விடுதலையும் சுயநிர்ணயமும் தேசிய இனமொன்றின் அடிப்படை உரிமைகள்

தேசிய இனங்­க­ளின் பண்­பாட்­டுக் கூறு­கள், பழக்க வழக்­கங்­கள், விளை­யாட்­டுக்­கள், வழி­பாட்டு முறை­க­ளின் பின்னணியிலே, அந்த இனக் குழு­மங்­க­ளின் தொன்­ம­மும், மர­பும் தொடர்ந்து பேணப் ப­டு­வது மட்­டு­மல்லாமல், இன அழிப்­புக்கு எதி­ரான தொடர் பொறி­மு­றை­கள் உற்­பத்தி செய்­யப்­பட்­டும் கொண்­டி­ருக்­கும்.

தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னை­க­ளின் முக்­கிய ஆய்வு,தமி­ழர் அவ­லங்­கள் என்ற வகை­யிலே ஆயி­ரக்­க­ணக்­கான அவ­லங்­க­ளை­யும் இன்­னல்­க­ளை­யும் தமி­ழர்­கள் பல்­வே­று­பட்ட ரீதி­யல் அனு­ப­வித்து வரு­வதை வெளிப்­ப­டுத்தி நிற்­கி­றது. இலங்கை சுதந்­தி­ர­ம­டை­வ­தற்கு முன்­ன­ரும், சுதந்­தி­ர­ம­டைந்த பின்­ன­ரும், தமி­ழன் ஏதோ­வொரு வகை­யில் அவ­லங்­க­ளைச் சந்­தித்­துக் கொண்­டி­ருக்­கின்­றான்.

அது இறந்­த­கா­லம் தொட்டு, நிகழ்­கா­லம் வரை­யும் நடந்து கொண்­டி­ருக்­கின்­றது. குறிப்­பாக 1983ஆம் ஆண்டு மற்­றும் அதன் பின்­னர் தமி­ழர் அவ­லங்­கள் என்று வரையறை செய்து நோக்கி னால் தமி­ழர் அவ­லங்­க­ளை­யும் அதன் காரணகார­ணி­க­ளை­யும் சரி­வ­ரப்­பார்க்க முடி­யாது போய்­வி­டும்.

அந்த வகை­யிலே, தமி­ழர் அவ­லங்­கள் என்று பார்க்­கின்ற போது இலங்கை சுதந்­தி­ரம் அடைந்த காலம் தொட்டு இன்று வரை­யும் தமி­ழர் எந்­த­வ­கை­யான சிக்­கல்­களை, சவால்­களை எதிர்­நோக்­கு­கின்­றார்­கள், எவற்­றில் வெற்றி கண்­டுள்­ளார்­கள், இன்­னும் எதில் கவ­னம் செலுத்த வேண்­டி­யி­ருக்­கின்­றது என ஆராய வேண்­டி­யுள்­ளது.

தமி­ழர் அவ­லங்­கள் என்ற வகை­யிலே கடந்த 35 ஆண்­டு­க­ளுக்கு மேலாக நடை­பெ­று­கின்ற அர­சி­யல் நெருக்­க­டி­களே முக்­கிய கார­ணங்­கள் என­லாம். ஈழத்­தி­ல் இ­ருந்து கடந்த 35 ஆண்­டு­க­ளாக தமி­ழர் வெளி­யேற்­றங்­கள், இனக்­க­ல­வ­ரங்­கள், இரா­ணுவ நெருக்­க­டி­கள், கல்­வித்­த­ரப்­ப­டுத்­தல்­கள், போன்­றவை முக்­கிய வர­லாற்று அம்­ச­ங்களாக தமி­ழர் அவ­லங்­க­ளில் இடம்­பெற்­றுக்­கொண்டு இருக்­கின்­றன.

