இனவாதத்தை வேரறுப்போம்!!

அம்­பா­றை­யைத் தொடர்ந்து கண்டி மாவட்­டத்­தின் சில பிர­தே­சங்­க­ ளில் இடம்­பெற்ற இன­ரீ­தி­யான வன்­செ­யல்­கள் நாட்­டின் அமை­திக்­குப் பங்­கத்தை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளன. முஸ்­லிம் இளை­ஞர்­க­ளால் சிங்­கள இளை­ஞர் ஒரு­வர் கொலை செய்­யப்­பட்­ட­தன் எதி­ரொ­லி­யாக இந்த இன­வன்­செ­யல்­கள் ஆரம்­ப­மா­ன­தா­கக் தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

முஸ்­லிம் மக்­க­ளுக்­குச் சொந்­த­மான வீடு­க­ளும், கடை­க­ளும் தீவைத்து எரிக்­கப்­பட்­டன. இன­வா­தக் கும்­பல்­க­ளின் தூண்­டு­த­லுக்கு அஞ்சி முஸ்­லிம் மக்­கள் கல­வ­ரப் பகு­தி­யி­லி­ருந்து தப்­பி­யோ­டி­னார்­கள் என்­றும் சொல்­லப்­ப­டு­கி­றது. கல­வ­ரம் இடம்­பெற்ற பிர­தே­சத்­தில் ஊர­டங்­குச் சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­தும் அள­வுக்கு அங்கு நிலைமை எல்லை மீறிக் காணப் பட்­டது. பாட­சா­லைக்­கும் விடு­முறை வழங்­கப்­பட்­டது. பதற்­ற­மான சூழ்­நிலை அங்கு நில­வு­வ­தால் மக்­கள் தமது வீடு­க­ளுக்­குள் முடங்க வேண்­டிய நிலை­யும் ஏற்­பட்­டது.

துற­வி­கள் துணை­போ­கக்­கூ­டாது

கல­வ­ரத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள் ஊர­டங்­குச் சட்­டத்­தை­யும் மீறி வன்­செ­யல்­க­ளில் ஈடு­பட்­ட­தால் ஏற்­க­னவே பாதிக்­கப்­பட்ட மக்­கள் பெரும் அச்­சத்­தில் ஆழ்ந்­தி­ருப்­ப­தைக் காண­மு­டிகிறது. கல­வ­ரத்­தில் ஈடு­பட்­ட­வர்­கள் கைது செய்­யப்­பட்­டுக் காவ­லில் வைக்­கப்­பட்­டி­ருந்த பொலிஸ் நிலை­யம் முன்­பா­கப் பெரும் ஆர்ப்­பாட்­டம் இடம்­பெற்­றுள்­ளது. ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­க­ளின் மத்­தி­யில் பௌத்த தேரர்­க­ளை­யும் துற­வி­க­ளை­யும் காண­மு­டிந்­தது.

அமை­தியை ஏற்­ப­டுத்த வேண்­டிய துற­வி­கள் கல­வ­ரத்­தில் ஈடு­பட்­ட­வர்­க­ளுக்­குச் சார்­பாக நடந்து கொண்­டமை ஏற்­கத்­தக்­க­தல்ல. நாட்­டில் அர­சி­யல் குழப்ப நிலை­யொன்று காணப்­ப­டும் தற்­கா­லத்­தில் இனக்­க­ல­வ­ரங்­கள் இடம்­பெ­று­கின்­றமை பெரும் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­தப்­போ­கின்­றது.

