மகளிர் தினத்தில் பாடல் பாடினார் ஐஸ்வர்யா தனுஷ்!!

சூப்பர் ஸ்ரார் ரஜினியின் மூத்த மகளும் தனுஷின் மனைவியுமான ஐஸ்வர்யா தனுஷ் கடந்த வருடம் மகளிர் தினத்தன்று ஐ.நா. சபையில் இந்திய தூதரகத்தின் சார்பில் பரத நாட்டியம் ஆடினார்.

இந்த நிலையில் இந்த வருடம் மகளிர் தினத்தை முன்னிட்டு ஐஸ்வர்யா தனுஷ் ஒரு பாடலைப் பாடியுள்ளார். இசைஞானி இளையராஜாவின் இசை வாரிசுகளில் ஒருவரான பவதாரிணி இசையில் ஐஸ்வர்யா தனுஷ், பெண்களின் பெருமையைக் கூறும் வகையிலான ஒரு பாடலைப் பாடியுள்ளார்.

ஐஸ்வர்யா தனுஷின் பரதநாட்டிய நிகழ்வு மூக வலைத்தளங்களில் அதிகம் கிண்டல் செய்யப்பட்டது. இந்த நிலையில் அவரது பாடலுக்கு என்ன வகையான விமர்சனம் வருகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

You might also like