2009 ஆம் ஆண்டின் பின்னரே- முஸ்லிம்களுக்கு ஆபத்து!!

2009ஆம் ஆண்­டு­வரை முஸ்­லிம் மக்­க­ளுக்கு தமது மதக் கட­மை­களை நிறை­வேற்­று­வ­தற்­கு­ரிய சுதந்­தி­ரம் முழு­மை­யாக இருந்­தது. 2010ஆம் ஆண்­டி­லி­ருந்து அந்த மக்­க­ளுக்கு எதி­ராக திட்­ட­மிட்ட அடிப்­ப­டை­யில் வன்­மு­றை­கள் கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்­டுள்­ளன. ‘ஹலா­லில்’ ஆரம்­ப­மான பிரச்­சினை கண்­டி­யில் வன்­முறை வெடிக்­கு­ம­ள­வுக்கு வியா­பித்­துள்­ளது. இதற்கு அரசு உட­ன­டி­யாக முடி­வு­கட்ட வேண்­டும். இவ்­வாறு மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் நாடா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரான பிமல் ரத்­நா­யக்க வலி­யு­றுத்­தி­னார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று நடை­பெற்ற வணி­கக் கப்­பல் தொழில் சட்­டத்­தின்­கீழ் ஒழுங்கு விதி­கள் மீதான விவா­தத்­தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.
அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது,

போரின் இழப்­பு­போன்று உணர்வு
முஸ்­லிம் மக்­க­ளுக்கு எதி­ரான இன­வா­தம் தலை­தூக்­கி­யுள்­ளது. நாட்­டுக்­குப் பெரும் பாதிப்பு ஏற்­பட்­டுள்­ளது. சுற்­று­லாத்­து­றை­யும் வீழ்ச்சி காணத் தொடங்­கி­யுள்­ளது. போரால் 30 ஆண்­டு­க­ளில் ஏற்­பட்ட இழப்பு, கடந்த சில நாள்­க­ளில் ஏற்­பட்­டு­விட்­ட­து­போல் ஓர் உணர்வு.

நாட்டை நல்­ல­தொரு நிலைக்­குக் கொண்டு வரு­வ­தற்­காக கடந்த 13 ஆண்­டு­க­ளில் மக்­க­ளால் ஆட்சி நடத்­திய அர­சு­க­ளுக்கு மூன்று வாய்­புக்­கள் வழங்­கப்­பட்­டன. 2004ஆம் ஆண்டு சுனாமி ஏற்­பட்­ட­போது முதல் வாய்ப்பு வழங்­கப்­பட்­டது. சுனா­மி­யால் நாட்­டுக்­குப் அழிவு ஏற்­பட்­டி­ருந்­தா­லும் நாட்டை முன்­னேற்­றிச் செல்­வ­தற்கு சக­ல­ரும் இலங்­கை­யர் என்ற ரீதி­யில் ஒன்­றி­ணைந்து அர­சுக்கு வழி ஏற்­ப­டுத்­தி­யி­ருந்­த­னர்.

வாய்ப்­புக்­களை தவ­ற­விட்ட தலை­வர்­கள்
2009ஆம் ஆண்டு இரண்­டாம் வாய்ப்­புக் கிடைத்­தது. போர் முடி­வ­டைந்த பின்­னர் இனங்­க­ளுக்­கி­டை­யில் ஒற்­று­மையை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கு­ரிய வாய்ப்பு உத­ய­மா­னது. அதை மகிந்த செய்­வார் என்று எதிர்­பார்க்­கப்­பட்­டது. ஆனால், அதி­கார மோகத்­தால் அந்­தச் சந்­தர்ப்­பத்தை அவர் தவ­ற­விட்­டார்.