இன­வாத அர­சி­யல்­வா­தி­கள் இனக் கல­வ­ரங்­க­ளைக் கூடத் தமக்­குச் சார்­பா­கவே மாற்­றி­வி­டக் கூடி­ய­வர்­கள். கல­வ­ரங்­கள் இடம் பெறு­கின்­றமை முழு­நாட்­டுக்­கும் கேடு விளை­விக்­கக் கூடி­யது என்­ப­தை­யும் இவர்­கள் எண்­ணிப் பார்ப்­ப­தில்லை. குறு­கிய அர­சி­யல் இலா­பம் ஒன்­றையே இவர்­கள் இலக்­கா­கக் கொண்டு செயற்­ப­டு­கின்­ற­னர். முன்­பெல்­லாம் இனக்­க­ல­வ­ரம் என்­றால் சிறு­பான்­மைத் தமிழ் மக்­க­ளின் நினை­வு­தான் மன­தில் எழும்.

அந்த அள­வுக்கு நாட்­டில் தொடர்ந்து இடம்­பெற்ற இனக்­க­ல­வ­ரங்­க­ளால் மோச­மா­கப் பாதிக்­கப்­பட்­ட­வர்­கள் தமி­ழர்­கள்­தான். தொடர்ந்து இடம்­பெற்ற கொடிய போரும் தமி­ழர்­களை மோச­மா­கப் பாதித்­து­விட்­டது. அதன் தாக்­கத்­தில்­இருந்து அந்த மக்­கள் முழு­மை­யாக விடு­ப­ட­ வில்லை. இவ்­வா­றி­ருக்கத் தற்­போது சிறு­பான்மை முஸ்­லிம் மக்­க­ளுக்கு எதி­ரான வன்­செ­யல்­கள் இடம்­பெற்­றுள்­ளன. அவ­ச­ர­கால நிலையை அறி­விக்­கும் அள­வுக்கு நிலைமை மோச­மா­கி­யது.

கல­வ­ரத்­துக்­கான பின்­னணி

அண்­மை­யில் ஊட­கங்­க­ளில் வெளி­வந்த செய்­தி­யொன்று பெரும்­பான்­மை­யி­ன­ருக்கு உவப்­பா­ன­தாக இருக்­க­வில்லை. இலங்­கை­யின் பிறப்பு வீதம் முஸ்­லிம்­க­ ளுக்கு 12 வீதத்­துக்கு மேலா­க­வும், சிங்­க­ள­வர்­க­ளுக்கு 5.3 வீத­ மா­க­வும், தமி­ழர்­க­ளுக்கு அதி­கு­றை­வா­ன­தாக 1.2 சத­வீ­த­மா­க­வும் அவற்­றில் குறிப்­பி­டப்­பட்­டி ­ருந்­தன.

இதே ரீதி­யில் பிறப்பு வீதம் தொட­ரு­மா­னால் குறிப்­பிட்ட ஆண்­டு­க­ளின் பின்­னர் முஸ்­லிம்கள், சனத்­தொ­கை­யில் தம்­மை­யும் மிஞ்­சி­வி­டு­வார்­கள் என்ற அச்­சம் பெரும்­பான்­மை­யின மக்­க­ளின் மனங்­க­ளில் எழு­வது இயல்­பா­னதே. இதன் எதி­ரொ­லி­யா­கவே அம்­பா­றை­யில் உள்ள முஸ்­லிம் கடை­யொன்­றில் வழங்­கப்­பட்ட கொத்­து­ரொட்­டி­யில் கருத்­த­டைக்­கான மருந்து கலக்­கப்­பட்­ட­தா­கக் கூறி சிங்­கள இளை­ஞர்­கள் சிலர் கல­வ­ரத்­தில் ஈடு­பட்­ட­னர். பின்­னர் இன­வன்­செ­யல்­கள் அங்கு இடம்­பெற்­றன.