1972ஆம் ஆண்­டில் இலங்கை அர­சி­யல் மாற்­றங்­க­ளால் கொண்­டு­வ­ரப்­பட்ட தரப்­ப­டுத்­தல் முறை­யும், 1983 ஆம் ஆண்டில் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரங்­க­ளும், இரா­ணு­வக் கெடு­பி­டி­க­ளும் தமி­ழர் அவ­லங்­க­ளில் முக்­கி­ய­மா­னவை.
தமி­ழர் பிர­தே­சத்­தில் குடி­யேற்­றத் திட்­டங்­கள், சட்­டங்­கள் மற்­றும் பேச்­சு­க்கள், தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னை­யும் அதன் பின்­ன­ணி­யும், கல்வி ஒடுக்­கு­முறை, பயங்­க­ர­வாத தடைச்­சட்­டங்­கள், இன்­றைய நில­வ­ரம், இனம் மற்­றும் அடை­யா­ளம், அழிப்பு போன்­ற­வற்றை இதில் முக்­கி­ய­மாகக் குறிப்­பி­ட­லாம். இவற்­றை­விட ஆண்­டு­கள், வீதங்­கள், கணக்­கெ­டுப்­புக்­கள், ஆட்­சிக்­கால அர­சுகள், இடப்­பெ­யர் மாற்­றங்­கள் போன்ற முக்­கி­ய­மா­ன­வை இந்­தக் கட்­டு­ரை­யில் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை சுதந்­திர நாடா­க அறிவிக்கப்பட்ட போதி­லும், தமி­ழர்­கள் பல்­வேறு வித­மான தாக்கங்­களை பெரும்­பான்­மை­யின அர­சுகளிட மிருந்து எதிர்­நோக்­கும் நிலை காணப்­பட்­டது. சுதந்­தி­ரம் கிடைப்ப தற்கு ஒரு வரு­டத்­தின் முன்­னரே தமி­ழர்­கள் பல பாதிப்­புக்­க­ளைச் சந்­தித்­த­னர்.

தமி­ழர் தாய­கப் பிர­தே­சங்­க­ளில்
சிங்­களக் குடி­யேற்­றத் திட்­டங்­கள்

சுதந்­திர இலங்­கை­யில் முதல்­மு­த­லில் கூடிய நாடா­ளு­மன்­றம், ஒரு லட்­சம் தோட்­டத் தொ­ழி­லா­ளரை நாடற்­ற­வர்­க­ளாக்­கும் சட்­டத்­தைக் கொண்டு வந்­தது. அது­மட்­டு­மின்றி, தமிழ்ப்­பி­ர­தே­சங்­க­ளில் குடி­யேற்­றங்­களை நடை­
மு­றைப்­ப­டுத்­தும் திட்­டத்­தை­யும் கொண்டு வந்­தது. இந்­தக் குடி­யேற்­றங்­க­ளால் தென்­மேற்குப் பகு­தி­யின் சனச்­செ­றிவு கூடிய பகு­தி­க­ளில் இருந்து கொண்­டு­வ­ரப்­பட்ட மக்­கள் வடக்­கி­லும் கிழக்­கி­லும் குடி­யேற்­றப்­பட்­ட­னர். 1948ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் இரண்டு முக்­கி­ய­மான குடி­யேற்­றத்­தி­ட்டங்­கள் முன்­னெ­டுக்­கப்­பட்­டன.

கல்­லோ­யாத்­திட்­டம், துரித மகா­வலி அபி­வி­ருத்­தித்­திட்­டம் என 1949ஆம் ஆண்­டில் தலைமை அமைச்சர் டி. எஸ். சேன­நா­யக்­கா­வால் ‘கல்­லோயா ஆற்­றுப்­பள்­ளத்­தாக்கு அபி­வி­ருத்­தித்­திட்­டம்’ ஆரம்­பித்து வைக்­கப்­பட்­டது. பட்­டி­னப்­பாளை என்ற பாரம்­ப­ரி­யத் தமிழ்ப்­பெ­யரே “கல்­லோயா” என மாற்­றப்­பட்­டது.

இந்­தப் பிர­தே­சத்­தில் 44 குடி­யேற்­றங்­கள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இவற்றில் சிங்­க­ளக் குடி­யேற்­றத்­திட்­டங்­கள் 38 ஆகும். மீதி 6 தமிழ்க் குடி­யேற்­றத் திட்­டங்­க­ளா­கும். குடி யேற்றப்பட்ட தமிழர்கள் விவ­சா­யத்­துக்­கான நீர்ப்­பா­சன வச­தி­யற்­ற­வர்­க­ளாக இருந்­த­னர். சிங்­க­ளப்­ப­கு­தி­க­ளி­லி­ருந்து நீர்ப்­பா­சன வச­தியை நம்­பி­யி­ருக்க வேண்­டிய நிலை­யில் அவர்கள் குடி­யேற்­றப்­பட்­ட­னர். இவர்­க­ளில் பெரும்­பா­லோர் 1956 மற்­றும் 1958ஆம் ஆண்­டு­க­ளில் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரங்­க­ளால் விரட்­டி­ ய­டிக்­கப்­பட்­டும், எஞ்­சி­யோர் கொல்­லப்­பட்­ட­தன் பின்­னர் இந்­தப் பிர­தே­சம் சிங்­க­ள­ ம­ய­மாக்­கப்­பட்­டது.

