உணவு ஒவ்வாமை : 30 பேர் தொடர்ந்தும் மருத்துவமனையில்!!

ஊர்­கா­வற்றுறை மெரிஞ்­சி­மு­னைப் பிர­தே­சத்­தில் தேவா­ல­யத்­தில் வழங்­கப்­பட்ட உணவை உண்ட 109பேர் ஊர்­கா­வற்றுறை மருத்துவமனையில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

அவர்­க­ளில் 75 பேர் வரை­யில் நேற்று மாலையே வீடு திரும்­பி­னர். உணவு ஒவ்­வா­மை­யால் இவர்­கள் பாதிக்­கப்­பட்­டி­ருக்­க­லாம் என்று வைத்­தி­ய­சா­லைத் தரப்­புக்­கள் தெரி­வித்­தன.

ஊர்­கா­வற்­துறை மெரிஞ்­சி­மு­னைப் பிர­தே­சத்­தில் தேவா­ல­யத்­தில் நேற்­று­முன்­தி­னம் பெரு­நாள் இடம்­பெற்­றது. கலந்­து­கொண்ட பக்­கத்­தர்­க­ளுக்கு உணவு வழங்­கப்­பட்­டது. இவற்­றைச் சாப்­பிட்­ட­வர்­க­ளில் 109பேர் மயக்­கம் மற்­றும் வாந்­தி­பேதி கார­ண­மாக ஊர்­கா­வற்­துறை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர்.

இவர்­க­ளில் 52 பெண்­கள், 36 ஆண்­கள், 21 சிறு­வர்­கள் உள்­ள­டங்­கு­கின்­ற­னர். ஊர்­கா­வற்­துறை வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்ட கர்­பி­ணிப் பெண் ஒரு­வர் மேல­திக சிகிச்­சைக்­காக யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லைக்கு மாற்­றப்­பட்­டார்.

உணவு ஒவ்­வா­மை­யி­னால் இந்த நிலமை ஏற்­பட்­டி­ருக்­க­லாம் என்று ஊர்­கா­வற்­துறை வைத்­தி­ய­சா­லைத் தரப்­புக்­கள் தெரி­வித்­தன. அத்­து­டன், தேவா­ல­யத்­தில் வழங்­கப்­பட்ட உணவை சுகா­தா­ரத்­து­றை­யி­னர் ஆய்­வுக்கு எடுத்­துச் சென்­றுள்­ள­னர்.

இந்­தச் சம்­ப­வம் தொடர்­பில் தேவா­லய குரு­மு­தல்­வர் பத்­தி­நா­தன் தெரி­வித்­தா­வது, எமது தேவா­ல­யத்­தின் பெரு­நாள் நேற்­று­முன்­தி­னம் இடம்­பெற்­றது. நேர்த்­திக் கடனை நிறை­வேற்­றும் வகை­யில் இரண்டு குடும்­பங்­கள், ஆல­யத்­துக்கு வருகை தந்த பக்­தர்­க­ளுக்கு உண­வினை வழங்­கி­னார்­கள். உண­வினை உண்­ட­வர்­க­ளில் பல­ருக்கு வாந்தி பேதி ஏற்­பட்­டுள்­ளது. உண­வி­னால்­தான் இது ஏற்­பட்­டது என்று மருத்­துவ அறிக்கை வர முன்­னர் எம்­மால் கூற­மு­டி­யாது.

பெரு­நா­ளில் ஐஸ்­கி­ரீம், சர்­பத் என்று பல பண்­டங்­க­ளை­யும் மக்­கள் சாப்­பிட்­ட­னர். இப்­பொது உண­வுப் பொதியை ஆய்­வுக்­காக சுகா­தா­ரப் பிரி­வி­னர் எடுத்­துச் சென்­றுள்­ள­னர் – என்­றார்.

இதே­வேளை வாந்­தி­பே­திக்கு உள்­ளாகி வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­டி­ருந்­த­வர்­க­ளில் பலர் நேற்று மாலை­யி­லேயே சிகிச்சை பெற்று வீடு திரும்­பிய நிலை­யில் தற்­போது 30 வரை­யா­னோரே சிகிச்சை பெற்று வரு­வ­து­டன் அவர்­க­ளின் உடல்­நி­லை­யும் முன்­னேற்­ற­மாக உள்­ளது என்று ஊர்­கா­வற்­துறை வைத்­தி­ய­சா­லைத் தரப்­புக்­கள் தெரி­வித்­தன.

எமது வைத்­தி­ய­சா­லை­யில் மூன்று மருத்­து­வர்­க­ளும் எட்டு தாதி­யர்­க­ளுமே கட­மை­யாற்­று­கின்­ற­னர். இந்த இட­ரின்­போது மக்­க­ளுக்கு முத­லு­தவி மற்­றும் சிகிச்­சையை வழங்­கு­வ­தில் பெரிய சவாலை எதிர்­கொண்­டோம் என்று வைத்­தி­ய­சா­லைத் தரப்­புக்­கள் குறிப்­பிட்­டன.

You might also like