2015ஆம் ஆண்டு ஜன­வரி 8 ஆம் திகதி மூன்­றா­வது வாய்ப்பு வழங்­கப்­பட்­டது. அர­சி­யல் மாற்­ற­மொன்­றையே மக்­கள் சக்தி ஏற்­ப­டுத்­தி­யது. மூன்று தலை­வர்­க­ளும் உத­ய­மான வாய்ப்­பு­களை வெற்­றி­க­ர­மாக மாற்­றி­ய­மைப்­ப­தில் தோல்வி கண்­டுள்­ள­னர்.

உள­ரீ­தி­யான அச்­சம்
நாடு பிள­வு­ப­டப்­போ­கி­றது, விடு­த­லைப் புலி­கள் மீண்­டும் மீட்சி பெறப் போகின்­ற­னர், சிங்­கள இனம் குறைந்து செல்­கி­றது, பௌத்த மதத் தல­ங்­கள் நாச­மாக்­கப்­ப­டு­கின்­றன போன்ற உள­ரீ­தி­யான அச்­ச­மொன்று சிங்­கள மக்­க­ளின் மூளை­க­ளுக்­குள் செலுத்­தப்­பட்­டுள்­ளது. பொது­வாக சிங்­கள இன­வா­தி­கள் எனக் கூறு­ப­வர்­க­ளுக்­கும் அப்­பால், சாதா­ரண சிங்­கள மக்­க­ளின் மூளை­க­ளி­லும் நாடு முடிந்­து­விட்­டது என்ற அச்­சம் தோற்­று­விக்­கப்­பட்­டுள்­ளது.

உண்­மை­யில் அச்­ச­ம­டை­வது போன்று எந்­த­வொரு சம்­ப­வங்­க­ளும் இடம்­பெ­ற­வில்லை. சிங்­கள, தமிழ் மற்­றும் முஸ்­லிம் இன­வா­தங்­கள் இருக்­கின்­ற­போ­தும், உறு­தி­யான கார­ணங்­கள் எது­வும் இவற்­றுக்கு இல்லை.

2009வரை பிரச்­சி­னை­யில்லை
2009ஆம் ஆண்டு போர் முடி­வ­டை­ யும் வரை­யும் முஸ்­லிம்­கள் தமது கட­மை­க­ளைச் செய்­து­கொண்டே இருந்­த­னர். போர் நிறை­வ­டைந்த பின்­னர் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு விற்­பனை செய்­வ­தற்கு எது­வும் இருக்­க­வில்லை. முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான பரப்­பு­ரை­களை முன்­னெ­டுக்­கத் தொடங்­கி­னர்.

2010ஆம் ஆண்டு தேர்­தல் முடி­வுக்­குப் பின்­னரே நாட்­டில் முன்­னர் இருந்­தி­ராத ஹலால் பிரச்­சி­னையை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு இன­மு­று­கல் ஏற்­ப­டுத்­தப்­பட்­டது. சிங்­கள, தமிழ், முஸ்­லிம் மக்­கள் மத்­தி­யில் கலா­சார ரீதி­யில் மாற்­றங்­கள் இருக்­கின்­றன. இந்த வேறு­பா­டு­களை அர­சி­ய­லுக்­கா­கப் பிரச்­சி­னை­யாக்­கி­யுள்­ள­னர்.

அர­சி­யல் தலை­மைத்­து­வம் பின்­பு­லம்
2010ஆம் ஆண்டு பொதுத் தேர்­த­லின் பின்­னர் அர­சி­யல் தலை­மைத்­து­வத்­தின் உத­வி­யு­டன் சில அடிப்­ப­டை­வாத பௌத்த அமைப்­புக்­கள் ஹலால் பிரச்­சி­னையை உரு­வாக்­கின என்­பதே உண்மை. அதி­லி­ருந்தே 2011ஆம் ஆண்­டி­லி­ருந்து முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வா­தம் தோற்­று­விக்­கப்­பட்­டது. மறு­பக்­கத்­தில் முஸ்­லிம் அடிப்­ப­டை­வா­த­மும் உள்­ளது. முஸ்­லிம் அடிப்­ப­டை­வா­தத்­தி­னால் பாதிக்­கப்­ப­டு­வது முஸ்­லிம் சமூ­க­மா­கும்.