இத­னைப்­போல வடக்­கில் சிங்­க­ளக் குடி­யேற் றங்­கள் முதன்­மு­த­லில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட இடம் வவு­னி­யா­வா­கும். வவு­னியா, வன்னி மாவட்­டத்­தின் தென்­ப­கு­தி­யி­லி­ருந்த பரந்த பிரதேசமா ­கும். இங்கு பாவற்­கு­ளம் என்ற சிறு கிரா­மத்­தின் குடி­யேற்­றத்­திட்­டம் முக்­கி­ய­மா­ன­தா­கும். 1956ஆம் ஆண்­டில் 595 சிங்­க­ளக் குடும்­பங்­க­ளும் 463 தமிழ்க் குடும்­பங்­க­ளும் குடி அமர்த்­தப்­பட்­டன. இதன் பின்­னர் ஏற்­பட்ட இனக்­க­ல­வ­ரங்­க­ளால் தமிழ்க்­கு­டும்­பங்­கள் விரட்­டி­யடிக்­கப் பட்டு இந்­தப் பிர­தே­ச­மும் சிங்­க­ள­ம­ய­மாக்­கப்­பட்­டது.

கிழக்­கில் 1956ஆம் ஆண்­டில் அம்­பாறை என்ற தேர்­தல் தொகுதி உரு­வாக்­கப்­பட்­டது. இது 1961ஆம் ஆண்­டில் விரி­வாக்­கப்­பட்டு, பின்­னர் அம்­பாறை மாவட்­டம் என மாற்­றம் செய்­யப்­பட்­டது. அம்­பாறை மாவட்­டத்­தின் முழுப்­ப­ரப்­ப­ளவு 4ஆயிரத்து 318 சது­ர­கி­லோ­மீற்­றர்­கள்.

மேற்­கு­றித்த பிர­தே­சங்­க­ளில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட திட்­ட­மிட்ட குடி­யேற்­றங்­க­ளால் 1994ஆம் ஆண்­டில் மேற்­கொள்­ளப்­பட்ட குடி­ச­னக் கணக்­கெ­டுப்­பின்­போது, இந்த மாவட்­டம் சிங்­க­ளப் பெரும்­பான்­மை­யி­னத்­தைக் கொண்டு காணப்­பட்­டது எனக் கணக்­கெ­டுக்­கப்­பட்­டது. இப்­போது இந்­தப் பிர­தே­சம், தமிழ் மாவட்­டம் என்ற அடை­யா­ளத்தை இழந்­து­விட்­டது. இந்தப் பி­ர­தே­சத்­தின் அடை­யாள இழப்­புக்கு முக்­கிய கார­ணி­யாக மகா­ஓயா, பத்­தி­யத் தலாவை, தெஹி­யக்­கிண்­டிய பகு­தி­கள் இணைக்­கப்­பட்­ட­மை­யைக் கொள்­ள­லாம். இவை தமி­ழர்­கள் எவ­ரும் வாழாத பிர­தே­சங்­க­ளா­கும்.

இவற்­றை­விட, தமி­ழர் பிர­தே­சங்­கள் “புனித பிர­தே­சம்” என்ற பெய­ரி­னால் அர­சாங்­கத்­தி­னால் அப­க­ரிக்­கப்­பட்­டன. அப்பிரதேசங்க ளில் வாழ்ந்த பல தமிழ்க் குடும்­பங்­கள் பல­வந்­த­மாக வெளி­யேற்­றப்­பட்­டன.
பெரிய நீலா­வணை, கல்­முனை, காரை­தீவு, நிந்த­வூர், திரைக்­கேணி, சம்­மாந்­துறை, அக்­க­றைப்­பற்று, பொத்­து­வில், பாண்­டி­ருப்பு போன்ற பிர­தே­சங்­கள் முன்­னர் முற்­று­மு­ழு­தாக தமி­ழர்­கள் வாழும் பிர­தே­சங்­க­ளாக இருந்­துள்­ளன.

