வீதியை அக­லிக்­கு­மாறு கோரிக்கை!!

வவு­னியா அர­சங்­கு­ளத்தை அண்­மித்த பகு­தி­யில் உள்ள மக்­கள் வசிப்­பி­டத்­துக்கு செல்­வ­தற்­கு­ரிய பாதை விசா­ல­மின்­றி­யி­ருப்­ப­தால் பகு­தி­யில் வசிப்­போர் பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்கி வரு­கின்­ற­னர். வீதியை சீரமைக்க பகுதி மக்களை ஒத்துழைக்குமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.

வவு­னியா ஓமந்தை கிரா­ம­சே­வ­கர் பிரி­வுக்­குட்­பட்ட அர­சங்­கு­ளத்­தில் 50வரு­டங்­க­ளுக்கு மேலாக பகுதி மக்­கள் வசித்து வரு­கின்­ற­னர்.
ஏற்­க­னவே இங்­கி­ருந்த பாதை கடந்த காலங்­க­ளில் அர­சி­யல் தேவைக்­காக மூடப்­பட்­டது. பாதை­யின் தேவை கார­ண­மாக மக்­கள் வயற்­கா­ணி­க­ளின் ஊடாக குடி­யி­ருப்­பா­ளர்­க­ளின் உத­வி­யு­டன் புதிய பாதை அமைக்­கப்­பட்­டது.

எனி­னும் அங்­குள்ள சில குடி­யிருப்­பா­ளர்­க­ ளின் ஆத­ர­வின்­மை­யால் 100மீற்­றர் பாதையை அக­லப்­ப­டுத்த இடர்­பாடு ஏற்­பட்­டுள்­ளது. 100மீற்­றர் பாதைக்கு இடை­யில் மின்­கம்­பம் ஒன்று இருப்­ப­தா­லும் உழவு வேலைக்கு பயன்­ப­டுத்­தும் வாக­னங்­கள் உட்­பட வாக­னங்­கள் எதை­யும் குடி­யி­ருப்­பா­ளர்­கள் கொண்டு வர­மு­டி­யாத சூழ்­நிலை காணப்­ப­டு­கி­றது.

அத்­து­டன் மழை காலங்­கா­லங்­க­ளில் இந்­தப் பாதை­யூ­டாக பாட­சாலை செல்­ல­வ­தற்கு மாண­வர்­கள் சிர­மப்­ப­டு­ கின்­ற­னர். முன்­னர் இருந்த பாதையை மீட்­டுக்­கொ­டுப்­பது தொடர்­பி­லும் அர­சி­ யல்வா­தி­க­ளும் அதி­கா­ரி­க­ளும் பாரா­மு­க­மாக இருக்­கி­றார்­கள்.

எனவே பாதையை அக­லப்­ப­டுத்த சம்­பந்­தப்­பட்ட அதி­கா­ரி­கள் மற்­றும் அர­சில்­வா­தி­க­ளும் குடி­யி­ருப்­பா­ளர்­க­ளும் உதவ­ வேண்­டு­மென பகு­தி­யூ­டாக செல்­லும் மக்­கள் கோரிக்கை விடுத்­துள்­ள­னர்-.

You might also like