பாலின சமத்­து­வத்தை வலி­யு­றுத்தி ஸ்பெய்­னில் பேரணி!!

பன்­னாட்டு மக­ளிர் தின­மான நேற்­று­முன்­தி­னம் பாலின சமத்­து­வத்தை வலி­யு­றுத்தி ஸ்பெய்­னில் மிகப்­பெ­ரும் பேரணி நடத்­தப்­பட்­டது. சுமார் 3 லட்­சம் பேர் இந்­தப் பேர­ணி­யில் கலந்­து­கொண்­ட­னர்.

பெண்­க­ளுக்கு எதி­ரான பாலி­யல் வன்­மு­றை­க­ளைக் கண்­டித்­தும், பாலி­யல் சமத்­து­வத்தை வலி­யு­றுத்­தி­யும் தலை­ந­கர் மட்­ரிட்­டில் அணி­தி­ர­ளுங்­கள் என்று 10 தொழிற்­சங்­கங்­கள் இந்­தப் போராட்­டத்­துக்கு அழைப்பு விடுத்­தி­ருந்­தன. பணிப்­பு­றக்­க­ணிப்­பும் இடம்­பெற்­றது.

சுமார் 3 லட்­சம் பேர் இதில் பங்­கெ­டுத்­த­னர். இந்­தப் போராட்­டம் பன்­னாட்டு ஊட­கங்­க­ளின் கவ­னத்தை வெகு­வா­கவே கவர்ந்­துள்­ளது.
சுமார் 300 ரயில்­கள் ஸ்பெய்­னில் நேற்­று­முன்­தி­னம் இயங்­க­வில்லை என்று ஸ்பெய்ன் அரசு அறி­வித்­தது.

‘‘ஐரோப்­பியா, ஆபி­ரிக்கா, ஆசியா என்று எங்­கும் பெண்­க­ளுக்கு பாலி­யல் சமத்­து­வம் கொடுக்­கப்­ப­ட­வில்லை. சம­மான உரி­மை­கள், சம­மான ஊதி­யங்­கள் வழங்­கப்­ப­டு­வ­தில்லை. ஒவ்­வொரு நாளும் மிகப்­பெ­ரும் சவால்­க­ளைச் சந்­தித்­த­வர்­க­ளா­கவே பெண்­கள் தமது வாழ்க்­கை­யைக் கடத்­திக் கொண்­டுள்­ள­னர். இந்த நிலை மாற்­றம்­பெற்று ஆண்­க­ளுக்கு நிக­ரான உரிமை பெண்­க­ளுக்­கும் வழங்­கப்­பட வேண்­டும்’’ என்று போராட்­டத்­தின் ஒருங்­கி­ணைப்­பா­ளர் பன்­னாட்டு ஊட­கங்­க­ளி­டம் தெரி­வித்­தார்.

பாலி­யல் சமத்­து­வத்தை வலி­யு­றுத்தி உல­கெங்­கும் பர­வ­லாக பேர­ணி­க­ளும், போராட்­டங்­க­ளும் முன்­னெ­டுக்­கப்­பட்­டன. அமெ­ரிக்கா, ஆஸ்­தி­ரே­லியா, ஐரோப்­பிய நாடு­கள், தென்­ன­ம­ரிக்க நாடு­கள் என்று எங்­கும் போராட்­டங்­கள் விரிவு பட்­டி­ருந்­தன.

You might also like