மட்டக்களப்பில் ஆங்கில நாடக விழா!!

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்திற்குட்பட்ட மாணவர்களின் ஆங்கில நாடக விழா குறிஞ்சாமுனை அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது.

பிராந்திய ஆங்கில ஆதரவு மையமும், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி அலுவலகமும் இணைந்து, மட்டக்களப்பு மேற்கு கல்வி வலய வரலாற்றில் முதன்முறையாக இந்த நாடக விழாவை ஆற்றுகை செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நிகழ்வில், வலய அதிகாரிகளும், அரசசார்பற்ற நிறுவனங்களின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

You might also like