முட்டைக்குள் முட்டை!!

ஆஸ்திரேலியாவில் உள்ள ஒரு முட்டை பண்ணையில் வழமைக்கு மாறாக சாதாரண முட்டையின் அளவைவிட மூன்று மடங்கு பெரிய அளவிலான முட்டையை கோழி ஒன்று போட்டுள்ளமை வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவில் காய்ன்ஸ் எனும் இடத்தில் ஸ்காட் ஸ்டாக்மேன் என்பவர் முட்டைப் பண்ணை நடத்தி வருகிறார். அங்கிருக்கும் கோழி ஒன்று பெரிய அளவிலான முட்டை போட்டுள்ளது. சாதாரண முட்டை 58 கிராம் நிறை இருக்கும். ஆனால் இந்த முட்டை மூன்று மடங்கு அதிகமாக 178 கிராம் நிறையில் உள்ளது.

இதைக் கண்டு ஆச்சரியமடைந்த பண்ணையின் உரிமையாளருக்கு மற்றொரு ஆச்சரியமும் காத்திருந்தது. குறித்த பெரிய முட்டையை உடைத்தபோது அதற்குள் சின்ன அளவிலான முட்டை ஒன்று இருந்துள்ளது.

இவற்றை கண்டு ஆச்சரியம் அடைந்த பண்ணை உரிமையாளர் முட்டைகளை ஒளிப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

You might also like