நவாஸ் ஷெரீப் மீது- செருப்பு வீச்சு!!

பாகிஸ்தான் முன்னாள் தலைமை அமைச்சர் நவாஸ் ஷெரீப் மீது கூட்டத்தில் இருந்த ஒருவர் செருப்பை வீசினார். அது அவரது மார்பில் பட்டு விழுந்தது என்று ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

லாகூரில் நடைபெற்ற கருத்தரங்கில் பேசிக் கொண்டிருந்த நவாஸ் மீதே, அவருக்கு எதிராக கோசம் எழுப்பிய நபர் தான் அணிந்திருந்த செருப்பைக் கழற்றி வீசினார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அந்த நபரைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்தனர். அதனைத் தொடர்ந்தும் நவாஸ் தனது பேச்சை நிறுத்தாமல் தொடர்ந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

You might also like