கூட்டமைப்பு உறுப்பினர்களின் சத்திரப்பிரமாணம் புதன்கிழமை!!

மூன்று இடங்­க­ளில் நடத்த ஏற்­பாடு

உள்­ளூ­ராட்­சித் தேர்­த­லில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசி­யக் கூட்­ட மைப்­பின் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­க­ளின் சத்­தி­ய­ப்பி­ர­மாண நிகழ்வு நாளை மறு­தி­னம் புதன் கிழமை நடை­பெ­ற­வுள்­ளது என்று கூட்­ட­மைப்­பின் பேச்­சா­ளர் எம்.ஏ.சுமந்­தி­ரன் தெரி­வித்­தார்.

உள்­ளூ­ராட்சி சபை­கள் எதிர்­வ­ரும் 20ஆம் திக­தி­யி­லி­ருந்து செயற்­ப­ட­வுள்­ளன. அதற்கு முன்­ன­தாக உறுப்­பி­னர்­கள் சத்­தி­யப்­பி­ர­மா­ணம் மேற்­கொள்­ள­வேண்­டும்.

அதற்கு அமை­வாக நாளை மறு­தி­னம் புதன்­கி­ழமை, யாழ்ப்­பா­ணம், வவு­னியா, மட்­டக்­க­ளப்­பில் இந்­தச் சத்­தி­யப் பிர­மாண நிகழ்­வு­கள் நடை­பெ­ற­வுள்­ளன.

You might also like