தமி­ழர் அவ­லங்­கள் என்­ற­வ­கை­யில் முக்­கி­ய­மா­ன­தா­கக் கொள்­ளத்­தக்­கவை சிங்களக் குடி­யேற்­றங்களும், கல­வ­ரங்­கள் மூலம் தமிழர்கள் துரத்­தப்­பட்­ட­ மை­ யும், கொலை செய்­யப்­பட்­ட­மை­யு­மா­கும். இவற்­றை­விட முக்­கி­ய­மாகக் காணப்­பட்­டது, இடங்­க­ளின் பெயர் மாற்­ற­மா­கும். இந்த வகை­யிலே தமிழ்க் கிரா­மங்­கள் பல சிங்­க­ளப் பெ­யர்­க­ளாக மாற்­றப்­பட்­டன.

பார்­வதி கிரா­மம், – பத­வியா என­வும், முத­லிக்­கு­ளம், மொற­வேவா என­வும், பட்­டி­னப்­பாளை, – கல்­லோயா என­வும், பெரி­ய­கு­ளம் – நமல்­வத்த என­வும், புது­வைக்­கு­ளம் – சங்­க­ர­புர என­வும், அம்­பாள் ஏரி, – அம்­பாறை என­வும், மணல் ஆறு, – வெலி ஓயா என­வும், பெரிய விளான்­கு­ளம், மகா­தி­வுல்­ஓயா என­வும், பனக்­கட்­டி­மு­றிப்பு, – பென்­னி­க­கெற்­யாவ என­வும் பெயர் மாற்­றம் செய்­யப்­பட்­டன.1977இல் வவு­னியா மாவட்ட எல்­லைப்­பி­ர­தே­சப் பகு­தி­யில் இரண்டு குடி­யேற்­றங்­கள் உரு­வாக்­கப்­பட்­டன. அவற்­றில் சிங்­க­ள­ வர்­க­ளான முன்­னை­நாள் சிறைக் கைதிகள் குடி­ய­மர்த்­தப்­பட்­ட­னர்.

1987இல் இலங்­கை­யின் வடக்கு கிழக்­கில் உரு­வாக்­கப்­பட்ட குடி­யேற்­றத் திட்­டங் க­ளில் ‘துரித மகா­வலி அபி­வி­ருத்­தித்­திட்­டம்’ முக்­கிய­
மான­தா­கும். இதற்கு உலக வங்­கி­யி­ட­மி­ருந்து நிதி­யு­தவி பெறப்­பட்டமை குறிப்­பி­ டத்­தக்­கது. 1987ஆம் ஆண்டில் இலங்கை – – இந்­திய ஒப்­பந்­தம், வட­மா­கா­ணம் கிழக்கு மாகா­ணம் இணைக்­கப்­பட வேண்­டும் எனக்­கூ­றி­யது. இவ்­வொப்­பந்­தம் நடைமு­றைக்கு வர­முன்­னர், 1988ஆம் ஆண் டில் மணல் ஆறுப்­பி­ர­தே­சம் அபி­வி­ருத்­திக்­குத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்டு, அங்கு சிங்­க­ள­ மக்­கள் குடி­ய­மர்த்­தப் பட்­ட­னர்.

1988ஆம் ஆண்டு ஏப்­ரல் மாதத்­தில் அரசு விடுத்த அறிக்­கை­யின்­படி முல்­லைத்­தீ­வுப் பகு­தி­யில் இருந்த மணல்­ஆறு என்ற இடம் வெலி­ஓயா எனப்­பெ­யர் மாற்­றப்­பட்டு அது இலங்­கை­யின் 26ஆவது மாவட்­ட­மா­க அறிவிக்கப்பட்டது.

இந்­தக் காலத்­தில் காணி அமைச்­ச­ராக காமினி திஸா­நா­யக்கா இருந்­தார் என்­பது குறிப்­பி­டத்­தக்­கது. இந்­தப் பிர­தே­சத்­தில் அவ­சர அவ­ச­ர­மாக 3ஆயிரத்து 364 சிங்­க­ ளக்­கு­டும்­பங்­கள் குடி­ய­மர்த்­தப்­பட்­டன.

