வடக்கின் போரில் வென்றது யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி!!

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரிக்­கும் யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூ­ரிக்­கும் இடை­யி­லான வடக்­கின் போர் துடுப்­பாட்­டத் தொட­ரில், நடப்பு வரு­டத்­தில் நடை­பெற்ற 112ஆவது ஆட்­டத்­தில் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி வெற்­றி­பெற்­றது.

சென். ஜோன்­ஸின் முதல் இன்­னிங்ஸ்

யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் மைதா­னத்­தில் கடந்த வியாழக் கிழமை இந்த ஆட்­டம் ஆரம்­ப­மா­னது. நாண­யச் சுழற்­சி­யில் வெற்­றி­பெற்ற யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி, முத­லில் களத்­த­டுப்­பைத் தீர்­மா­னித்­தது.

இதன்­படி முத­லில் துடுப்­பெ­டுத்­தா­டிய யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி 217 ஓட்­டங்­க­ளில் சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது. அதி­க­பட்­ச­மாக செரோ­பன் 65 ஓட்­டங்­க­ளை­யும், டெனு­சன் 32 ஓட்­டங்­க­ளை­யும், டினோ­சன் 28 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர். பந்­து­வீச்­சில் விஜஸ்­காந் 4 இலக்­கு­க­ளை­யும், தசோ­பன் 3 இலக்­கு­க­ளை­யும், சுஜன், மது­சன், துசாந்­தன் மூவ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர்.

மத்­தி­யின் முதல் இன்­னிங்ஸ்

பதி­லுக்­குக் கள­மி­றங்­கிய யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி சகல இலக்­கு­க­ளை­யும் இழந்து 328 ஓட்­டங்­க­ளைப் பெற்­றது. பந்­து­வீச்­சில் கபில்­ராஜ் 5 இலக்­கு­க­ளை­யும், அபி­னேஸ் 2 இலக்­கு­க­ளை­யும், சனு­சன், ஜது­சன், சௌமி­யன் மூவ­ரும் தலா ஓர் இலக்­கை­யும் கைப்­பற்­றி­னர். அதி­க­பட்­ச­மாக ஜெய­தர்­சன் 77 ஓட்­டங்­க­ளை­யும், ராஜ்­கி­ளிங்­டன் ஆட்­ட­மி­ழக்­கா­மல் 53 ஓட்­டங்­க­ளை­யும், மிது­சன் 52 ஓட்­டங்­க­ளை­யும் பெற்­ற­னர்.

சென். ஜோன்­ஸின் இரண்­டா­வது இன்­னிங்ஸ்

இன்­னிங்ஸ் தோல்­வி­யைத் தவிர்க்க வேண்­டு­மா­யின் 111 ஓட்­டங்­க­ளைப் பெற­வேண்­டும் என்ற நிலை­யில் இரண்­டா­வது இன்­னிங்ஸை ஆரம்­பித்த யாழ்ப்­பா­ணம் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி நேற்­று­முன்­தின இரண்­டாம் நாள் முடி­வில் வெறும் 8 ஓட்­டங்­க­ளுக்கு 4 இலக்­கு­களை இழந்து தடு­மா­றி­யது.

நேற்­றைய நாளின் ஆரம்­பத்­தில் சென். ஜோன்ஸ் தடு­மாற வாய்ப்­புக்­கள் அதி­கம் இருக்­கவே செய்­தன. அணி 31 ஓட்­டங்­க­ளைப் பெற்­றி­ருந்த நிலை­யில் சென். ஜோன்­ஸின் ஐந்­தா­வது இலக்­குச் சரிக்­கப்­பட்­டது. ஜது­சன், கபில்­ராஜ் இரு­வ­ரும் அரைச்­ச­தம் கடந்து அணி­யைப் பலப்­ப­டுத்­தி­னர். வேறு எவ­ரும் சிறப்­பா­கச் செயற்­ப­ட­வில்லை. முடி­வில் 219 ஓட்­டங்­க­ளுக்கு சகல இலக்­கு­க­ளை­யும் இழந்­தது சென். ஜோன்ஸ். பந்­து­வீச்­சில் சுஜன் 4 இலக்­கு­க­ளை­யும், மது­சன் 3 இலக்­கு­க­ளை­யும் கைப்­பற்­றி­னர்.

