வவுனியாவில் – அதிகாலை விபத்து!!

வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அருகேயுள்ள சுற்றுவட்ட வீதியில் இடம்பெற்ற பாரவூர்தியுடன் துவிச்சக்கரவண்டி மோதி விபத்துக்குள்ளானது. அதில் ஒருவர் காயமடைந்தார்.

இந்த விபத்து இன்று அதி காலை 5.30 மணியளவில் நடந்தது.
ஹோரவப்போத்தானை வீதியுடாக வவுனியா புதிய பேருந்து நிலையம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த துவிச்சக்கரவண்டி மீது கண்டி வீதியுடாக யாழ்ப்பாணம் நோக்கிப் பயணித்த பாரவூர்தி மோதியது.

இதில் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவர் காயமடைந்த நிலையில் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

You might also like