இத­னைப்­போன்றே தண்­ணி­மு­றிப்­புப் பகு­தி­யில் வாழ்ந்த 3ஆயிரம் தமிழ்க் குடும்­பங் களை அரசு பல­வந்­த­மாக வெளி­யேற்­றி­யது. அவ்­வாறு வெளி­யேற மறுத்த 29 குடி­மக்­கள் பாது­காப்பு படை­யி­ன­ரால் கொல்­லப்­பட்­ட­னர். இதன் பின்­னர் 25 ஆயிரத்துக்கும் மேலான சிங்­க­ளக் குடி­மக்­கள் குடி­ய­மர்த் தப்­பட்­ட­னர். தண்­ணி­மு­றிப்பு என்ற தமிழ்ப்­பெ­யர் ஐன­க­புர என மாற்­றப்­பட்­டது. இந்­தக் குடி­யேற்­றத்­திற்­குப் பொறுப்­பாக இருந்த படைத்­த­ள­பதி ஐனக பெரேரா என்­ப­வ­ரின் பெயர் சூட்­டப்­பட்­டது.

1987ஆம் ஆண்டு நவம்­பர் மாதம் அர­சாங்­கத்­தி­னால் நடை­மு­றைப்­ப­டுத்­தப்­பட்ட,அர­ச­மைப்­புக்­கான 13வது சட்­டம்­தி­ருத்­தம், முடிக்­கு­ரிய காணி­களை மாகாண அர­சு­க­ளின் பொறுப்­பில் விடுத்து, மகா­வலி அபி­வி­ருத்­தித்­திட்­டம் மட்­டும் மத்­திய அர­சி­டமே இருக்க வழி செய்தது என்­ப­தும் குறிப்­பி­டத்­தக்­கது.

1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை அர­சுக்­கும் விடு­த­லைப்­பு­லி­க­ளுக்­கும் இடை­யே­யான போர் வேளை­யில் தமி­ழர் நிலங்­கள் இரா­ணு­வ­மு­காம் அமைப்­ப­தற்­கும், பாது­காப்பு வல­யம் என்ற பெய­ரி­லும் அப­க­ரிக்­கப்­பட்டு அப்­ப­கு­தியை அண்­டி­யி­ருந்த மக்­கள் அகற்­றப்­பட்­ட­னர். இவ்­வாறு அகற்­றப்­பட்ட இடங்­க­ளாக பலாலி, லிங்­க­ந­கர் போன்­றவை அமைந்­தன.

தமி­ழர்­க­ளின் நிலம் பல வழி­யி­லும் அப­க­ரிக்­கப்­பட்­டதை விட­வும், மோச­மான நிலையாக 1995 ஒக்­டோ­ப­ரில் யாழ்ப்­பா­ணத்தை விட்டு ஒட்டு மொத்த மக்களும் மொத்­த­மாக வெளி­யே­றிய இடப்­பெ­யர்வு அமைந்­தது.

சட்­டங்­கள் மற்­றும் பேச்­சு­கள்

இலங்கை, தமி­ழர், சிங்­க­ள­வர் என்ற இரு தேசிய இனங்­க­ளைக் கொண்ட ஒரு நாடா­கும். 1948ஆம் ஆண்­டில் இலங்­கைக்கு வழங்­கப்­பட்ட சுதந்­தி­ரம் சிறு­பான்­மைத் தமி­ழர்­க­ளின் சுதந்­தி­ரத்­திற்கு முற்­றுப் புள்ளி வைத்­தது. நாடா­ளு­மன்­றத்­தில் மூன்றில் இரண்டு பெரும்­பான்­மைப் பலம் இருந்­த­தால் அர­சி­யல் சட்­டத்­தையே தமது வச­திக்­கும், விருப்­பத்துக்கும் ஏற்­ற­வாறு மாற்­றி­ய­மைக்­கும் அதி­கா­ரம் பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு வாய்த்­தது. சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் பத­விக்கு வந்த டி.எஸ். சேன­நா­யக்­கா­வின் அரசு, முத­லில் எடுத்த நட­வ­டிக்­கையே தமி­ழர்­க­ளி­னது வாக்­குப்­ப­லத்தை பல­வீ­னப்­ப­டுத்­தி­ய­மை­யா­கும்.