மத்­தி­யின் இரண்­டா­வது இன்­னிங்ஸ்

முதல் இன்­னிங்­ஸில் முன்­னிலை பெற்­ற­மை­யால் யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணிக்கு 109 ஓட்­டங்­களே இலக்­காக நிர்­ண­யிக்­கப்­பட்­டது. ஆரம்ப வீரர்­க­ளாக விஜஸ்காந் மற்­றும் ஜெய­தர்­சன். யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி இல­கு­வாக வெற்­றி­பெ­றும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட போதி­லும் சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி மிகச் சிறந்த பந்­து­வீச்சை வெளிப்­ப­டுத்­தி­யது.

ஜெய­தர்­சனை 3 ஓட்­டங்­க­ளு­ட­னும், இய­ல­ர­சனை ஓட்­ட­மெ­தை­யும் பெற விடா­ம­லும் வெளி­யேற்­றி­னார் கபில்­ராஜ். நிசானை 3 ஓட்­டங்­க­ளு­டன் வெளி­யேற்­றி­னார் சனு­சன். விஜஸ்­காந் 19 ஓட்­டங்­க­ளு­டன் ஆட்­ட­மி­ழந்­தார். மத்­திய வரி­சை­யில் மது­சன் மிகச் சிறந்த ஆட்­டத்தை வெளிப்­ப­டுத்­தி­னார்.

தசோ­பன், ராஜ்­கி­ளிங்­டன் முறையே 3, 4 ஓட்­டங்­க­ளு­டன் வெளி­யேற்­றப்­பட 87 ஓட்­டங்­க­ளுக்கு 7 இலக்­கு­களை இழந்­தது மத்தி. 53 ஓட்­டங்­க­ளு­டன் மது­சனை வெளி­யேற்­றி­னார் கபில்­ராஜ். அவர் டிலி­சியனை ஓட்­ட­மெ­தை­யும் பெற­வி­டாது இருக்­கைக்­குத் திருப்­பி­னார். 101 ஓட்­டங்­க­ளுக்கு 9 இலக்­கு­களை இழந்­தது யாழ்ப்­பா­ணம் மத்தி.

8 ஓட்­டங்­க­ளைப் பெற்­றால் மத்­திக்கு வெற்றி. ஓர் இலக்­கைக் கைப்­பற்­றி­னால் சென். ஜோன்­ஸூக்கு வெற்­றி­யென்ற நிலை. மைதா­னமே பர­ப­ரப்­பா­னது. சுயன், துசாந்­தன் இரு­வ­ரும் நிலைத்­து­நின்று ஆட்­டத்தை வெற்­றி­யு­டன் முடித்­த­னர். ஓர் இலக்­கால் வெற்­றி­பெற்­றது யாழ்ப்­பா­ணம் மத்தி. பந்­து­வீச்­சில் கபில்­ராஜ் 5 இலக்­கு­க­ளைக் கைப்­பற்­றி­னார்.

விரு­து­கள்

ஆட்­ட­நா­ய­க­னாக யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூரி அணி­யின் மது­சன், சக­ல­துறை வீர­ராக சென். ஜோன்­ஸின் யது­சன், சிறந்த துடுப்­பாட்ட வீர­ராக யாழ்ப்­பா­ணம் மத்­திய கல்­லூ­ரி­யின் ஜெய­தர்­சன், சிறந்த பந்­து­வீச்­சா­ள­ராக சென். ஜோன்ஸ் கல்­லூ­ரி­யின் கபில்­ராஜ், சிறந்த இலக்­குக் காப்­பா­ள­ராக சென். ஜோன்ஸ் கல்­லூரி அணி­யின் ஜோயல் பிர­வீன், சிறந்த களத்­த­டுப்­பா­ள­ராக டிலிசியன் ஆகி­யோர் தெரி­வா­கி­னர்.

You might also like