இளைஞனின் சடலம் மீட்பு

ஏறாவூர்- பலாச்சோலைக் கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து இளைஞன் ஒருவரின் சடலம் நேற்று பொலிஸாரால் மீட்கப்பட்டது.

பலாச்சோலை முதலாவது குறுக்கு வீதியை சேர்ந்த 21 வயதான இளைஞனின் சடலமே மீட்கப்பட்டது.

அவரது வீட்டு அறையிலிருந்தே சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழப்புக்கான காரணம் தெரியாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

You might also like