1949ஆம் ஆண்­டில் முதல்­மு­த­லில் கொண்­டு­வ­ரப்­பட்ட “இலங்­கைக் குடி­யு­ரி­மைச் சட்­டம்” ஒரே இர­வி­லேயே மலை­ய­கத் தமி­ழர்­கள் ஒரு இலட்­சம் பேரை நடுத்­தெ­ரு­வுக்­குக் கொண்டு வந்­தது. எஸ்.ஜே.வி செல்­வ­நா­ய­கம் 1949ஆம் ஆண்­டில் கொள்­கையை அடிப்­ப­டை­யா­கக் கொண்ட கட்­சி­யாக “தமி­ழ­ ர­சுக்­கட்சி” யை ஆரம்­பித்­தார்.

“தமி­ழர்­க­ளின் சுய­நிர்­ணய உரிமை பேணப்­பட்டு, அவர்­கள் சமத்­து­வ­மான பிர­ஜை­க­ளாக மதிக்­கப்­ப­டக் கூடிய தன்­னாட்சி முறையே தமி­ழர்­க­ளுக்கு ஏற்­றது.” எ ன அவர் தெரி­வித்து வந்­தார்.

1956ல் எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்­டா­ர­நா­யக்க­வின் தலை­மை­யி­லான அரசு, “சிங்­க­ளம் மட்­டும் அர­ச­க­ரு­ம­மொழி” என்ற சட்­டத்தை நிறை­வேற்­றி­யது.
இவ்­வா­றான பின்­ன­ணி­யில் சிறு­பான்­மைத் தமிழ் மக்­க­ளது தலை­வர்­க­ளுடன் சிங்­கள ஆட்­சி­யா­ளர்­க­ளால் பல­வ­கை­யான ஒப்­பந்­தங்­கள் செய்­யப்­பட்டு, பின்­னர் அவை கைவி­டப்­பட்­டன. அவ்­வாறு கைச்சாத்­தி­டப்­பட்ட ஒப்­பந்­தங்­க­ளில் முக்­கி­ய­மா­னது 1958 யூலை 26ஆம் திகதி தலைமை அமைச்சராக விருந்த எஸ். டபிள்யூ. ஆர். டீ. பண்­டா­ர­நா­யக்கவுக்­கும், தமி­ழ் அரசுக்­கட்­சி­யின் தலை­வ­ரா­க­வி­ருந்த எஸ்.ஜே.வி. செல்­வ­நா­ய­கத்­திற்­கும் இடை­யி­லான பண்டா – செல்வா ஒப்­பந்­தமாகும்.

அடுத்து 1985 யூலை­யில் தமிழ்ப் போராளி அமைப்­புக்­களும் இலங்கை அர­ச பி­ர­தி­நி­தி­ க­ளும் வட­இந்­தி­யா­வில் பூட்­டா­னின் தலை­ந­கர் திம்­பு­வில் கூடிய மாநாட்­டில் முன்­வைக்­கப்­பட்ட ஆலோ­ச­னை­க­ளாக, தமி­ழர்­கள் ஒரு தேசிய இன­மென அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டும் தமி­ழர்­கள் தாய­கம் அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டும். தமி­ழர்­க­ளது சுய­நிர்­ணய உரிமை அங்­கீ­க­ரிக்­கப்­பட வேண்­டும் மற்­றும் எல்­லாத்­த­மி­ழர்­க­ளி­ன­தும் குடி­யு­ரி­மை­ யும் அடிப்­ப­டை­ உரி­மை­க­ளும் பேணப்­ப­ட­வேண்­டும் என்ற கோரிக்­கை­கள் முன்­வைக்­கப் பட்­டன.

1987 ஆம் ஆண்டு ஜூலை 26ஆம் திகதி இலங்கை அர­சும் இந்­திய அர­சும் செய்து கொண்ட ராஜீவ் -– ஜே.ஆர். உடன்­ப­டிக்கை பல அழி­வு­க­ளுக்கு வழி வகுத்­தது. இக்­கா­ல­கட்­டத்­தில் தமி­ழீ­ழப்­ப­கு­தி­க­ளுக்கு வந்த இந்திய அமை­திப்­படை தனது நோக்­கத்­தி­லி­ருந்து விலகி பல அழி­வு­க­ளைச் செய்­தமை குறிப்­பி­டத்­தக்­கது. 1989 ஆண்டு செப்­ரெம்­பர் 13ஆம் திகதி பிரே­ம­தாச அர­சி­னால் சர்­வ­கட்­சி­க­ளின் மாநாடு ஒன்று ஆரம்­பிக்­கப்ட்­டது. இதில் விடு­த­லைப் புலி­கள் தவிர்ந்த 21 அர­சி­யல் கட்­சி­கள் பங்கு பற்றி, இழுத்­த­டிக்­கப்­பட்ட நிலை­யில் எந்­த­மு­டி­வும் அற்ற நிலை­யில் மாநாடு முடி­வ­டைந்­தது.

