பத­வி­யைக் காப்­பாற்ற அந்­த­ரப்­ப­டும் அனந்தி!!

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தால், தனது மாகாண சபை உறுப்­பி­னர் பதவி பறி­போ­கா­மல் இருப்­ப­தற்கு, வடக்கு மாகாண சபை அமைச்­சர் திரு­மதி அனந்தி சசி­த­ரன், தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் உத­வியை நாடி­யுள்­ளார்.

இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் சார்­பில் 2013ஆம் ஆண்டு வடக்கு மாகா­ண­ச­பைத் தேர்­த­லில் திரு­மதி அனந்தி சசி­த­ரன் போட்­டி­யிட்­டி­ருந்­தார். இவ­ரைக் கட்­சி­யி­லி­ருந்து நீக்­கு­வ­தாக, கடந்த 17ஆம் திகதி இடம்­பெற்ற இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் மையக் குழுக் கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­டது.

கட்­சி­யி­லி­ருந்து நீக்­கப்­ப­டு­வ­தால் அவ­ரது மாகா­ண­சபை உறுப்­பி­னர் பத­வி­யும் பறிக்­கப்­ப­ட­லாம். இத­னைத் தடுப்­ப­தற்­காக தேர்­தல்­கள் ஆணைக்­கு­ழு­வின் தலை­வர் மகிந்த தேசப்­பி­ரி­யவை, திரு­மதி அனந்தி சசி­த­ரன் நாடி­யுள்­ளார்.
பத­வி­யைக் காப்­பாற்­று­வ­தற்கு நீதி­மன்­றத்தை நாடு­வ­து­தான் ஒரே வழி என்று தேர்­தல்­கள் ஆணைக்­குழு பதி­ல­ளித்­துள்­ளது.

இது தொடர்­பில் திரு­மதி அனந்தி சசி­த­ர­னின் கருத்தை அறி­வ­தற்­காக அவ­ரது அலை­பே­சிக்கு அழைப்பு மேற்­கொண்­ட­போ­தும், அவர் பதி­ல­ளிக்­க­வில்லை.

You might also like