உலகின் மோசமான நகரங்களின் பட்டியல் வெளியீடு!!

கொலை, கொள்ளை, வன்புணர்வு, துப்பாக்கி சூடு என மிக மோசமான சம்பவங்கள் நடைபெறும் உலகின் 50 நகரங்களின் பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டது.

அதில் மெக்சிகோவின் லாஸ் கபோஸ் நகரம் முதலிடம் பெற்றுள்ளதுடன், உலகின் போதை மருந்துக்கு அது அடித்தளமாக விளங்குகிறது. இந்த நகரத்தில் போதை பொருள் கடத்தல் கும்பலின் மோதல்கள் தினந்தோறும் நடைபெறுகின்றன.

அடுத்த இடத்தில் வெனிசுலாவின் கராகஸ் நகரம் உள்ளது. மெக்சிகோவின் துறைமுக நகரமான அகாபுல்கோ 3 ஆவது இடத்திலும், பிரேசிலின் நடால் நகரம் 4 ஆவது இடத்திலும், மெக்சிகோவின் டிஜூவானா 5ஆவது இடத்திலும் உள்ளன.

மெக்சிகோவின் லாபாஷ் நகரம் 6ஆவது இடத்திலும், பிரேசில் போர்டாலிஷா 7ஆவது இடத்திலும், மெக்சிகோவின் விக்டோரியா 8ஆவது இடத்திலும், பிரேசில் குயானா 9ஆவது இடத்திலும், பிரேசில் பிலீம் 10ஆவது இடத்திலும் உள்ளன.

இதேவேளை, அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள செயிண்ட் லூயிஸ் நகரம் 13ஆவது இடத்தில் உள்ளது. கடந்த வருடத்தில் இங்கு சுமார் 205 கொலைகள் இடம்பெற்றுள்ளன.

2017ஆம் ஆண்டு அதிக குற்றச் செயல்கள் நடந்த நகரங்களின் பட்டியலில் மெக்சிகோவின் 12 நகரங்கள் முன்னிலையில் உள்ளன. ஆனால், ஐரோப்பிய, ஆசிய, ஆஸ்திரேலிய மற்றும் கனடா நகரங்கள் ஆபத்தான நகரங்கள் பட்டியலில் இடம் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like