முஸ்­லிம் மக்­க­ளின் கடை­கள், வாக­னங்­கள், வீடு­கள் ஆகி­யன பெரும் அழி­வைச் சந்­தித்­தன. பின்­னர் கண்­டி­யி­லும் முஸ்­லிம் மக்­க­ளுக்கு எதி­ரா­கப் பெரும் கல­வ­ரங்­கள் இடம் பெற்­றுள்­ளன. அவர்­க­ளின் சொத்­துக்­க­ளுக்­கும் நாசம் விளை­விக்­கப்­பட்­டன. இந்­தக் கல­வ­ரங்­கள் கண்­டி­யு­டன் நின்­று­வி­டுமா? அல்­லது வேறு இடங்­க­ளுக்­கும் தொட­ருமா? என்­பதை இப்­போ­தைக்­குக் கூற­மு­டி­யாது.முஸ்­லிம் மக்­க­ளைப் பொறுத்­த­வ­ரை­யில் அவர்­கள் தமிழ் மொழி­யையே தமது தாய் மொழி­யா­கக் கொண்­டுள்­ள­னர்.

கிழக்கு மாகா­ணத்­தில் அவர்­கள் செறிந்து வாழ்­கின்ற போதி­லும் நாட்­டின் அனைத்­துப் பகு­தி­ளி­லும் பர­வ­லாக வாழ்ந்து வரு­கின்­ற­னர். தெற்­கைப் பொறுத்­த­வ­ரை­யில் சிங்­கள மக்­க­ளு­டன் இவர்­கள் இணைந்து வாழ்­வ­தைக் காண­மு­டி­கின்­றது. இத­னால் இவர்­க­ளுக்கு எதி­ரான கல­வ­
ரங்­கள் இடம்பெறும் போது இவர்­கள் அதிக பாதிப்­புக்­களை எதிர்­கொள்ள வேண்­டிய நிலை ­யில் உள்­ள­னர்.

தமிழ் – முஸ்­லிம் மக்­கள்
ஒற்­று­மை­யாக இருப்­பதை
இன­வா­தி­கள் விரும்­ப­வில்லை

முஸ்­லிம் அர­சி­யல்­வா­தி­க­ளில் பலர் அர­சு­டன் இணைந்து செயற்­ப­டு­கின்­ற­னர். அமைச்­சர்­க­ளா­க­வும் உள்­ள­னர். ஆனா­லும் கூட தமது இனத்­த­வர்­க­ளைக் காப்­பாற்­று­வ­தற்கு இவர்­க­ளால் முடி­ய­வில்லை. புலி­க­ளுக்கே அஞ்­சாத நாம் இந்த இன­வா­தி­க­ளுக்கு அஞ்­சு­வோமா? என வீர வச­னம் பேசு­வ­தற்கு மட்­டுமே இவர்­க­ளால் முடி­கின்­றது. தமி­ழர்­க­ளும், முஸ்­லிம்­க­ளும் ஒன்­றாக இணைந்து செயற்­ப­டு­வதை இன­வாத அர­சி­யல்­வா­தி­கள் ஒரு­போ­துமே விரும்­பி­ய­தில்லை.

இவர்­கள் இந்த இரண்டு இனத்­த­வர்­க­ளுக்­கு­ இ­டையே மோதல்­களை ஏற்­ப­டுத்­து­வ­தி­லேயே குறி­யாக இருந்­துள்­ள­னர். இதன் பலா­ப­லன்­கள் இப்­போது தெரி­கின்­றன.

இலங்­கை­யைப் பொறுத்த வரை­யில் எரி­பொ­ருள் தேவைக்­காக முஸ்­லிம் நாடு­க­ளையே நம்­பி­யுள்­ளது. இங்கு இடம்­பெ­று­கின்ற முஸ்­லிம்­க­ளுக்கு எதி­ரான இன­வாத வன்­செ­யல்­கள் அதில் பாதிப்பை ஏற்­ப­டுத்­துமாக அமைந்தால் அதி­லொன்­றும் வியப் பில்லை. நாடு இன வன்­செ­யல்­க­ளைத் தொடர்ந்து அனு­ம­திக்­கு­மா­னால் அதன் விளை­வு­கள் மோச­மா­ன­தாக மாறி­வி­டும்.

You might also like