சென். ஜோசப் கழகம்   கிண்­ணம் வென்­றது

சின்­னப் பண்­டி­வி­ரிச்­சான் புனித சவே­ரி­யார் விளை­யாட்­டுக் கழ­கம் நடத்­திய மடு மாந்தை மேற்கு கால்­பந்­தாட்­டக் கழ­கங்­க­ளுக்கு இடை­யி­லான தொட­ரில் அரிப்பு சென். ஜோசப் அணி சம்­பி­யன் கிண்­ணத்­தைச் சுவீ­க­ரித்­தது.

சின்­னப் பண்­டி­வி­ரிச்­சான் புனித சவே­ரி­யார் மைதா­னத்­தில் அண்­மை­யில் இந்த இறு­தி­யாட்­டம் நடை­பெற்­றது. இதில் சின்­னப் பண்­டி­வி­ரிச்­சான் சென். சேவி­யர் அணியை எதிர்த்து அரிப்பு சென். ஜோசப் அணி மோதி­யது.

ஆட்­டத்­தின் 10ஆவது நிமி­டத்­தில் அரிப்பு சென். ஜோசப் அணி­யின் வீரர் நிதுர் சன் தனக்கு கிடைத்த வாய்ப்பை சரி­யா­கப் பயன்­ப­டுத்தி முத­லா­வது கோலைப் பதி­வு­செய்­தார். முதல் பாதி­யின் முடி­வில் 1:0 என்ற கோல் கணக்­கில் சென். ஜோசப் அணி முன்­னிலை வகித்­தது.
இரண்­டா­வது பாதி­யாட்­டத்­தில் இரண்டு அணி­க­ளும் விடாப் போராட்­டத்தை வெளிப்­ப­டுத்­தின. கோல்­க­ளின் எண்­ணிக்­கை­யில் மாற்­றம் ஏற்­ப­ட­வில்லை.

முடி­வில் 1:0 என்ற கோல் கணக்­கில் வெற்­றி­பெற்று சம்­பி­யன் கிண்­ணத்­தைச் சுவீ­க­ரித்­தது சென். ஜோசப் அணி. ஆட்ட நாய­க­னாக அரிப்பு சென். ஜோசப் அணி­யின் நிதுர்­சன் தெரி­வா­னார். சிறந்த கோல் காப்­பா­ள­ராக சின்­னப் பண்­டி­வி­ரிச்­சான் சென். சேவி­யர் அணி­யின் ஏடோன் தெரி­வு­செய்­யப்­பட்­டார்.

You might also like