ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தினார் அஜித்!!

மறைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தினார் நடிகர் அஜித் குமார்.

பிரபல நடிகை ஸ்ரீதேவி டுபாயில் திருமண நிகழ்வு ஒன்றிற்கு சென்ற போது, எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். இது இந்திய திரையுலகை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

டுபாயில் இருந்து மும்பை கொண்டு வரப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. பின்னர் அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன.

அவருடைய உடலுக்கு ஏராளமான திரை பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர். இந்தநிலையில் ஸ்ரீதேவியின் சென்னை வீட்டில் நடிகர் அஜித் குமார் இன்று காலை அஞ்சலி செலுத்தினார்.

அவருடன் மனைவி ஷாலினியும் சென்றிருந்தார். மேலும் பின்னணி பாடகி பி.சுசிலா, நடிகை மீனா ஆகியோரும் ஸ்ரீதேவிக்கு அஞ்சலி செலுத்தினர்.

You might also like