பனிக்கட்டியில் வெளிப்பட்ட வெட்டப்பட்ட கைகள்!!

ரஷ்யாவில் காப்ரோவஸ்க் என்ற பகுதியில் இருந்த பனிக்கட்டி படலத்தில் இருந்து 54 வெட்டப்பட்ட கைகள் மீட்கப்பட்டுள்ளமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவின் சீனா எல்லையில் அமைந்துள்ள ஆமூர் ஆறு, நிலவிவரும் கடும் குளிர் காரணமாக உறைந்து. அதன் மீது பனிக்கட்டி படலங்கள் படர்ந்துள்ளன.

கட்டுமான பணிக்காக அந்த பனிக்கட்டி படலம் நேற்று முன்தினம் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, அங்கு கண்டெடுக்கப்பட்ட பையொன்றில் இருந்து 54 வெட்டப்பட்ட கைகள் கண்டெடுக்கப்பட்டன.

மீட்கப்பட்ட பல கைகளில் கைரேகை அழிக்கப்பட்டுள்ளது. இதுவரை ஒரே ஒரு கையில் மட்டுமே கைரேகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது.

இந்த கைகள் யாருடையது என்பதும் ஏன் வெட்டப்பட்டுள்ளன என்றும் தெரியவில்லை. அதேபோல் இந்த கைகளை வெட்டியது யார் என்ற விவரமும் இதுவரை வெளியாகவில்லை.

எந்த காலத்தில் வெட்டப்பட்டது என்பது கண்டுபிடிக்கப்படதா நிலையில், அவை வெட்டப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் குறைவாகவே இருக்கும் என்று கூறப்படுகிறது.

தற்போது அந்தக் கைகள் சோதனைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளன.

You might also like