அணு­வா­யு­தங்­க­ளில் உலக நிறு­வ­னங்­கள் பில்­லி­யன் கணக்­கில் முத­லீடு!!

அணு­வா­யு­தங்­க­ளில் உலக வர்த்­தக நிறு­வ­னங்­கள் பில்­லி­யன் கணக்­கில் முத­லீடு செய்­துள்­ளன என்ற தக­வல் தற்­போது தெரி­ய­வந்­துள்­ளது. அது தொடர்­பான விவ­ரங்­களை பன்­னாட்டு அணு­வா­யுத ஒழிப்பு அமைப்­பான ‘ஐ கான்’ வெளி­யிட்­டுள்­ளது.

உலக அள­வில் அணு­வா­யு­தத்­தைக் கட்­டுப்­ப­டுத்­த­வ­தற்­காக ஐக்­கிய நாடு­கள் சபை­யும், பன்­னாட்­டுத் தொண்டு நிறு­வ­னங்­க­ளும் இறுக்­க­மான நகர்­வு­க­ளைக் கடைப்­பி­டித்து வரு­கின்­றன. எனி­னும், உலக நாடு­கள் பல­வும் தத்­த­மது அணு­வா­யு­தக் கையி­ருப்பை அதி­க­ரித்­துக் கொண்­டு­தான் செல்­கின்­றன.

இவ்­வா­றி­ருக்க உல­கின் முன்­னணி வங்­கி­க­ளும், காப்­பீட்டு நிறு­வ­னங்­க­ளும் அணு­வா­யுத நிறு­வ­னங்­க­ளில் அதிக அள­வில் முத­லீடு செய்­தி­ருப்­பது தற்­போது தெரிய வந்­துள்­ளது. ஐ கான் அமைப்பு அது தொடர்­பான தக­வல்­களை வெளிப்­ப­டுத்­தி­யுள்ளது.

அந்த அமைப்­பில் தக­வ­லின் அடிப்படை­யில் 24 நாடு­க­ளைச் சேர்ந்த சுமார் 329 வங்­கி­கள், காப்­பீட்டு நிறு­வ­னங்­கள் உட்­பட பல்­வேறு நிறு­வ­னங்­கள் இந்­தியா, பிரான்ஸ், நெதர்­லாந்து மற்­றும் அமெ­ரிக்­கா­வில் உள்ள 20 வெவ்வேறு அணு­வா­யுத உற்­பத்தி நிறு­வ­னங்­க­ளில் மூத­லீடு செய்­துள்­ளன. அதி­லும் கடந்த 2014ஆம் ஆண்­டுக்­குப் பின்­னர் சுமார் 525 பில்­லி­யன் அமெ­ரிக்க டொலர் அள­விற்கு இந்த நிறு­வ­னங்­கள் முத­லிட்­டுள்­ளன.

You might also like