எமது நாட்­டில் முஸ்­லிம் மக்­களே அதி­க­மா­கப் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். இள­வ­ய­தில் திரு­ம­ணம் முடிக்­கும் முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரா­கக் குரல் கொடுக்க எந்­த­வொரு முஸ்­லிம் தலை­வர்­க­ளும் இல்லை. இலங்­கை­யில் இஸ்­லாம் மதத்­து­டன் அரா­பிய கலா­சா­ர­மும் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ளது. முஸ்­லிம் அடிப்­ப­டை­வா­தம் முஸ்­லிம் சமூ­கத்­தையே இலங்­கை­யில் அதி­க­மா­கப் பாதித்­துள்­ளது.

இருந்­த­போ­தும் முஸ்­லிம் அடிப்­ப­டை­வா­தம் சிங்­க­ள­வர்­க­ ளுக்கோ அல்­லது தமி­ழர்­க­ளுக்கோ ஏற்­ப­டுத்­திய இடை­யூ­று­கள் மிக­வும் குறை­வா­ன­வையே.
முஸ்­லிம் சமூ­கத்­துக்­குக் எதி­ராக கட்­டி­யெ­ழுப்­பப்­பட்­டுள்ள இன­வா­தம் சிங்­கள மக்­க­ளின் மனங்­க­ளி­லி­ருந்து தானாக ஏற்­பட்­ட­தல்ல. சிங்­க­ள­வர்­கள் மத்­தி­யில் ஏற்­ப­டுத்­தப்­பட்­ட­தொன்­றா­கும்.

வன்­மு­றை­யின் பின்­னணி
அம்­பா­றை­யில் தொல்­பொ­ருள் திணைக்­க­ளத்­தி­னால் பௌத்த விகா­ரை­யொன்று உடைக்­கப்­ப­டும்­போது மௌன­மாக இருந்த சிங்­கள அடிப்­ப­டை­வா­தி­கள், தற்­போது மலட்­டுத் தன்­மையை ஏற்­ப­டுத்­தும் மாத்­தி­ரை­யைப் பெரிய விட­ய­மாக்­கி­யுள்­ள­னர்.

அம்­பள எனப்­ப­டும் கிரா­மத்­தைச் சேர்ந்த இளை­ஞர் ஒரு­வர் கொல்­லப்­பட்­ட­தன் பின்­ன­ணி­யி­லேயே திக­ன­வில் பெரிய வன்­முறை வெடித்­தது. பெப்­ர­வரி 22ஆம் திகதி இடம்­பெற்ற சம்­ப­வத்­தில் படு­கா­ய­ம­டைந்த இளை­ஞர், மார்ச் மாதம் 2ஆம் திக­தியே உயி­ரி­ழந்­துள்­ளார். எட்டு நாட்­க­ளில் அம்­பள கிரா­மத்­தில் முஸ்­லிம் சமூ­கத்­துக்கு எதி­ராக எந்­த­வொரு தாக்­கு­தலோ அல்­லது வன்­மு­றைச் சம்­ப­வமோ முன்­னெ­டுக்­கப்­ப­ட­வில்லை. இன்­றும் கூட அங்கு எது­வும் இடம்­பெ­ற­வில்லை. உயி­ரி­ழந்த இளை­ஞர் திகன பகு­தி­யைச் சேர்ந்­த­வர் அல்­லர். அம்­பள என்ற கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர். இரு இடங்­க­ளுக்­கும் இடை­யில் 20 கிலோ மீற்­றர் தூரம். இன்­று­வரை அம்­பள கிரா­மத்­தில் எந்­த­வொரு இளை­ஞ­ரும் இன­வாத வன்­மு­றைக்­காக கைது­செய்­யப்­ப­ட­வில்லை – – என்­றார்.

You might also like