டொனால்ட் ட்ரம்ப் – கிம் நேரில் சந்­திக்­கத் தயார்!

அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் – வட­கொ­ரிய அதி­பர் கிம் ஜோங் உன் இரு­வ­ரும் ஒரு­வ­ரை­யொ­ரு­வர் நேரில் சந்­திக்­கத் தயார் என்­றும் இந்­தச் சந்­திப்பு எதிர்­வ­ரும் மே மாதம் நடை­பெ­ற­வுள்­ளது என்­றும் வெள்­ளை­மா­ளிகை அறி­வித்­தது.

பன்­னாட்­டுச் சட்­ட­திட்­டங்­களை மீறி தொடர்ந்து ஆயுத, அணு­வா­யு­தச் சோத­னை­களை நடத்­தி­வந்­தது வட­கொ­ரியா. இத­னால் வட­கொ­ரி­யா­மீது ஐ.நா. சபை கடும்­பொ­ரு­ளா­தா­ரத் தடை­களை விதித்­தி­ருந்­தது.

அமெ­ரிக்கா, தென்­கொ­ரியா, ஜப்­பான் ஆகி­ய­ன­வும் தனித்­த­னி­யாக தடை­களை விதித்­தி­ருந்­தன. தென்­கொ­ரி­யா­வில் அணி­மை­யில் நடை­பெற்ற குளிர்­கால ஒலிம்­பிக் தொட­ரில் கரந்­து­கொண்­டதை அடுத்து வட­கொ­ரி­யா­வுக்­கும் தென்­கொ­ரி­யா­வுக்­கும் இணைக்­கம் ஏற்­பட்­டது.

தென்­கொ­ரி­யா­வு­டன் பகையை மறந்து புதிய அத்­தி­யா­யம் எழு­தத் தயார் என்று கிம்­ஜோங் உன் அறி­வித்­தார். இதை­ய­டுத்து அமெ­ரிக்க அதி­பர் ட்ரம்ப் – கிம் ஜோங் உன் இடை­யி­லான சந்­திப்பு எதிர்­வ­ரும் மே மாம் நடை­பெ­ற­வுள்­ளது என்று அமெ­ரிக்க அதி­ப­ரின் உத்­தி­யோ­க­பூர்வ இல்­ல­மான வெள்­ளை­மா­ளிகை அறி­வித்­தது. இந்த முடிவை வர­வேற்­றுள்­ளது ஐக்­கிய நாடு­கள் சபை.

You might also like