எதிர்­பார்ப்­புக்­கள்!

ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் 37ஆவது கூட்­டத் தொடர் சுவிற்­சர்­லாந்­தின் ஜெனீவா நக­ரில் தற்­போது நடை­பெற்று வரு­கி­றது. இலங்கை தொடர்­பில் மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரின் வாய்­மொழி அறிக்கை எதிர்­வ­ரும் 21ஆம் திகதி சமர்ப்­பிக்­கப்­ப­ட­வுள்ள நிலை­யில், அந்த அறிக்­கை­யின் மீது மேலும் எதிர்­பார்ப்­புக்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன ஐக்­கிய நாடு­கள் சபை­யின் உத­விச் செய­லர் ஜெப்ரி பெல்ட்­ம­னின் நகர்­வு­கள்.

ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 36ஆவது கூட்­டத் தொடர், கடந்த வரு­டம் நடை­பெற்­றது. இலங்­கை­யில் இடம்­பெற்ற போர்க்­குற்­றங்­கள் தொடர்­பில் விசா­ரணை நடத்­த­வும் அது சார்ந்த வெளிப்­ப­டுத்­தல்­க­ளுக்­கா­க­வும் கொழும்­புக்கு இரண்டு வரு­ட­கால அவ­கா­சம் கொடுக்­கப்­பட்­டது.

அவ­கா­சத்­தில் பாதிப்­ப­குதி முடி­வ­டைந்த நிலை­யில் 37ஆவது கூட்­டத் தொடர் தற்­போது நடை­பெற்று வரு­கி­றது. இந்­தக் கூட்­டத் தொட­ரில், போர்க் குற்­றங்­கள் தொடர்­பான விசா­ர­ணை­கள் மீதான நகர்­வு­கள் எந்­தக் கட்­டத்­தில் உள்­ளன என்று இலங்கை அர­சி­டம் கேள்வி எழுப்­பப்­ப­டும். அதே­நே­ரத்­தில் இலங்கை தொடர்­பில் தனது நிலைப்­பாட்­டை­யும் வாய்­மொழி மூல­மான அறிக்­கை­யாக ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் எதிர்­வ­ரும் 21ஆம் திகதி சமர்ப்­பிக்­க­வுள்­ளார்.

ஐ.நா. உத­விச் செய­லர் ஜெப்ரி பெல்ட்­மன், இலங்­கைக்­குச் சுற்­றுப் பய­ணம் மேற்­கொண்­டுள்­ளார். அவ­ருக்­கும் தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் பிர­தி­நி­தி­க­ளுக்­கும் இடை­யி­லான சந்­திப்பு தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரும், எதிர்க்­கட்­சித் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­த­னின் அலு­வ­ல­கத்­தில் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. இந்­தச் சந்­திப்­பின்­போது, அரச தலை­வர் மைத்­திரி – தலைமை அமைச்­சர் ரணில் தலை­மை­யி­லான கூட்டு அர­சின் மீது தனது அதி­ருப்­தியை வலு­வா­கப் பதி­வு­செய்­துள்­ளது தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்பு. உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லின் பின்­னர் கூட்­டு­அ­ர­சுக்­குள் ஏற்­பட்­டுள்ள பிளவு, புதிய அர­ச­மைப்பு முயற்­சியை வலு­வா­கப் பாதித்­துள்­ளது.

அர­ச­மைப்பை நிறை­வேற்­றக்­கூ­டிய வகை­யில் கூட்­டு­அ­ரசு தற்­போது செயற்­ப­ட­வில்லை. ஐ.நா. மனித உரி­மை­கள் தீர்­மா­னத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தல் உள்­ளிட்ட விட­யங்­க­ளி­லும் கூட்டு அரசு ஆர்­வம் காட்­ட­வில்லை என்று எடுத்­தி­யம்­பி­யுள்­ளது கூட்­ட­மைப்பு.

கூட்­டு­அ­ரசு இவை விட­யத்­தில் தடம்­மா­றாது பய­ணிக்க, பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் அழுத்­தம் அவ­சி­யம் என்ற கோரிக்­கை­யையும் அது முன்வைத்­துள்­ளது. கூட்­ட­மைப்­பின் குற்­றச்­சாட்­டுச்­களை ஏற்­றுக்­கொண்­டுள்ள ஐ.நா. உத­விச் செய­லர், நடை­பெற்­று­வ­ரும் ஐ.நா. மனித உரி­மை­கள் சபை­யின் 37ஆவது கூட்­டத் தொட­ரில் ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ள­ரின் வாய்­மூல அறிக்­கை­யின் மூலம் கொழும்பு மீதான பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் நிலைப்­பாடு வெளிப்­ப­டும் என்று குறிப்­பிட்­டுள்­ளார்.

அரச தலை­வர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வை­யும் சந்­தித்த ஜெப்ரி பெல்ட்­மன், 2015ஆம் ஆண்டு மக்­கள் வழங்­கிய ஆணையை மீறும் வகை­யில் கூட்­டு­அ­ரசு செயற்­ப­டக்­கூ­டாது (இதே கருத்தை அரச தலை­வ­ரி­டம் கடந்த சில வாரங்­க­ளுக்கு முன்­னர் எதிர்­கட்­சித் தலை­வர் சம்­பந்­தன் தெரி­வித்­தி­ருந்­தார்) என்­றும் வலி­யு­றுத்­தி­யுள்­ளார்.

ஆக, கூட்­ட­மைப்­புக்­கும் பெல்ட்­ம­னுக்­கும் இடை­யில் இடம்­பெற்ற சந்­திப்­பும், அதில் காண்­பிக்­கப்­பட்ட வெளிப்­ப­டுத்­தல்­க­ளை­யும், பெல்­ம­னுக்­கும் அரச தலை­வ­ருக்­கும் இடை­யி­லான சந்­திப்பையும் எடுத்­து­நோக்­கி­னால், ஐ.நா. மனித உரி­மை­கள் ஆணை­யா­ளர் சையிட் அல் ஹூசைன் எதிர்­வ­ரும் 21ஆம் திகதி இலங்கை தொடர்­பில் வெளிப்­ப­டுத்­த­வுள்ள வாய்­மொ­ழி­மூல அறிக்கை கொழும்­புக்கு நடுக்­கத்தை ஏற்­ப­டுத்­தும்­ப­டி­யா­கவே அமை­யும் என்­பது தெளி­வா­கி­றது.

ஆனால் வெறும் அறிக்­கை­யு­டன் தமது கட­மையை முடித்­துக்­கொள் ளாது, அதற்கு அப்­பா­லும் சென்று தனது அழுத்­தத்­தை­யும் நகர்­வு­க­ளை­யும் கொழும்பு மீது பன்­னாட்­டுச் சமூ­கம் வலு­வாக வைக்க வேண்­டும். அதுவே ஈழத் தமிழ் மக்­க­ளின் கடந்த கால கசப்­பான பதி­வு­க­ளுக்கு மருந்­தாக அமை­யும். எதிர்­கால இருப்­புக்­கும் வழி­ச­மைக்­கும்.

You might also like