1994ஆம் ஆண்­டில் நாட்­டில் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­து­வ­தாக் கூறிக்­கொண்டு வந்த சந்­தி­ரிகா அர­சா­னது, கடி­தம் மூல­மான பரி­மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தி­யது. ஆனால் பிரச்­சி­னைக்கு எது­வித தீர்­வும் கிட்­ட­வில்லை. 2002ஆம் ஆண்­டில் டிெசம்­பர் மாதம் ரணில் தலை­மை­யி­லான ஐக்­கிய தேசி­யக் கட்சி அரசு பத­விக்கு வந்­தது. நாட்­டின் சமா­தா­னத்தை ஏற்­ப­டுத்­தும் முயற்­சி­யில் 2002 ஏப்­ர­லில் தமி­ழீழ விடு­த­லைப் புலி­க­ளுக்­கும் இலங்கை அர­சுக்கும் ஏற்­பட்ட போர் நிறுத்­தத்­தைத் தொடர்ந்து நோர்வே நாட்­டின் மத்­தி­யஸ்­தத்­து­டன் பேச்­சு­க்கள் ஆரம்­பிக்கப் பட்டன. இது­வும் எந்­த­வித பயனும் அளிக்­க­வில்லை. 2005ஆம் ஆண்டு டிெசம்­பர் பத­விக்கு வந்த ராஜ­பக்ச அர­சு­டன் 2006ல் இரு சுற்­றுப் பேச்­சு­ ஜெனி­வா­வில் நடை­பெற்­றது. இலங்கை அரசு தனது வாக்­கு­று­தி­களை நிறை­வேற்­றாத நிலை­யில் பேச்­சு­ முறி­ வுற்­றது.

வடக்கு கிழக்கு மாகா­ணம் பிரிப்பு –

ஏற்­க­னவே இணைக்­கப்­பட்­டி­ருந்த வடக்­குக் கிழக்கு மாகா­ணங்கள், 2007ஆம் ஆண் டில் மகிந்த அரசினால் பிரிக்­கப்­பட்­டன. பின்­னர் இந்த உடன்­ப­டிக்­கையை நிறை­வேற்­று­ வ­தில் ஏற்­பட்ட விரி­சல் கார­ண­மாக விடு­த­லைப் புலி­க­ளுக்­கும் இலங்கை அர­சுக்­கு­மி­டையே 2002 ஆம் ஆண்டில் கைச்­சாத்­தி­டப்­பட்ட போர் நிறுத்த உடன்­ப­டிக்­கை­யில் இருந்து வெளி­யே­று­வ­தாக இலங்கை அரசு, 2008 ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி அன்று அறி­வித்­தது.

மகிந்த அர­சின் போர் அறிவிப்பு

2008 ஜன­வரி 03ஆம் திகதி மகிந்த அர சால், விடு­த­லைப் புலி­க­ளுக்­கும் இலங்கை அர­சுக்­கு­மி­டை­யில் செய்­து­கொள்­ளப்­பட்ட ஒப்­பந்­தம் ஒரு­த­லைப்­பட்­ச­மாக முறிக்­கப் பட்­டது. மகிந்த அரசு இன­வா­தத்தை வெளிப் ப­டுத்தி போரை அறிவித்து தமி­ழர் தாய­கத் தின் மீது முழு அள­வி­லான போரை முன்­னெ­டுத்தது.

தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னை­க­ளின்
முக்­கிய ஆய்வு

தமி­ழர்­க­ளின் இனப்­பி­ரச்­சி­னை­க­ளின் அவ­லங்­கள் என்ற வகை­யிலே, பல கசப்­பான அனு­ப­வங்­க­ளும், ஏமாற்­றங்­க­ளும், பெரிய இழப்­புக்­க­ளும், இன­வொ­டுக்­கு­முறைப் போர் போன்­ற­வையே முக்­கி­ய­மா­ ன­வை­யா­கும்.

You might also like