­ப­டு­வோம்!

You might also like